சாவந்த்வாடி
சாவந்த்வாடி | |
---|---|
வட்டம் | |
அடைபெயர்(கள்): சுந்தர்வாடி | |
ஆள்கூறுகள்: 16°00′N 73°45′E / 16°N 73.75°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | சிந்துதுர்க் |
ஏற்றம் | 111.86 m (366.99 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 47,921 |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 416510 |
தொலைபேசிக் குறியீடு | 91(0)2363 |
வாகனப் பதிவு | MH-07 |
இணையதளம் | www |
சாவந்த்வாடி (Sawantwadi) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் அமைந்துள்ள சவந்த்வாடி தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது முன்னர் மராத்தியர்களின் சாவந்த்வாடி போன்சலே அரச குலத்தால் ஆளப்பட்ட சாவந்த்வாடி சமஸ்தானத்தின் தலைநகராக இருந்தது.
இது மகாராட்டிராவின் கோவா எல்லைக்கு அருகிலுள்ள கொங்கண் பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]மாநிலத்தின் ஆளும் குடும்பமான கெம்-சாவந்த்களின் குடும்பப்பெயரால் சாவந்த்வாடி என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. சாவந்த்-போன்சலே குடும்பத்தினர் சாவந்த்வாடியின் ஆட்சியாளர்களாக இருந்தனர். அவர்கள் 1857, சிப்பாய்க் கிளர்ச்சியிலும் பங்கேற்றனர்.
இது சாவந்த்வாடி வட்டத் தலைமையகமாகவும் உள்ளது. இது ஒரு நகராட்சி மன்றத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு உள்ளூர் குடிமை அமைப்பாகும்.
பொருளாதாரம்
[தொகு]சாவந்த்வாடி, கையால் செய்யப்பட்ட அட்டைகளில் வண்ணமயமாக வரையப்படும் மரக் கைவினைப்பொருட்களுக்கு பெயர் பெற்றது. இது ஒரு முக்கிய சுற்றுலா அம்சமாகவும் மாறி வருகிறது.
இந்த நகரத்தின் மையம் சாவந்த்வாடியின் மையத்தில் உள்ள ஒரு ஏரியாகும். இது "மோதி தலாவ்" என்று அழைக்கப்படுகிறது.
மொழி
[தொகு]மால்வானி மொழி சவந்த்வாடியில் ஆதிக்கம் செலுத்தும் பேச்சு மொழியாகும். மாநில மொழியான மராத்தியும் இங்கு பரவலாகப் பேசப்படுகிறது. மேலும் பள்ளிகளில் கற்பிக்கபடுகிறது. கோவாவின் கொங்கணி சற்று புரிந்து கொள்ளப்பட்டாலும் செயல்பாட்டில் இல்லை. சமூக தொடர்புகளில் இந்தி மற்றும் ஆங்கிலம் பயன்படுத்தப்படுகின்றன. நகரத்தின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்களாக, இரு���்கின்றனர். அதைத் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லீம்களும், கிறிஸ்தவ மக்களும் உள்ளனர்.
போக்குவரத்து
[தொகு]சாலைகள்
[தொகு]சாவந்த்வாடி, கோவா மற்றும் பெல்காம், சிந்துதுர்க் மாவட்டத்தின் பிற நகரங்களுக்கும் மகாராட்டிர மாநிலத்தின் பிற நகரங்களுக்கும் மகாராட்டிர மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சிறிய கிராமங்களை நகரத்துடன் இணைக்க தனியார் பேருந்துகள், பகிர்வு ரிக்ஷாக்கள் மற்றும் பைக்குகள் உள்நாட்டில் பயணிக்கப் பயன்படுகின்றன. சாவந்த்வாடியிலிருந்து 10 கி.மீ தூரத்திலிருக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை கோவாவை மும்பையுடன் இணைக்கிறது
இருப்புப்பாதை
[தொகு]கொங்கண் இருப்புப்பாதை என பிரபலமாக அறியப்படும் கொங்கண் இருப்புப்பாதை நிறுவனத்தின் இருப்புப்பாதை மும்பையிலிருந்து மங்களூரை இணைக்கிறது. இது சாவந்த்வாடி சாலை தொடருந்து நிலையம் வழியாக நகரத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் கடக்கிறது. [1] [2] திருவனந்தபுரம் ராசதானி விரைவுவண்டி சாவந்த்வாடி சாலை தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.
விமான நிலையம்
[தொகு]128 கி.மீ தொலைவிலுள்ள கோலாப்பூர் விமான நிலையமும், 110 கி.மீ தொலைவிலுள்ள கருநாடகாவின் பெல்காம் விமான நிலையமும், 94 கி.மீ. தொலைவிலுள்ள கோவாவின் தபோலிம் விமான நிலையமும் அருகிலுள்ள விமான நிலையங்கள் ஆகும். மேலும், மால்வான் வட்டத்திலுள்ள சிபி-பருலே என்ற இடத்தில் புதிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KR station with phone and amenities". www.konkanrailway.com. பார்க்கப்பட்ட நாள் 9 October 2012.
- ↑ SWV/Sawantwadi Road