உள்ளடக்கத்துக்குச் செல்

கொடுவாள் பூனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடுவாள் பூனை
மறுஉருவாக்கம் செய்யப்பட்ட S.populator இன் படம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:

கொடுவாள் பூனை (saber-toothed tiger) முற்றும் அழிந்து போன வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய ஒரு விலங்கு (pre-historic animal). இவை கொடுவாள் புலி என்று தவறாக அறியப்படுகின்றன. இவற்றுள் பூனைக் குடும்பத்தில் உள்ள 3 துணைக்குடும்பங்களும் பைப்பாலூட்டிகளோடு தொடர்புடைய 2 குடும்பங்களும் அடக்கம்.

பண்புகள்

[தொகு]

இவற்றின் மேல்த்தாடையில் (Maxilla) உள்ள கோரைப் பற்கள்(canine teeth) இரண்டும் கொடுவாள் போல நீண்டுள்ளன. வாயை மூடினாலும் இப்பற்கள் வெளியே நீண்டு தெரியும். இவை கம்பளி யானை போன்ற இதர வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய விலங்குகளைக் கொன்று தின்னதாக நம்பப்படுகிறது.

கொடுவாள் போன்ற நீண்ட கூரான மேல்த்தாடைப் பற்கள்

கண்டறிதல்

[தொகு]

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த இயற்கையியலாளர் பீட்டர் வில்ஹம் லுண்ட் என்பவர் 1841 இல் தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பிரேசில் நாட்டில் உள்ள சிறு நகரின் குகையில் சி.பாப்புலேட்டர் சிற்றினக் கொடுவாள் பூனை ஒன்றின் தொல்படிமத்தை முதன் முதலாய்க் கண்டறிந்தார்.

அழிவு

[தொகு]

42 மில்லியன் ஆண்டுகாலம் இப்புவியில் வாழ்ந்திருந்த இவ்வுயிரிகள் கி.மு. பத்தாயிரமாம் ஆண்டு வாக்கில் இவை அழிந்ததாய் அறியப்படுகிறது[1][2][3]. இக் காலகட்டத்தில் தான் இதர வரலாற்றுக்கு முந்தைய பெரிய விலங்குகளும் அழிந்தன. இவற்றின் அழிவுக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. மனிதர்களால் நிச்சயமாக இவை அழிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இவ்விலங்கு வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் கொடுங்கனவாக (nightmare) இருந்தது அவனுடைய குகை ஓவியங்களில் புலனாகிறது. பனி ஊழி முடிவினால் ஏற்பட்ட மாற்றங்கள் இவ்விலங்கின் அழிவைத் தூண்டியிருக்கலாம் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுவாள்_பூனை&oldid=3356497" இலிருந்து மீள்விக்கப்பட்டது