உள்ளடக்கத்துக்குச் செல்

கெல்சிங்கிப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெல்சிங்கிப் பல்கலைக்கழகம்

கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் என்பது கெல்சிங்கி, பின்லாந்தில் அமைந்துள்ள ஒரு பழைய பெரிய பல்கலைக்கழகம் ஆகும். சுமார் 36,500 மாணவர்கள் 11 கல்விப்புலங்களிலும் 11 ஆய்வு நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளார்கள்.


கெல்சிங்கிப் பல்கலைக்கழகம் (இடது) செனட் சதுக்கம்.

தமிழ் ஆய்வுகளும் தமிழ் வகுப்புகளும்

[தொகு]

கெல்சிங்கிப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வகுப்புகள் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தமிழ் நூல்கள் மொழிபெயர்ப்புச் செய்தல் பணியும் இங்கு நடைபெறுகிறது. பேராசிரியர் அஸ்கோ பார்பொலா அறியப்பட்ட தமிழறிஞர் ஆவார். கலேவலாவைத் தமிழில் மொழி பெயர்த்த உதயணன் என அறியப்படும் ஆர். சிவலிங்கம் அவர்களும் இங்கேயே பணிபுரிகிறார்.

வெளி இணைப்புகள்

[தொகு]