உள்ளடக்கத்துக்குச் செல்

சீற்றா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேக்க நெடுங்கணக்கு
Αα அல்ஃபா Νν நியூ
Ββ பீற்றா Ξξ இக்சய்
Γγ காமா Οο ஒமிக்ரோன்
Δδ தெலுத்தா Ππ பை
Εε எச்சைலன் Ρρ உரோ
Ζζ சீற்றா Σσς சிகுமா
Ηη ஈற்றா Ττ உட்டோ
Θθ தீற்றா Υυ உப்சிலோன்
Ιι அயோற்றா Φφ வை
Κκ காப்பா Χχ கை
Λλ இலமிடா Ψψ இப்சை
Μμ மியூ Ωω ஒமேகா
அநாதையாய்
Ϝϝ டிகாமா Ϟϟ கோப்பா
Ϛϛ சிடீகுமா Ϡϡ சாம்பை
Ͱͱ ஹஈற்றா Ϸϸ உஷோ
Ϻϻ சான்

சீற்றா (Zeta, கிரேக்கம்: ζήτα) அல்லது சீட்டா (தமிழக வழக்கு) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஆறாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஏழு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான சயினிலிருந்தே (Zayin) சீற்றா பெறப்பட்டது. சீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து Z, சிரில்லிய எழுத்து З என்பனவாகும்.

பெயர்

[தொகு]

ஏனைய கிரேக்க எழுத்துகளைப் போல் இவ்வெழுத்து பினீசிய எழுத்தின் பெயரிலிருந்து தனது பெயரை எடுக்கவில்லை. பீற்றா, ஈற்றா, தீற்றா என்பன போன்ற ஒலியுடன் சீற்றா என்ற பெயரைப் பெற்றுள்ளது.

சீற்றா என்பது உரோம எழுத்து Zஐக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.

பயன்பாடுகள்

[தொகு]

எண்

[தொகு]

கிரேக்க எண்களில், அல்ஃபா, பீற்றா, காமா, தெலுத்தா, எச்சைலன் முதலியவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பெறுமானங்களைக் குறி்த்தாலும் சீற்றா என்பது வேறுபட்டு ஏழு என்ற பெறுமா���த்தையே குறிக்கிறது.[3] திகம்மா என்ற எழுத்தே ஆறு என்ற பெறுமானத்தை உடையது.[4]

கணிதம்

[தொகு]

கணிதத்தில் இரீமன் சீற்றாச் சார்பியத்தைக் குறிப்பதற்குச் சீற்றா பயன்படுத்தப்படுகின்றது.

வானியல்

[தொகு]

சீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
  2. கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
  3. கிரேக்க எண் முறைமைகள் (ஆங்கில மொழியில்)
  4. ["பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26. பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)]
  5. 2005-சீற்றாப் புயல் (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீற்றா&oldid=3862921" இலிருந்து மீள்விக்கப்பட்டது