உள்ளடக்கத்துக்குச் செல்

கெப்லர்-22பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெப்லர்-22பி
Kepler-22b
புறக்கோள் புறக்கோள்களின் பட்டியல்

கெப்லர் 22-பி தொகுதி, எமது சூரியக் குடும்பத்துடன் ஒப்பீடு.
தாய் விண்மீன்
விண்மீன் கெப்லர்-22
சுற்றுவட்ட இயல்புகள்
சுற்றுக்காலம்(P)289.9 [1] நா
இருப்புசார்ந்த இயல்புகள்
ஆரை(r)2.4 [2] R
கண்டுபிடிப்பு
கண்டறிந்த நாள்
கண்டுபிடிப்பாளர்(கள்)
கண்டுபிடித்த முறை கடப்பு முறை
கண்டுபிடித்த இடம் கெப்லர் திட்டம்
கண்டுபிடிப்பு நிலை வெளியிடப்பட்டது
வேறு பெயர்கள்
Database references
புறக்கோள்களின்
கலைக்களஞ்சியம்
தரவு
SIMBADதரவு

கெப்லர்-22பி (Kepler-22b) என்பது ஒரு புறக்கோள் ஆகும். எமது சூரியனைப் போன்ற உயிரினம் வாழக்கூடிய தொகுதியைக் கொண்டுள்ள விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் இது. இவ்வகையான புறக்கோள் ஒன்று நாசாவினால் உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதற்தடவையாகும்.

இப்புறக்கோள் பற்றிய கண்டுபிடிப்பு 2011, டிசம்பர் 5 ஆம் நாள் அறிவிக்கப்பட்டது[3]. இக்கோளின் ஆரை பூமியுடன் ஒப்பிடும் போது ஏறத்தாழ 2.4 மடங்காகும். பூமியில் இருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் கெப்லர் 22 என்ற விண்மீனைச் சுற்றி வருகிறது[3][4][5]. இக்கோளின் மேற்பரப்பு எவ்வகையானது என்பது இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.[4][3]

கெப்லர்-22பி இற்கும் அதன் விண்மீனுக்கும் இடையேயான தூரம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையான தூரத்துடன் ஒப்பிடும் போது 15% குறைவானதாகும். பூமியின் சுற்றுப்பாதையை விட 85% அதிகமானது. தனது விண்மீனை இது சுற்றிவர 289.9[6] நாட்கள் எடுக்கின்றது.[7]

கெப்லர்-22பி இன் விண்மீன் ஒளியை வெளிவிடும் அளவு எமது சூரியனை விட 25% குறைவாகும்.[3] இதன் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை கிட்டத்தட்ட 22 செல்சியசு என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.[4][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  2. Space.com, "NASA Telescope Confirms Alien Planet in Habitable Zone" 12/5/2011 http://www.space.com/13821-nasa-kepler-alien-planets-habitable-zone.html
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 BBC NEWS, "Kepler 22-b: Earth-like planet confirmed" 12/5/2011 http://www.bbc.co.uk/news/science-environment-16040655
  4. 4.0 4.1 4.2 NASA Press Release, "NASA's Kepler Confirms Its First Planet In Habitable Zone", 12/5/2011, http://www.nasa.gov/centers/ames/news/releases/2011/11-99AR.html
  5. Kepler-22b: Facts About Exoplanet in Habitable Zone
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-01-07. பார்க்கப்பட்ட நாள் 2011-12-05.
  7. http://www.nasa.gov/mission_pages/kepler/news/kepscicon-briefing.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்-22பி&oldid=3582564" இலிருந்து மீள்விக்கப்பட்டது