உள்ளடக்கத்துக்குச் செல்

சாசாங்க் மஞ்சரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாசாங்க் மஞ்சரி
Shashank Manjari
மகாராணி
நரேன் ராஜ் பரிவார் உறுப்பினர் - இராம்கர் ராஜ்யம்
காலம்1899 – 29 சனவரி 1987
முன்னையவர்மகாராணி ரிகிநாத் கவுரி
பின்னையவர்மகாராணி லலிதா ராஜ்ய லட்சுமி
பிறப்பு20 சூன் 1899
பொரஹத் அரண்மனை, சகர்தர்பூர், பீகார், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு29 சனவரி 1987
இராஜ கோதி ஹசாரிபாக்
துணைவர்மகாராஜா லட்சுமி நரேன் சிங் பகதூர்
குழந்தைகளின்
பெயர்கள்
மகராஜா காமாக்யா நரேன் சிங் பகதூர், தளபதி மகாராஜ் குமார் பசந்த் நரேன் சிங் ஜி சாஹிப்
மரபுநரைன்
தந்தைமா. த. போராஹத் மகாராஜா ஸ்ரீ நர்பத் சிங்
மதம்இந்து சமயம்

மகாராணி சாசாங்க் மஞ்சரி (Shashank Manjari) தேவி சாகிபா என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சுதந்திராக் கட்சியின் உறுப்பினராகப் பீகார் மாநிலம் பலாமுவிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்குத் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ராம்கர் ராஜாவின் முந்தைய அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் (நரேன் ராஜ் பரிவார்). மேலும் போராஹட்டின் மகாராஜா ஸ்ரீ ராஜா அர்ஜுன் சிங்கின் பேத்தி ஆவார். இவர் ராம்கர் ராஜாவின் மகாராஜா லட்சுமி நரேன் சிங் பகதூரைத் திருமணம் செய்து கொண்டார். மஞ்சரி, ஜரிதி சட்டமன்றத் தொகுதி மற்றும் தும்ரி சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மேலும் 1969-ல் பீகாரின் நீர்ப்பாசன அமைச்சராகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு தேர்தலிலும் தோல்வியடையாததால் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகக் கருதப்பட்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Lok Sabha Members Bioprofile". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாசாங்க்_மஞ்சரி&oldid=3743840" இலிருந்து மீள்விக்கப்பட்டது