உள்ளடக்கத்துக்குச் செல்

சலீல் அங்கோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சலீல் அங்கோலா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 1 20
ஓட்டங்கள் 6 34
மட்டையாட்ட சராசரி 6.00 3.77
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 6 9
வீசிய பந்துகள் 180 807
வீழ்த்தல்கள் 2 13
பந்துவீச்சு சராசரி 64.00 47.30
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 1/35 3/33
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 2/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

சலீல் அசோக் அங்கோலா (Salil Ashok Ankola, பிறப்பு: மார்ச்சு 1. 1968, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1989 இலிருந்து 1997 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவர் 28 வயதாக இருக்கும் போது இடது காலில் எலும்பு புற்றுநோய் ஏற்பட்டதால் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன் பிறகு இவர் பல இந்திய தொலைக்காட்சித் தொடர்களிலும் சில இந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

அங்கோலா இந்தியா, கருநாடகத்தில் கொங்கனி குட்ம்பத்தில் 1968 ஆம் ஆண்டில் பிறந்தார்.[1]

முதல்தரத் துடுப்பாட்டம்

[தொகு]

தனது 20 ஆம் வயதில் மகாராட்டிர மாநிலத் துடுப்பாட்டா அணிக்காக தனது முதல், முதல்தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். 1988-89 ஆம் ஆண்டிற்கான ரஞ்சிக் கோப்பைத் தொடரில் இவர் குசராத் மாநிலத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அரிமுகமானார்.[2] அந்தப் போட்டியில் மட்டையாட்டத்தில் 43 ஓட்டங்களையும் பந்துவீச்சில் ஆறு இலக்குகளையும்க் கைப்பற்றினார். அதில் ஹேட்ரிக்கும் அடங்கும்.[3][4] அதே தொடரில் பரோடா அனிக்கு எதிரான போட்டியில் 51 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார்.[5] முடிவில் 27 இலக்குகளைக் கைபற்றினார். அவரின் பந்துவீச்சு சராசரி 20.18 ஆகும். மேலும் அதில் ஐந்து இலக்குகளை அவர் ஒரு போட்டியில் கைப்பற்றினார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஹ்கிறனை வெளிப்படுத்தியதன் மூலம் தேர்வாளர்களின் கவனத்திற்கு வந்தார். 1989-90 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கு இவர் தேர்வானார். பாக்கித்தான் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது முதல் ஆட்டப் பகுதியில் இவர் 77 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஆறு இலக்குகளைக் கைப்பற்றினார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இரு இலக்குகளைக் கைப்பற்றினார். மொத்தமாக இவர் எட்டு இலக்குகளைக் கைப்பற்றினார்.[6]

சர்வதேசப் போட்டிகள்

[தொகு]

1989-90 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. கராச்சியில் நடைபெற்ற பாக்கித்தான் துடுப்பாட்ட அனிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பிற்காலத்தில் சிறந்த துடுப்பாட்ட வீரகளாக அறியப்பட்ட சச்சின் டெண்டுல்கர் மற்றும் வக்கார் ��ூனிசு ஆகியோருக்கும் அதுவே முதல் போட்டியாகும்.[7][8][9] தனது முதல் போட்டியில் 128 ஒட்டங்களை விட்டுக் கொடுத்து இரு இலக்குகளைக் கைப்பற்றினார். அந்தப் போட்டி சமனில் முடிந்தது.[2]

அந்தத் தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் சமனில் முடிந்தது. பின் இவர் அதே அணிக்கு எதிரான ஒரு நாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமனார். மூன்று போட்டிகள் கொண்ட அதொடரின் இரண்டாவது போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தியத் துடுப்பாட்ட அணியின் வெற்றிக்குஒரு ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அப்போது இந்துயாவின் வசம் இரு இலக்குகள் இருந்தன. பத்தாவது வீரராகக களம் இறங்கினார். இம்ரான் கான் வீசிய ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தில் ஆறு ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.[10] அடுத்த போட்டியில் இவர் 2.3 ஓவர்கள் வீசியிருந்த நிலையில் ரசிகர்கள் இடையூறு செய்ததால் அந்தப் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு இவர் இந்திய அணியில் சில காலம் தேர்வாகவில்லை.[11]

சான்றுகள்

[தொகு]
  1. "The High Priests of Indian Cricket". Outlookindia.com. 10 பெப்பிரவரி 2003. Archived from the original on 16 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச்சு 2013.
  2. 2.0 2.1 "Salil Ankola". ESPNcricinfo. Archived from the original on 7 August 2015. பார்க்கப்பட்ட நாள் 17 August 2015.
  3. Marar, Jaideep (15 October 1996). "Selection solace for Salil Ankola". The Indian Express. Archived from the original on 24 April 1997. பார்க்கப்பட்ட நாள் 13 October 2018.
  4. "Maharashtra v Gujarat". CricketArchive. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  5. "Baroda v Maharashtra". Cricket Archive. Archived from the original on 20 December 2014. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  6. "BCCP Patron's XI v Indians". Cricket Archive. Archived from the original on 11 November 2012. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  7. "You are seeing the best of Tendulkar: Waqar". Rediff.com. 21 April 2004. Archived from the original on 17 January 2011. பார்க்கப்பட்ட நாள் 28 March 2013.
  8. Lokendra Pratap Sahi (31 March 2011). "Sachin’s has been a very different story: Waqar". The Telegraph (Calcutta) இம் மூலத்தில் இருந்து 14 ஆகஸ்ட் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130814033259/http://www.telegraphindia.com/1110331/jsp/sports/story_13790283.jsp. 
  9. "Pakistan v India". Cricket Archive. Archived from the original on 3 December 2012. பார்க்கப்பட்ட நாள் 10 March 2013.
  10. "Which Indian hit a six off his first ball in ODIs?". ESPNcricinfo. 11 July 2001. Archived from the original on 4 October 2012. பார்க்கப்பட்ட நாள் 5 January 2013.
  11. Deshpande, Swati (29 January 2010). "Ankola wants out, wife says no". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 31 மார்ச் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130331055706/http://articles.timesofindia.indiatimes.com/2010-01-29/mumbai/28147157_1_indian-cricket-team-legal-notice-mrinalini-deshmukh. பார்த்த நாள்: 5 January 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சலீல்_அங்கோலா&oldid=3718830" இலிருந்து மீள்விக்கப்பட்டது