உள்ளடக்கத்துக்குச் செல்

கிருட்டிணாவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிருட்டிணாவரம்
Krishnavaram
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்பாண்டிச்சேரி
வட்டம் (தாலுகா)பாகூர்
ஒன்றியம்பாகூர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம்பிரெஞ்சு, தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அ.கு.எண் -->
607 402
தொலைபேசிக் குறியீடு0413
வாகனப் பதிவுPY-01
பாலின விகிதம்50% /

கிருட்டிணாவரம் (Krishnavaram ) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியில் உள்ள பாகூர் தாலுக்காவில் இருக்கும் பாகூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் [1] ஆகும். புதுச்சேரி - கடலூர் 45ஏ தேசிய நெடுஞ்சாலையில் கடைசியாக அமைந்துள்ள புதுச்சேரி மாவட்டக் கிராமம் கிருட்டிணாவரம் ஆகும். கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு வரும்பொழுது இக்கிராமமே நுழைவு வாயிலாக விளங்குகிறது. மேலும், இக்கிராமத்தில் முள்ளோடை அலங்கார வளைவு என்ற ஓர் அலங்கார வளைவு இங்குள்ள முள் ஓடைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. மதி கிருட்டிணபுரம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இக்கிராமத்தில், பக்தர்கள் முன்வந்து உடனடி புணரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலையில் பண்டைய திருமால் கோவில் ஒன்று சிதைவுற்ற நிலையில் காணப்படுகிறது.

புவியியல்

[தொகு]

மேற்கில் பாகூர் கிராமம், வடக்கில் மணப்பட்டு கிராமம், கிழக்கில் புதுக்குப்பம், தெற்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கங்கனக்குப்பம் ஆகியன் கிருட்டிணாவரம் கிராமத்திற்கு புவியியல் எல்லைகளாக அமைந்துள்ளன.

கிராமங்கள்

[தொகு]

கிருட்டிணாவரம் கிராமப் பஞ்சாயத்தில் பின்வரும் கிராமங்கள் இடம்பெற்றுள்ளன.

  • கிருட்டிணாவரம்
  • கோரவள்ளிமேடு
  • சல்லியாங்குப்பம்
  • உச்சிமேடு

சாலைப் போக்குவரத்து

[தொகு]

மூர்த்திக்குப்பம், கோரவள்ளிமேடு, கிருட்டிணாவரம், குருவிநத்தம் ஆகிய கிராமங்கள் வழியாக புதுக்குப்பம்சோரியாங்குப்பம் சாலை செல்வதால் இக்கிராமம் மற்ற பகுதிகளுடன் இணைப்புப் பெறுகிறது

அரசியல்

[தொகு]

புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்குட்பட்டும், ஏம்பலம் சட்டமன்றத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் கிருட்டிணாவரம் கிராமம் இருக்கிறது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2016-03-29.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருட்டிணாவரம்&oldid=3761585" இலிருந்து மீள்விக்கப்பட்டது