சுசானவோ
சுசானவோ என்பவர் ஷிண்டோ மதத்தில் கூறப்படும் கடல் மற்றும் புயல் ஆகியவற்றின் கடவுள் ஆவார்.[1] இவரது மனைவி பெயர் குஷினாதாகிமே.
சுசானவோ என்பவர் கதிரவ கடவுள் அமதெரசு மற்றும் நிலா கடவுள் சுக்குயோமி ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவார். இவர்கள் மூவரும் இசநாகியின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தனர். இசநாகி தன் வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், மூக்கைக் கழுவிய போது சுசானவும் பிறந்தனர்.
இசாநாகி சுசானவோவை விண்ணுலகை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டார். சுசானவோ இறுதியாக அமதெரசுவை சந்தித்து விடைபெற்றுச் செல்ல நினைத்தான். ஆனால் அமதெரசு அவரை நம்பவில்லை. இதனால் சுசானவோ தன்னை நிரூபிக்க்க ஒரு சவால் விடுத்தான். அந்த சவாலின் படி ஒருவர் மற்றவர் பொருட்களில் இருந்து கடவுள்களை உருவாக்க வேண்டும். சுசானவோவின் வாளின் மூலம் அமதெரசு மூன்று பெண் கடவுள்களை உருவாக்கினார். சுசானவோ அமதெரசுவின் அணிகலன் மூலம் ஐந்து ஆண் கடவுள்களை உருவாக்கினார், பிறகு அமதெரசு ஆண் கடவுள்கள் தன் அணிகலனில் இருந்து பிறந்த்தால் தனக்கே உரிமையானது என்றார். இதனால் இருவருக்கு��் சண்டை நடந்தது. முடிவில் அமதெரசு கோபத்துடன் அம-னோ-இவாடோ என்ற குகையில் மறைந்து கொண்டார். இதனால் உலகம் இருண்டது. இதற்கு தண்டனையாக சுசானவோ விண்ணகத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.
பிறகு சுசானவோ பூமியில் இசுமோ என்னும் பகுதிக்கு வந்தார். அங்கு இரு முதியவர்கள் இருந்தனர். அவர்கள் சுசானவோவிடம் தங்கள் எட்டு மகள்களில் ஏழு பேரை எட்டு தலையும் எட்டு வாலும் கொண்ட யமத்தோ-நோ-ஓரொச்சி என்ற வேதாளம் விழுங்கி விட்டாதகவும் எட்டாவது மகளான குஷினாதாகிமேவையும் இன்று விழுங்க வரப்போவதாகவும் கூறினர். சுசானவோ அவரை காப்பாற்றுவதாகவும் அதற்கு பதிலாக குஷினாதாகிமேயை தனக்கு மனைவியாகத் தர வேண்டும் என்று கூறினார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர். பிறகு குஷினாதாகிமேவை ஒரு சீப்பாக மாற்றி தன் தலையில் அணிந்து கொண்டார். அந்த வேதாளம் வந்த்து. சுசானவோ தன் வாளால் அந்த வேதாளத்தை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்தினார். ஆனால் அந்த வேதாளத்தின் வால் மட்டும் கடினமாக இருந்த்து. அதை சுசானவோ ஆராய்ந்து பார்த்தபோது அதன் உள்ளே ஒரு வாள் இருந்த்து. அந்த வாளின் பெயர் அம-நோ-முரகுமோ-நோ-சுருகி (விண்ணகத்தின் மேகங்களை சேர்க்கும் வாள்) அல்லது குசநாகி-நோ-சுருகி (புல்வெட்டும் வாள்).[2] பிறகு சுசானவோ குஷினாதாகிமேயை பழைய நிலைக்கு மாற்றி அவரை மணந்துகொண்டார்.
பிறகு சுசானவோ அமதெரசுவுடன் ஏற்பட்ட சண்டையை மறந்து சமாதானமானார். அதனால சுசானவோ அவருக்கு குசாநாகி-நோ-சுருகியை உடன்பாடு பரிசாக வழங்கினார். பிற்காலத்தில் அமதெரசு இந்த வாளை தன் வாரிசான நினிங்கிக்கு அளித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Basil Hall Chamberlain. The Kojiki: Records of Ancient Matters. பார்க்கப்பட்ட நாள் 27 December 2012.
- ↑ W. G. Aston, C.M.G. (1896). "Book I: The Age of the Gods". Supplement: Nihongi, chronicles of Japan from the earliest times to A.D. 697. Vol. Vol. I. London: Kegan Paul, Trench, Trübner & Co., Limited. pp. 52–53. பார்க்கப்பட்ட நாள் 27 December 2012.
{{cite book}}
:|volume=
has extra text (help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Susanoo பரணிடப்பட்டது 2011-05-18 at the வந்தவழி இயந்திரம், Encyclopedia of Shinto
- Susano-O no Mikoto, Kimberley Winkelmann, in the Internet Archive as of 5 December 2008
- Shinto Creation Stories: Sosa no wo in Izumo, Richard Hooker, in the Internet Archive as of 28 August 2006