சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி | |
---|---|
[[Image:|300px|center|]] | |
ஆண் உடற்கூறு | |
உள் உணர்வுத் தமனியின் ஆழ்ந்த கிளைகள. (சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி இடது மையத்தில் குறியிடப்பட்டுள்ளது.) | |
இலத்தீன் | glandulæ bulbourethrales |
கிரேயின் | |
தமனி | சிறுநீர்க்குழாய் மொட்டின் தமனி |
முன்னோடி | சிறுநீரகப் பாலின எலும்பு அறை |
ம.பா.தலைப்பு | Bulbourethral+Glands |
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (bulbourethral gland) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும். இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.
உடற்கூறு
[தொகு]சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன.[1] இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.
பயன்கள்
[தொகு]பாலுறவுத் தூண்டலின்போது இரு சுரப்பிகளும் விந்து தள்ளலுக்கு முன்னர் முன்பீச்சுப் பாய்மம் என்ற தெளிவான நிறமற்ற நீர்மத்தை சுரக்கின்றன. இந்த நீர்மம் சிறுநீர்க் குழாயில் விந்தணு எளிதாக பயணித்திட உயவூட்டுகிறது. இந்தப் பாதையிலுள்ள சிறுநீரையும் தூசுகளையும் நீக்கிடவும் உதவுகிறது.[2]
படிமங்கள்
[தொகு]-
சிறுநீர்ப் பை, ஆண்குறி மற்றும் சிறுநீர்க் குழாயை காட்டும் வெட்டுத் தோற்றம்.
-
ஆண்குறியின் அமைப்பு
-
ஆண் இடுப்பறை அவயங்கள் - வலப்புறக் காட்சி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gray's Anatomy, 38th edn, p 1861
- ↑ A neglected gland: a review of Cowper's gland