சிப்ரா ஆறு
சிப்ரா ஆறு (Shipra) இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் உற்பத்தி ஆகும் வற்றாத ஆறுகளில் ஒன்றாகும். சிப்ரா ஆறு, இந்தூர் மாவட்டத்தின் உஜ்ஜைனில் விந்திய மலைதொடரில் உற்பத்தியாகி மால்வா பீடபூமி வழியாக 120 கிலோ மீட்டர் வரை பாய்ந்து, பின்னர் மத்தியப் பிரதேசம் – இராஜஸ்தான் எல்லை மாவட்டமான மண்டசௌர் மாவட்டத்தில் சம்பல் ஆற்றில் கலக்கிறது. [1]
சிறப்புகள்
[தொகு]வற்றாத சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, ப���னித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. [2] உச்சினி மகாகாலேஸ்வரர் கோயில் அருகே பாயும் புனித ஆறான சிப்ரா ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
உஜ்ஜைன் மகாகாலேஸ்வரர் கோயில் அருகில் பாயும் வற்றாத ஆறான சிப்ரா ஆறு கங்கை, காவேரி போன்று, புனித ஆறுகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
கிருட்டிணன், பலராமன் மற்றும் குசேலர் படித்த குருகுலமான சாந்திபனி முனிவரின் ஆஸ்ரமம் சிப்ரா ஆற்றாங்கரையில் இருந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shipra River". Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2016-09-05.
- ↑ Sacred river Shipra
வெளி இணைப்புகள்
[தொகு]- Holly Bath in Shipra River Ujjain At Somvarti Amavasya (India News). Published on 5 December 2013.