உள்ளடக்கத்துக்குச் செல்

கேரி கிர்ஸ்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கேரி கிர்ஸ்டன்
Gary Kirsten
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு23 நவம்பர் 1967 (1967-11-23) (அகவை 57)
கேப் டவுன், கேப் மாகாணம், தென்னாப்பிரிக்கா
பட்டப்பெயர்காசா
மட்டையாட்ட நடைஇடக்கை
பந்துவீச்சு நடைவலக்கை எதிர் விலகு
பங்குஆரம்பத் துடுப்பாட்டம்
உறவினர்கள்பவுல் கிரிஸ்டன் (சகோ)
பீட்டர் கிரிஸ்டன்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 257)26 திசம்பர் 1993 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வு30 மார்ச் 2004 எ. நியூசிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 28)14 திசம்பர் 1993 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாப3 மார்ச் 2003 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்1
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1987–2004மேற்கு மாகாணம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒநாப மு.த ப.அ
ஆட்டங்கள் 101 185 221 294
ஓட்டங்கள் 7,289 6,798 16,670 9,586
மட்டையாட்ட சராசரி 45.27 40.95 48.31 36.58
100கள்/50கள் 21/34 13/45 46/79 18/58
அதியுயர் ஓட்டம் 275 188* 275 188*
வீசிய பந்துகள் 349 30 1,727 138
வீழ்த்தல்கள் 2 20 3
பந்துவீச்சு சராசரி 71.00 41.80 37.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 1/0 6/68 1/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
83/– 61/1 171/– 97/1
மூலம்: Cricinfo, 28 திசம்பர் 2009

கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten, பிறப்பு 23 நவம்பர் 1967, கேப் டவுன்) தென்னாபிரிக்காவின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் இந்நாள் இந்திய தேசிய அணியின் பயிற்றுனரும் ஆவார். 101 தேர்வுகளிலும் 185 ஒருநாள் துடுப்பாட்டங்களிலும் 1993ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தென்னாபிரிக்காவிற்காக விளையாடியுள்ளார். பெரும்பாலும் தொடக்க மட்டையாளராக களமிறங்கி யுள்ளார். தனது தேர்வுத் துவக்கத்தை ஆத்திரேலிய அணிக்கு எதிராக 1993ஆம் ஆண்டு மெல்பேர்ணில் தொடங்கினார். 2004ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றிதந்த 76 ஓட்டங்களை அடித்து பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்றார். 100 தேர்வுத் துடுப்பாட்டங்களில் பங்கெடுத்த முதல் தென்னாபிரிக்கர் என்ற பெருமையும் கொண்டவர். மிகவும் நம்பத்தகுந்த மட்டையாளராகவும் களத்தடுப்புக்காரராகவும் விளங்கினார்.

2008-2011 ஆம் ஆண்டுகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு பயிற்சியாளராக இருந்தார். பின் 2011 இல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு 2013 வரை பயிற்சியாளராக இருந்தார்.[1]

சான்றுகள்

[தொகு]
  1. "Kirsten has stepped down as South African cricket coach". Wisden India. 10 May 2013 இம் மூலத்தில் இருந்து 3 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203014403/http://www.wisdenindia.com/cricket-news/kirsten-step-south-africa-coach/61793. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரி_கிர்ஸ்டன்&oldid=3241668" இலிருந்து மீள்விக்கப்பட்டது