சிறிய இந்தியக் கீரி
சிறிய இந்தியக் கீரி | |
---|---|
பன்னா தேசிய பூங்காவில் சிறிய இந்தியக் கீரி | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | உர்வா
|
இனம்: | உ. ஆரோபங்டேட்டா
|
இருசொற் பெயரீடு | |
உர்வா ஆரோபங்டேட்டா (கோட்ஜ்சன், 1836) | |
இந்திய சிறு கீரி பரம்பல்[1] | |
வேறு பெயர்கள் | |
மங்குசுதா ஆரோபங்டேட்டா |
சிறிய இந்தியக் கீரி (Small Indian mongoose-உர்வா ஆரோபங்டேட்டா) ஈராக் மற்றும் வட இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு கீரி சிற்றினமாகும் இது பல கரிபியன் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]மங்கசுடா அரோபங்டாட்டா என்பது மத்திய நேபாளத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு கீரி மாதிரி 1836ஆம் ஆண்டில் பிரையன் காக்டன் கோட்சனால் முன்மொழியப்பட்ட விலங்கியல் பெயர் ஆகும்.[2] 19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளில், பல விலங்கியல் மாதிரிகள் விவரிக்கப்பட்டன.
- 1845ஆம் ஆண்டில் எட்வர்ட் பிளைத் முன்மொழிந்த மங்கசுதா பாலிப்பெசு ஆப்கானித்தானின் காந்தகாரில் காணப்பட்ட கீரியினை அடிப்படையாகக் கொண்டது.[3]
- 1965ஆம் ஆண்டில் ஆர். கே. கோசால் முன்மொழியப்பட்ட கெர்பெசுடெசு பலசுட்ரிசு என்பது இந்தியாவில் கொல்கத்தாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சதுப்பு நிலத்தில் சேகரிக்கப்பட்ட ஒரு வயது வந்த ஆண் கீரி ஆகும்.[4]
சிறிய இந்தியக் கீரி பின்னர் கெர்பெசுடெசு என்ற பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டது. அனைத்து ஆசியக் கீரிகளும் இப்போது உர்வா பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[5]
சிறிய இந்தியக் கீரி ஒரு காலத்தில் சாவகம் கீரி (கெ. சாவனிகசு) ஒரு துணையினமாகக் கருதப்பட்டது. 18 சிறிய இந்திய மற்றும் சாவகம் கீரிகளின் முடி மற்றும் திசு மாதிரிகளின் மரபணு பகுப்பாய்வு இவை இரண்டு உயிரினக் கிளைகளை உருவாக்குகின்றன. இது இவை தனித்துவமான இனங்கள் என்பதை வெளிப்படுத்தியது.[6]
சிறப்பியல்புகள்
[தொகு]சிறிய இந்தியக் கீரியின் உடல் மெல்லியதாகவும், தலை ஒரு கூர்மையான மூக்குடன் நீளமாகவும் உள்ளது. தலை மற்றும் உடலின் நீளம் 509-671 மி.மீ. ஆகும். காதுகள் சிறியவை. கால்கள் ஐந்து கால்விரல்களுடன் நீண்ட நகங்களைக் கொண்டுள்ளன. ஆண் கீரிகள் பரந்த தலை மற்றும் பெரிய உடல்களைக் கொண்டுள்ளன. பாலினங்கள் அளவில் வேறுபடுகின்றன.[7]
இது பெரும்பாலும் தொடர்புடைய இந்தியச் சாம்பல் கீரியிலிருந்து (யு. எட்வார்ட்சி) இதன் சற்றே சிறிய அளவு மூலம் வேறுபடுத்தப்படலாம். உலகெங்கிலும் உள்ள தீவுகளில் எண்ணிக்கை அதிகரித்ததோடு பாலியல் வேறுபாடும் உருவத்தில் அதிகரித்துள்ளது. இது இவற்றின் வரம்பின் கிழக்கில் உள்ள மக்களை ஒத்திருக்கிறது. இங்கு இவற்றுக்குச் சுற்றுச்சூழல் போட்டியாளர்கள் இல்லை.[8] அறிமுகப்படுத்தப்பட்ட கீரிகள், மரபணு சறுக்கல் மற்றும் தனிமைப்படுத்தல் காரணமாக மரபணு பன்முகப்படுத்தல் ஏற்பட்டுள்ளன.[9]
பரவலும் வாழிடமும்
[தொகு]சிறிய இந்தியக் கீரி, ஈராக், தென்கிழக்கு ஈரான், ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, நேபாளம், பூட்டான், வங்களாதேசம் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இது பல ஐரோப்பிய நாடுகள், கரீபியன் கடலில் உள்ள தீவுகள், இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்கள் மற்றும் தெற்கு சப்பானில் உள்ள ஒகினாவா ஆகிய தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது 2,100 மீ (6,900 ) உயரம் வரை உள்ளப் பகுதிகளில் வாழ்கிறது.[1]
ஈராக்கில், சிறிய இந்தியக் கீரி டைகிரிசு-யூப்ரடீசு ஆற்றின் வண்டல் சமவெளிகளில் வாழ்கிறது. இங்கு இது ஆற்றுச் செடிகள், பயிர் வயல்கள் மற்றும் பழத்தோட்டங்களில் வாழ்கிறது. இது கம்மர் சதுப்பு நிலங்களிலும் காணப்பட்டது .
ஈரானில், குறிப்பாக கெர்மான் மாகாணம் உள்ளிட்ட தெற்கு மற்றும் கிழக்கில் உள்ள ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிய இந்தியக் கீரி பதிவு செய்யப்பட்டுள்ளது; .[10]
பாக்கித்தானில், இது போத்தோகர் பீடபூமி, சியால்கோட் மாவட்டம், தென்கிழக்கு ஆசாத் சம்மு-காசுமீர் மற்றும் மார்கல்லா மலைத் தேசியப் பூங்கா ஆகியவற்றில் காணப்படுகிறது.[11][12][13][14]இந்தியாவில், இது மத்தியப் பிரதேசத்தின் வனப்பகுதிகள், பன்னா புலிகள் காப்பகம், குனா மாவட்டம் மற்றும் காந்தி சாகர் சரணாலயம் ஆகியவற்றில் காணப்பட்டது.[15]
2016ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஆணையம் சிறிய இந்தியக் கீரியினை ஆக்கிரமிப்பு மற்றும் அன்னிய இனங்களின் வருடாந்திரப் பட்டியலில் சேர்த்தது.[16]
கரீபியனில் அறிமுகம்
[தொகு]1872ஆம் ஆண்டில், கரும்புத் தோட்டங்களில் கருப்பு (ராட்டசு ராட்டசு மற்றும் பழுப்பு எலிகள் (ரா. நார்வெஜிகசு) ஆகியவற்றைக் கட்டுப்படுத்த இந்தியாவிலிருந்து ஒன்பது சிறிய இந்தியக் கீரி ஜமேக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன. இவை சில மாதங்களுக்குள் மீண்டும் இனப்பெருக்கம் செய்தன.[17] 1800களில், ஹவாய் மற்றும் பிஜி போன்ற பல பசிபிக் தீவுகளில் கரும்புத் தோட்டங்கள் நிறுவப்பட்டன. கரும்பு எலிகளை ஈர்த்தது, இதனால் பரவலான பயிர் இழப்பு ஏற்பட்டது. 1870ஆம் ஆண்டில் டிரினிடாட் சிறிய இந்தியக் கீரிகளை அறிமுகப்படுத்தப்பட்டன. எலிகளைக் கட்டுப்படுத்தும் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை. 1870 முதல், பயிர்ச் சேதத்தைக் குறைக்க கியூபா, லா எசுப்பானியோலா, ஜமைக்கா, புவேர்ட்டோ ரிக்கோ, செயின்ட் க்ரோயிக்சு, யு. எசு. விர்ஜின் தீவுகள் உள்ளிட்ட பெரிய அண்டிலிசு தீவுகள் அனைத்திலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.[18][19] இந்த அறிமுகம் பூர்வீக விலங்கினங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் உள்ளூர் ஊர்வனவற்றின் எண்ணிக்கை (பச்சைப் பேரோந்தி-இகுவானா இகுவானா) வெகுவாகக் குறைந்தது. தரையில் கூடமைத்து முட்டையிடும் பறவைகள், நிலப்பரப்பு இகுவானா மற்றும் கூட்டியாக்கள் மற்றும் சோலெனோடன்கள் போன்ற சிறிய பாலூட்டிகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.[18] பல கரீபியன் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட சிறிய இந்தியக் கீரி பூர்வீகப் பாம்புகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இப்போது தொலைதூரக் கடல் தீவுகளில் மட்டுமே உள்ளன. தூய குரோயிக்சு தீவில் குறைந்தது ஒரு பாம்பு சிற்றினமாவது இப்போது அழிந்திருக்கலாம்.
அவாய்த் தீவில் அறிமுகம்
[தொகு]ஜமேக்காவின் சிறிய இந்தியக் கீரி குட்டிகள் மற்ற தீவுகளில் உள்ள தோட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.[17]அறிமுகப்படுத்தப்பட்ட கீரிகள், எலிகள் மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருந்தன என்று 1900களின் முற்பகுதியில் பதிவுகள் கூறின.[20] இருப்பினும், எந்தப் பாலூட்டி வேட்டையாடுபவர்களும் இல்லாத நிலையில் பூர்வீகப் பறவைகளையும் இக்கீரிகள் வேட்டையாடின. முட்டைகள் மற்றும் ஆமைக் குஞ்சுகளை உட்கொள்வதற்காகப் பச்சை கடல் ஆமைகளின் கூடுகளையும் கீரி சோதனையிட்டன.[21]
ஒகினாவாவில் அறிமுகம்
[தொகு]சிறிய இந்தியக் கீரி 1910ஆம் ஆண்டில் ஒகினாவா தீவிலும், 1979ஆம் ஆண்டில் அமாமி ஓசிமா தீவிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நச்சு குழி விரியன் புரோட்டோபோத்ரோப்சு பிளாவோவிரிடிசு மற்றும் பிற 'தீங்குயிரிகளைக்' கட்டுப்படுத்துகிறது.[22]
டால்மேசியன் தீவுகளில் அறிமுகம்
[தொகு]சிறிய இந்தியக் கீரி 1910ஆம் ஆண்டில் ஆத்திரிய-அங்கேரிய விவசாய அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் மல்ஜெட் தீவில் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, ஏழு ஆண் நான்கு பெண் கீரிகளும் கோவேடாரிக்கு அருகே விடுவிக்கப்பட்டு, 1921 மற்றும் 1927க்கு இடையில் கொர்சுலா, பெல்ஜெசாக், ப்ராக் மற்றும் சோல்டா ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. கொம்பு விரியன் (வைபரா அம்மோடைட்சு) எண்ணிக்கை 20 ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்தது. மேலும் கீரிகள் வசிக்கும் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் வீட்டுக் கோழி வேட்டையாடத் தொடங்கின.[23] 1970ஆம் ஆண்டில், கீரி கவாரில் வசித்து விரைவாகப் பரவியது. இது பராக் மற்றும் சோல்டாவில் உயிர்வாழவில்லை. ஆனால் இது சியோவோ வாழ்ந்தது. கீரி தீங்குயிரியாக கருதப்படுகிறது. ஆனால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்டுப்பன்றிகள் இதன் எண்ணிக்கையினைக் குறைக்க உதவவில்லை.[24]
நடத்தையும் சூழலியலும்
[தொகு]சிறிய இந்தியக் கீரி சுமார் 12 வெவ்வேறு குரல் ஓசைகளை வெளியிடுகிறது.[25]
உணவு
[தொகு]பாக்கிதானில், சிறிய இந்தியக் கீரி முதன்மையாகத் தட்டாரப்பூச்சி, வெட்டுக்கிளி, பிள்ளைப்பூச்சி, தரை வண்டுகள், மூலைவிட்ட பூச்சிகள் மற்றும் எறும்புகள் உள்ளிட்ட பல பூச்சிகளை உணவாகக் கொள்கிறது. இது சிறிய பாண்டிகூட் எலி (பாண்டிகோட்டா பெங்காலென்சிசு), வீடுகளில் காணப்படும் எலி, ஆசிய மூஞ்சூறு உள்ளிட்ட சிறு பாலூட்டிகளையும் வேட்டையாடுகிறது.[12] பிர் லாசுரா தேசியப் பூங்காவில் சேகரிக்கப்பட்ட எச்சங்கள், கருப்பு எலி (ராட்டசு ராட்டசு) சிறிய நீர்நிலவாழ் உயிரினங்கள், ஊர்வன, சிறிய பறவைகள், புல் விதைகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உணவாகக் கொண்டது கண்டறியப்பட்டது.[13] குசராத்தில் எலிகளின் வளைகளுக்கு அருகில் காணப்படும் மலத் துகள்களில் மீன் செதில்கள், இறகுகளும், திசம்பர் மாதத்தில் பூச்சிகளின் எச்சங்களும் வசந்த காலத்தில் தாவரப் பொருட்களும் இருந்தன.[26]
நோய்கள்
[தொகு]வடக்கு ஒகினாவா தீவில் உள்ள சிறிய இந்தியக் கீரிகள் லெப்டோசுபிரா மற்றும் எசரிக்கியா கோலி எதிர்உயிர்மி எதிர்ப்பு விகாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளன.[27][28]சிறிய இந்தியக் கீரி புவேர்ட்டோ ரிக்கோவில் வெறிநாய்க்கடி நோய் திசையன் ஆகும். ஆனால் மனிதர்களுக்குப் பரவுவது குறைவாக உள்ளது.[29]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Jennings, A.; Veron, G. (2016). "Herpestes auropunctatus". IUCN Red List of Threatened Species 2016: e.T70204120A70204139. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T70204120A70204139.en. https://www.iucnredlist.org/species/70204120/70204139. பார்த்த நாள்: 26 November 2021.
- ↑ Hodgson, B. H. (1836). "Synoptical description of sundry new animals, enumerated in the Catalogue of Nipalese Mammals". Journal of the Asiatic Society of Bengal 5 (52): 231–238. https://archive.org/details/journalofasiatic05asia/page/231.
- ↑ Blyth, E. (1845). "Additions and corrections to Rough notes on the Zoology of Candahar and the neighbouring districts by Thomas Hutton". Journal of the Asiatic Society of Bengal 15 (170): 169–170. https://archive.org/details/journalofasiatic15asia/page/169.
- ↑ Ghose, R. K. (1965). "A new species of mongoose (Mammalia: Carnivora: Viverridae) from West Bengal, India". Proceedings of the Zoological Society of Calcutta 18 (2): 173–178.
- ↑ "Urva auropunctata (Hodgson, 1836)". ASM Mammal Diversity. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
- ↑ Veron, G.; Patou, M.L.; Pothet, G.; Simberloff, D.; Jennings, A.P. (2007). "Systematic status and biogeography of the Javan and small Indian mongooses (Herpestidae, Carnivora)". Zoologica Scripta 36 (1): 1–10. doi:10.1111/j.1463-6409.2006.00261.x. https://www.researchgate.net/publication/230280673.
- ↑ Nellis, D. W. (1989). "Herpestes auropunctatus". Mammalian Species (342): 1–6. doi:10.2307/3504091.
- ↑ Simberloff, D.; Dayan, T.; Jones, C.; Ogura, G. (2000). "Character displacement and release in the small Indian mongoose, Herpestes javanicus". Ecology (journal) 81 (8): 2086–2099. doi:10.2307/177098. http://www.tau.ac.il/lifesci/zoology/members/dayan_files/articles/javanicus.pdf.
- ↑ Thulin, C.G.; Simberloff, D.; Barun, A.; McCracken, G.; Pascal, M.; Anwarul Islam, M. (2006). "Genetic divergence in the small Indian mongoose (Herpestes auropunctatus), a widely distributed invasive species". Molecular Ecology 15 (13): 3947–3956. doi:10.1111/j.1365-294X.2006.03084.x. பப்மெட்:17054495.
- ↑ Karami, M.; Hutterer, R.; Benda, P.; Siahsarvie, R.; Kryštufek, B. (2008). "Annotated check-list of the mammals of Iran". Lynx. Nova 39 (1): 63–102.
- ↑ Mahmood, T.; Nadeem, M.S. (2011). "Population estimates, habitat preference and the diet of small Indian mongoose (Herpestes javanicus) in Potohar Plateau, Pakistan". Pakistan Journal of Zoology 43 (1): 103–111.
- ↑ 12.0 12.1 Mahmood, T.; Adil, A. (2017). "Diet composition of small Indian mongoose (Herpestes javanicus) varies seasonally in its native range". Animal Biology 67 (1): 69–80. doi:10.1163/15707563-00002516.
- ↑ 13.0 13.1 Akrim, F.; Mahmood, T.; Nadeem, M.S.; Qasim, S.; Andleeb, S.; Fatima, H. (2019). "Distribution, dietary breadth and niche overlap between two sympatric mongoose species inhabiting Pir Lasura National Park, Azad Jammu and Kashmir, Pakistan". Pakistan Journal of Zoology 51 (4): 1497–1507. doi:10.17582/journal.pjz/2019.51.4.1497.1507.
- ↑ Hira, F.; Mahmood, T.J.; Sakhawat, A.; Faraz, A.; Muhammad, F.; Shaista, A. (2020). "Sympatric mongoose species may opt for spatial adjustments to avoid feeding competition at Margalla Hills National Park Islamabad, Pakistan". Wildlife Biology 2020 (2): wlb.00654. doi:10.2981/wlb.00654.
- ↑ Shekar, K.S. (2003). "The status of mongooses in central India". Small Carnivore Conservation (29): 22–23.
- ↑ "Adopting a list of invasive alien species of Union concern pursuant to Regulation (EU) No 1143/2014 of the European Parliament and of the Council" (PDF).
- ↑ 17.0 17.1 Espeut, W. B. (1882). "On the acclimatization of the Indian mongoose in Jamaica". Proceedings of the Zoological Society of London (November): 712–714. https://archive.org/details/proceedingsofgen82busi/page/712/mode/2up.
- ↑ 18.0 18.1 Seaman, G. A.; Randall, J. E. (1962). "The Mongoose as a Predator in the Virgin Islands". Journal of Mammalogy 43: 544–546. doi:10.2307/1376922. https://archive.org/details/sim_journal-of-mammalogy_1962-11_43_4/page/544.
- ↑ Roy, S. (2020). "Herpestes auropunctatus (small Indian mongoose)". Invasive Species Compendium. CAB International. Archived from the original on 4 February 2020. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
- ↑ Kim, A. "Mongooses in Hawaii Newspapers". University of Hawai'i at Manoa Library. Archived from the original on 1 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 22 December 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Mongoose". Hawaii Invasive Species Council. 2013. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
- ↑ Yagihashi, T.; Seki, SI.; Nakaya, T.; Nakata, K.; Kotaka, N. (2021). "Eradication of the mongoose is crucial for the conservation of three endemic bird species in Yambaru, Okinawa Island, Japan". Biological Invasions 23: 2249–2260. doi:10.1007/s10530-021-02503-w.
- ↑ Tvrtkovic, N.; Kryštufek, B. (1990). "Small Indian mongoose Herpestes auropunctatus on the Adriatic islands of Yugoslavia". Bonner Zoologische Beiträge 41 (1): 3–8. https://www.zobodat.at/pdf/Bonner-Zoologische-Beitraege_41_0003-0008.pdf.
- ↑ Frković, A. (2000). "Mungos na otoku Mljetu (uz 90. godišnjicu introdukcije)". Šumarski List 11 (124): 693–698. http://www.sumari.hr/sumlist/pdf/200006930.pdf.
- ↑ Mulligan, B. E.; Nellis, D. W. (1973). "Sounds of the Mongoose Herpestes auropunctatus". The Journal of the Acoustical Society of America 54 (1): 320. doi:10.1121/1.1978275. Bibcode: 1973ASAJ...54S.320M.
- ↑ Dabholkar, Y.; Devkar, R. (2020). "Diurnal activity and diet of Small Indian Mongoose Urva auropunctata on the outskirts of Vadodara, Gujarat, India". Small Carnivore Conservation 58: e58008. http://nebula.wsimg.com/bbf1df6e614549256fb75040df625a00?AccessKeyId=35E369A09ED705622D78&disposition=0&alloworigin=1.
- ↑ Ishibashi, O.; Ahagon, A.; Nakamura, M.; Morine, N.; Taira, K.; Ogura, G.; Nakachi, M.; Kawashima, Y. et al. (2006). "Distribution of Leptospira spp. on the Small Asian Mongoose and the Roof Rat inhabiting the northern part of Okinawa Island". Japanese Journal of Zoo and Wildlife Medicine 11 (1): 35–41. doi:10.5686/jjzwm.11.35.
- ↑ Nakamura, I.; O., T.; Sakemi, Y. (2011). "The Prevalence of Antimicrobial-Resistant Escherichia coli in two species of invasive alien mammals in Japan". Journal of Veterinary Medical Science 73 (8): 1067–1070. doi:10.1292/jvms.10-0525. பப்மெட்:21467758.
- ↑ "Distribution of major rabies virus variants among mesocarnivores in the United States and Puerto Rico, 2008 to 2015". 2017.