உள்ளடக்கத்துக்குச் செல்

காலவரிசையில் வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இன்று வரை கண்டறியப்பட்டுள்ள வேதித் தனிமங்களின் கண்டுபிடிப்பு காலவரிசைப்படி (Timeline of chemical element discoveries) இங்கே வழங்கப்படுகிறது. பெரும்பாலான தனிமங்களின் சரியான கண்டுபிடிப்புத் தேதியைத் துல்லியமாக வரையறுக்க முடியாத நிலையில் இருப்பதால் அவற்றைத் தூய தனிமங்கள் என வரையறுக்கப்பட்ட நாளை அடிப்படையாகக் கொண்ட காலமுறை வரிசையில் பொதுவாக இங்கே தனிமங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தனிமத்தின் பெயர், அணு எண், முதல் அறிக்கை அறிமுகமான ஆண்டு, கண்டுபிடித்தவர் பெயர், கண்டுபிடிப்புத் தொடர்பான சில குறிப்புகள் ஆகியன கொடுக்கப்பட்டுள்ளன.

அட்டவணை

[தொகு]
கண்டுபிடித்த காலவரிசையில் தனிம அட்டவணை
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
குழு →
↓ வரிசை
1 1
H
2
He
2 3
Li
4
Be
5
B
6
C
7
N
8
O
9
F
10
Ne
3 11
Na
12
Mg
13
Al
14
Si
15
P
16
S
17
Cl
18
Ar
4 19
K
20
Ca
21
Sc
22
Ti
23
V
24
Cr
25
Mn
26
Fe
27
Co
28
Ni
29
Cu
30
Zn
31
Ga
32
Ge
33
As
34
Se
35
Br
36
Kr
5 37
Rb
38
Sr
39
Y
40
Zr
41
Nb
42
Mo
43
Tc
44
Ru
45
Rh
46
Pd
47
Ag
48
Cd
49
In
50
Sn
51
Sb
52
Te
53
I
54
Xe
6 55
Cs
56
Ba
1 asterisk 72
Hf
73
Ta
74
W
75
Re
76
Os
77
Ir
78
Pt
79
Au
80
Hg
81
Tl
82
Pb
83
Bi
84
Po
85
At
86
Rn
7 87
Fr
88
Ra
1 asterisk 104
Rf
105
Db
106
Sg
107
Bh
108
Hs
109
Mt
110
Ds
111
Rg
112
Cn
113
Uut
114
Fl
115
Uup
116
Lv
117
Uus
118
Uuo
 
1 asterisk 57
La
58
Ce
59
Pr
60
Nd
61
Pm
62
Sm
63
Eu
64
Gd
65
Tb
66
Dy
67
Ho
68
Er
69
Tm
70
Yb
71
Lu
1 asterisk 89
Ac
90
Th
91
Pa
92
U
93
Np
94
Pu
95
Am
96
Cm
97
Bk
98
Cf
99
Es
100
Fm
101
Md
102
No
103
Lr
 
பின்புல நிறம் கண்டுபிடிப்பு காலகட்டத்தைக் குறிக்கிறது:
பண்டை முதல் நடுக்காலம் வரை நடுக் காலம்–​1799 1800–​1849 1850–​1899 1900–​1949 1950–​1999 2000 முதல்
(13 தனிமங்கள்)
இடைக்காலம் வரை பதிவு செய்யப்படாத கண்டுபிடிப்புகளின் உச்சநிலை
(21 தனிமங்கள்)
அறிவொளிக் காலப் பகுதியில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள்
(24 தனிமங்கள்)
அறிவியல், தொழில் புரட்சிகள்
(26 தனிமங்கள்)
தனிமங்களின் வகைபாடு தொடக்கம்; நிறமாலை பகுப்பாய்வுநுட்பங்கள் பயன்பாடு: புவபோதிரான், பன்சன், குரூக்ஸ், கிர்க்காப், மற்றும் பலரின் நிறமாலை வரிகள் தேடல் மற்றும் அடையாளப்படுத்தல்"
(13 தனிமங்கள்)
பழைய குவாண்டம் கொள்கை வளர்ச்சி மற்றும் குவாண்டம் விசையியல்
(16 தனிமங்கள்)
மன்காட்டன் திட்டத்திற்குப் பின்னர்; தொகுப்பு வினையில் அணு எண் 98 மற்றும் அதைத் தொடரும் தனிமங்கள் உருவாக்கம் ( மோதுகதிர் மற்றும் மோதித்தாக்கும் நுட்பங்கள்)
(5 தனிமங்கள்)
தற்காலத் தொகுப்பு வினைகள்
கருப்பு=திண்மம் பச்சை=திரவம் சிவப்பு=வாயு சாம்பல்=அறியப்படாதவை அணுவெண்ணின் நிறம் 0 °செ, 1 atm இல் பொருட்களின் நிலையைக் குறிக்கிறது.
ஆதித் தனிமம் சிதைவில் இருந்து செயற்கை இயற்கையாக காணப்படும் தனிமங்களின் இருப்பை ஓரக்கோடுகள் சொல்கின்றன்

பதிவு செய்யப்படாத கண்டுபிடிப்புகள்

[தொகு]
Z தனிமம் தொடக்கப்
பயன்பாடு
இருக்கும்
பழமையான
மாதிரி
கண்டுபிடிப்பாளர்கள் பழமையான
மாதிரி
இருக்குமிடம்
குறிப்புகள்
29 செப்பு பொ.கா.மு 9000 பொ.கா.மு 6000 மத்திய கிழக்கு அனத்தோலியா மனிதன் உருவாக்கிப் பயன்படுத்திய முதல் உலோகம் அனேகமாக தாமிரமாக இருக்கலாம்[1] . முதலில் தனித்த நிலையில் பெறப்பட்ட இது பின்னர் தாதுக்களில் இருந்து உருக்கிப் பிரிக்கப்பட்டது. தொடக்ககால மதிப்பீடுகள் அடிப்படையில் செப்பு கி.மு 9000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய கிழக்கில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

செப்பு மற்றும் வெண்கல காலவயது மனிதர்களுக்கு அக்காலகட்டம் முழுவதும் செப்பு ஒரு முக்கியமான பொருளாக இருந்தது. கி.மு 6000 ஆண்டுகளில் செப்பு பயன்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமான காலம் காட்டும் காப்பர் மணிகள் கேடல் ஓயூக், அனடோலியாவில் கண்டறியப்பட்டுள்ளது.[2]

82 ஈயம் பொ.கா.மு 7000 பொ.கா.மு 3800 கிழக்கிற்கு அருகில் அபைடோசு, எகிப்து 9,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொது சகாப்த காலத்திலேயே ஈயம் உருக்கிப் பிர்த்தல் தொடங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 3800 மு.பொ.ச ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான சிறிய சிலை ஒன்று அபைடோசு தளத்திலுள்ள ஓசைரிசு கோவிலில் காணப்படுகிறது.[3]
79 தங்கம் பொ.கா.மு 6000
இற்கு முற்பட்ட
பொ.கா.மு 3000 பல்கேரியா வர்னா நெக்ரோபொலிசு கி.மு 4,600 முதல் கி.மு. 4,200 காலத்திய உலகின் பழமையான தங்கப் புதையல் வர்னா நெக்ரோபொலிசு இடுகாடு தளத்தில் கண்டெடுக்கப்பட்டது.
47 வெள்ளி பொ.கா.மு 5000 பொ.கா.மு 4000 அனத்தோலியா செப்பு மற்றும் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட சில காலத்திற்குப் பின்னர் கண்டறியப்பட்டிருக்கலாம்.[4][5]
26 இரும்பு பொ.கா.மு 5000 பொ.கா.மு 4000 தெரியவில்லை எகிப்து பொ.கா.மு 5000 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு அறியப்பட்டிருந்தது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன.[6] மனிதர்கள் பயன்படுத்திய பழமையான இரும்பு பொருட்களான, சுமார் பொ.கா.மு 4000 இல் எகிப்தில் செய்த விண்கல் இரும்பு மணிகள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட பொ.கா.மு 3000 முதல் பொ.கா.மு 1200 வரையிலான காலத்தில்[7] இருந்த இரும்பு உருக்கிப் பிரித்தல் கண்டுபிடிப்பு இரும்பு கற்காலத்திற்கு வழிவகுத்தது. தொடக்கத்தில் ஆயுதங்கள் மற்றும் கருவிகள் செய்வது இரும்பின் முக்கிய பயன்பாடாக இருந்தது.[8]
6 கார்பன் பொ.கா.மு 3750 எகிப்தியர்கள் மற்றும் சுமேரியர்கள் முற்காலத்து எகிப்தியர்களும் சுமேரியர்களும் தாமிரம், துத்தநாகம், மற்றும் வெள்ளீயம் ஆகியவற்றை ஒடுக்கி வெண்கலம் தயாரிப்பதற்கு கரிக்குழியை உபயோகிக்க அறிந்திருந்தனர்.[9] ஏறக்குறைய பொ.கா.மு 2500 ஆம் ஆண்டில் வைரம் குறித்து அறிந்திருந்தனர். உண்மையான வேதியியல் ஆய்வுகள் முதன்முதலாக 18 ஆம் நூற்றாண்டில்[10] மேற்கொள்ளப்பட்டன. 1789 ஆம் ஆண்டில் அண்டொயின் இலவாய்சியர் இதை ஒரு தனிமமாகப் பட்டியலிட்டார்.[11]
50 வெள்ளீயம் பொ.கா.மு 3500 பொ.கா.மு 2000 தெரியவில்லை பொ.கா.மு 3500 ஆண்டுகளுக்கு முன்பு வெண்கலம் தயாரிப்பதற்காக தாமிரத்துடன் உருக்கிப் பிரித்தெடுக்கப்பட்டது.[12] பொ.கா.மு 2000 ஆண்டுகள் பழமையான காலப்படைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.[13]
16 கந்தகம் பொ.கா.மு 2000 சீனர்கள்/இந்தியர்கள் குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது.[14] அண்டொயின் இலவாய்சியர் 1777 ஆம் ஆண்டில் இதை தனிமமாக அங்கீகரித்தார்.
80 பாதரசம் பொ.கா.மு 2000 பொ.கா.மு 1500 சீனர்கள்/இந்தியர்கள் எகிப்து பொ.கா.மு 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சீனர்கள் மற்றும் இந்தியர்களால் அறியப்பட்டிருந்தது என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. பொ.கா.மு 1500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்தியர்கள் கல்லறைகளில் இது காணப்படுகிறது.[15]
30 துத்தநாகம் பொ.கா.மு 1000 பொ.கா.மு 1000 இந்திய உலோகவியலாளர்கள் இந்தியத் துணைக்கண்டம் பொ.கா.மு 1000 தொல்பழங்கால ஆண்டுகளிலேயே இந்திய உலோகவியலாளர்களால் பிரித்தெடுக்கப்பட்டது. ஆனால் இத்தனிமம் தொடர்பான உண்மைகள் அக்காலத்தினரால் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் இருந்தது. 800 ஆம் ஆண்டில்[16] உலோகவியலாளர் இராசரத்னா சாமுக்யா இதை தனித்துவம் மிக்கதென அடையாளப்படுத்தினார். 1526 இல் இரசவாதி பார்செலசும் [17] 1746 இல் ஆண்டிரியாசுசிகிசுமுந்து மார்கிராப்பும் துத்தநாகத்தைத் தனிமைப்படுத்தி பிரித்தனர்.[18]
33 ஆர்செனிக் பொ.கா.மு 2500/
பொ.கா 1250
வெண்கலக் காலம் ஏ.மேக்னசு வெண்கலக் காலத்தில் ஆர்சனிக் உபயோகத்தில் இருந்தது. 1250 ஆண்டில் ஆல்பெர்டசு மாக்னசு என்ற ஐரோப்பியர் முதன்முதலாக இதைத் தனிமைப்படுத்திப் பிரித்தார்.[19] தனிம ஆர்சனிக்கை தயாரிக்கும் முறைகள் இரண்டை 1649 இல் ச���கன் சிகொரோடர் வெளியிட்டார்.[19]
51 அந்திமனி பொ.கா.மு 3000 பரவலாக எகிப்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டது.[20]

பதிவுசெய்யப்பட்ட கண்டுபிடிப்புகள்

[தொகு]
Z தனிமம் கவனிக்கப்பட்டது அல்லது முன்னுரைக்கப்பட்டது தனிமைப்படுத்தப்பட்டது (பரவலாக அறியப்பட்டது) கவனித்தவர் முதலில் தனிமைப்படுத்தியவர் குறிப்புகள்
15 பாசுபரசு 1669 1669 எச்.பிராண்டு எச்.பிராண்டு சிறுநீரில் இருந்து இத்தனிமம் தயாரிக்கப்பட்டது,வேதிமுறைப்படி கண்டறியப்பட்ட முதல் தனிமம் பாசுபரசு ஆகும்.[21]
27 கோபால்ட் 1732 ஜா.பிராண்ட் கண்ணாடியின் நீல நிறத்திற்கு காரணம் பிசுமத் என்று நினைத்துக் கொண்டிருந்ததை மாற்றி அதற்குக் காரணம் ஒரு புதிய வகையான உலோகந்தான் என்பதை இவ்வுலோகம் நிருபித்தது.[22]
78 பிளாட்டினம் 1735 1735 ஏ.டி.உல்லொவா அ.டி. உல்லொவா 1557 ஆம் ஆண்டில் சூலியசு சீசர் சிகாலிகர் தென் அமெரிக்கத் தங்கத்தில் ஒரு உலோகம் காணப்பட்டது என இவ்வுலோகம் குறித்த முதல் விளக்கத்தை அளித்தார். 1748 இல் உல்லொவா தன்னுடைய கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். ஆனால் 1741 ஆம் ஆண்டில் சர் சார்லசு வுட்டும் இதைக்குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 1750 ஆம் ஆண்டில்தான் வில்லியம் பிரெளன்ரிக் இது ஒரு உலோகம் என்பதை முதலாவது ஆதாரத்துடன் விளக்கினார்.[23]
28 நிக்கல் 1751 1751 பி.குரான்ஸ்சிடெட் பி. குரான்ஸ்டெட் தற்பொழுது நிக்கோலைட் எனப்படும் போலி செப்பு தாதுவில் இருந்து செப்புவை வடித்துப் பிரிக்கும்போது இது கண்டறியப்பட்டது.[24]
83 பிசுமத் 1753 கி.பி.ஜெப்ராய் 1753 ஆம் ஆண்டில் கிளாடு பிரான்காயிசு ஜெப்ராய் என்ற பிரெஞ்சு வேதியியலாளர் உறுதியாக பிசுமத்தைக் கண்டறிந்தார்.[25]
12 மக்னீசியம் 1755 1808 ஜே. பிளாக் எச்.டேவி மக்னீசியா ஆல்பா (MgO) என்பது சுட்டசுண்ணாம்பு எனப்படும் கால்சியம் ஆக்சைடு (CaO) இல்லை என்பதை பிளாக் கண்டறிந்தார். தாதுப்பொருளான மக்னீசியாவில் இருந்து மின்வேதியியல் முறையில் டேவி உலோகத்தைத் தனித்துப் பிரித்தார்.[26]
1 ஐதரசன் 1766 1500 எச்.கேவண்டிசு பாராசெல்சசு 1500 ஆம் ஆண்டுகளில் என்றி கேவண்டிசு ,இராபர்ட் பாயில் மற்றும் வலிமையான அமிலங்களுடன் உலோகங்கள் வினைபுரிந்தால் இதை உற்பத்தி செய்யலாம் என்ற சோசப்பு பிரீசிட்லி ஆகியோர் கூறியிருந்தாலும் முதன்முதலில் கேவன்டிசுதான் பிறவாயுக்களில் இருந்து ஐதரசனை வேறுபடுத்தி அறிந்தார். 1793 இல் லவாய்சியர் இதற்கு ஐதரசன் எனப் பெயரிட்டார்.[27][28]
8 ஆக்சிசன் 1771 1771 காரல் வில்லெம் சீலெ காரல் வில்லெம் சீலெ 1771 ஆம் ஆண்டில் பாதரச ஆக்சைடு மற்றும் நைத்திரேட்டு இரண்டையும் சேர்த்து சூடாக்கி ஆக்சிசன் தயாரிக்கப்பட்டாலும் 1777 வரை தன்னுடைய கண்டறிதல்களை அவர் வெளியிடவில்லை. சோசப்பு பிரீசிட்லியும் 1774 இல் இப்புதிய வாயுவைக் கண்டறிந்தார் எனினும் லவாய்சியர்தான் இதனை ஒரு தனிமமாக பதிவுசெய்து 1777 இல் இதற்குப் பெயரிட்டார்.[29][30]
7 நைட்ரசன் 1772 1772 டே.ரூதர்போர்டு டே. ரூதர்போர்டு எடின்பரோ பல்கலைக்கழகத்தில்[31] படித்துக் கொண்டிருந்தபோது அவர் நைட்ரசனைக் கண்டுபிடித்தார். விலங்குகள் சுவாசித்த காற்றில் இருந்த வெளிவிடப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடு வாயுவை நீக்கியபிறகு மேற்கொண்டு மெழுகுவர்த்தி எரியவில்லை என்பதை நிருபித்தார். இதே நேரத்தில் காரல் வில்லெம் சிலெ, என்றி கேவண்டிசு மற்றும் சோசப்பு பிரீசிட்லி ஆகியோர் இத்தனிமம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். 1775 ஆம் ஆண்டில் லவாய்சியர் இதற்கு நைட்ரசன் எனப் பெயரிட்டார்.[32]
17 குளோரின் 1774 1774 காரல் வில்லெம் சீலெ காரல் வில்லெம் சீலெ ஐதரோகுளோரிக் அமிலத்திலிருந்து குளோரின் பெறப்பட்டது என்றாலும் இது ஒரு ஆக்சைடு என்றே கருதப்பட்டது. 1988 ஆம் ஆண்டில்தான் அம்பிரி டேவி இதை ஒரு தனிமமாக அங்கீகரித்தார்.[33]
25 மாங்கனீசு 1774 1774 காரல் வில்லெம் சீலெ கோ.கான் பரவலாக அறியப்பட்ட பைரோலுசைட் என்பது புதிய உலோகத்தின் ஆக்சைடு தாது ஆகும். இக்னாடியசு காட்பிரெட் காயிம் என்பவரும் 1770 ஆம் ஆண்டில் இதே உலோகத்தைக் கண்டறிந்தார்.சீலேவும் 1774 ஆம் ஆண்டில் இதையே கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.மங்கனீசீரொக்சைட்டை கார்பனுடன் சேர்த்து ஒடுக்கவினைக்கு உட்படுத்தி தனித்துப் பிரித்தெடுக்கலாம்.[34]
56 பேரியம் 1772 1808 காரல் வில்லெம் சீலெ ஹம்பிரி டேவி சீலெ பைரோலூசைட் தாதுவில் இருந்து பேரியத்தை வேறுபடுத்தி அறிந்தார். மின்னாற்பகுப்பு முறையில் டேவி தனிமத்தை தனித்துப் பிரித்தார்.[35]
42 மாலிப்டினம் 1778 1781 காரல் வில்லெம் சீலெ பீட்டர் சாக்கப் இச்செலம் மாலிப்டினைட்டின் பகுதிப்பொருளாக மாலிப்டினம் உள்ளதென்று சீலெ அங்கீகரித்தார்.[36]
52 டெல்லூரியம் 1782 பி.சோ.மு.வான் ரிச்சென்சிடெய்ன் எ.கிளாப்ராத் திரான்சில்வேனியா நகரில் இருந்து பெறப்பட்ட தங்கத்தின் தாதுவில் டெல்லூரியம் இருப்பதை முல்லர் கண்டறிந்தார்.[37]
74 டங்சுடன் 1781 1783 டா.பெர்க்மான் யு மற்றும் பா எத்துயார்]] சீலைட் தாதுவில் இருந்து டங்சுடனின் ஆக்சைடு சேர்மத்தைக் பெர்க்மான் கண்டறிந்தார். உல்பிரமைட் தாதுவில் இருந்து பாசுடோ எத்துயார் டங்சுடிக் அமிலத்தைத் தயாரித்தார். பின்னர் அதைக் கரிக்குழியில் இட்டு ஒடுக்கவினையின் வழியாக டங்சுடன் தயாரித்தார்.[38]
38 இசுட்ரோன்சியம் 1787 1808 வில்லியம் குருயிக்சாங்கு(வேதியியலர் ஹம்பிரி டேவி வில்லியம் குருயிக்சாங்கு மற்றும் அடாயிர் கிராபோர்டு இருவரும் 1790 ஆம் ஆண்டில் இசுட்ரோன்சியத்தின் கார்பனேட்டு சேர்மத்தைக் கண்டறிந்து அதில் ஒரு புதிய தனிமம் இருப்பதாக நம்பினர். இதன்விளைவாக 1808 ஆண்டில் அம்பிரி டேவி மின்வேதியியல் முறையில் இசுட்ரோன்சியத்தைப் பிரித்தெடுத்தார்.[39]
1789 அந்துவான் இலவாசியே முதலாவது நவீனத் தனிமவரிசை அட்டவணை உருவாக்கப்பட்டது. இதில் அதுவரை அறியப்பட்ட தனிமங்களுடன் மொத்தமாக 29 தனிமங்கள் இடம் பெற்றிருந்தன.[40] தனிமம் என்ற சொல்லுக்கான பொருளை இவர் மறுவரையறை செய்தார். இதனால் பாதரசத்தைத் தவிர மற்ற உறுப்புகள் தனிமங்களாக ஏற்கப்பட்டன.
40 சிர்கோனியம் 1789 1824 எ. கிளாப்ராத் சே.பெர்சிலியசு மார்டின் எயின்ரிச் கிளாப்ராத் ஒரு புதிய தனிமம் சிர்கோனியம் ஈராக்சைடை அடையாளம் கண்டார்.[41][42]
92 யுரேனியம் 1789 1841 எ.கிளாப்ராத் யூகின் மெல்ச்சியர் பெலிகாட் பிட்ச்பிளெண்ட் தாதுவில் இருந்து தயாரிக்கப்பட்ட யுரேனியம் ஆக்சைடை ஒரு தனிமம் என்று தவறுதலாகக் கணிக்கப்பட்டது. அச்சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கிரகம் யுரேனசின் பெயர் இதற்குச் சூட்டப்பட்டது.[43][44]
22 டைட்டானியம் 1791 1825 வி.கிரிகோர் சே.பெர்சிலியசு இல்மனைட் தாதுவில் ஒரு புதிய உலோக ஆக்சைடை கிரிகோர் கண்டறிந்தார். உரூட்டைல் தாதுவில் இருந்து 1795 ஆம் ஆண்டில் மார்டின் எயின்ரிச் கிளாப்ராத் தனியாகவே ஒரு தனிமத்தைக் கண்டறிந்து அதற்கு டைட்டானியம் என்று பெயரும் சூட்டினார். தூய்மையான உலோக நிலைத் தனிமம் 1910 ஆம் ஆண்டில் மேத்யூ ஏ. அன்டர் என்பவரால் அன்டர் செயல்முறையில் தயாரிக்கப்பட்டது.[45][46]
39 இயிற்றியம் 1794 1840 சோ.கடோலின் கா. மொசாண்டர் கடோலினைட்டு தாதுவில் இயிற்றியம் கண்டறியப்பட்டது. ஆனால் மொசாண்டர் அதனுடைய தாதுப்பொருள் இயிற்றியாவைக் கண்டறிந்து அதில் அதிக அளவில் இயிற்றியம் உள்ளதென நிருபித்தார்.[47][48]
24 குரோமியம் 1797 1798 நி.வேக்கியூலின் வேக்கியூலின் குரோக்கைட்டு தாதுவில் இருந்து வேக்கியூலின் முதலில் குரோமியம் மூவாக்சைடு தயாரித்தார். பின்னர் இதை கரிக்குழி உலையில் இட்டு சூடுபடுத்தி ஒடுக்கவினையின் வழியாக குரோமியம் தனிமத்தைத் தனித்துப் பிரித்தார்.[49]
4 பெரிலியம் 1798 1828 நி.வேக்கியூலின் பி.வோலர் மற்றும் அ.புச்சி பெரில் மற்றும் மரகதம் தாதுவில் இருந்து வேக்கியூலின் முதலில் பெரிலியம் ஆக்சைடு தயாரித்தார். 1808 ஆம் ஆண்டில் கிளாப்ராத் தற்பொழுதுள்ள பெரிலியம் என்ற பெயரைப் பரிந்துரைத்தார்.[50]
23 வனேடியம் 1801 1830 மே. டெல் இரியோ நி.கே.செப்சிட்ரோம் ஆன்டிரெசு மேனுவல் டெல்ரையோ, வனேடினைட்டு தாதுவில் வனேடியம் இருப்பதைக் கண்டறிந்தார். ஆனால் இப்போலைட் விக்டர் கோலெட்- டெசுகாடில்சு உடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக அவர் தனக்கான உரிமையைக் கோரவில்லை. நில்சு கேப்ரியல் செப்சுடுரோம் தனிமத்தைத் தனித்துப் பிரித்து வனேடியம் எனப் பெயரிட்டார். பின்னாளில் டெல்ரையோவின் முதல் கண்டுபிடிப்பு சரியானது என்று நிருபிக்கப்பட்டது.[51]
41 நியோபியம் 1801 1864 சா.ஆட்செட்டு வி.புளோம்சிட்ராண்டு கொலம்பைட்டு தாதுவில் இருந்து ஒரு புதிய தனிமத்தைக் கண்டறிந்த ஆட்செட் அதற்கு கொலம்பியம் எனப் பெயரிட்டார். இத்தனிமம் டாண்ட்டலம் தனிமத்திலிருந்து வேறுபட்டது என 1844 இல் என்ரிக் ரோசு நிரூபித்தார். இதைத் தொடர்ந்து அவர் அத்தனிமத்திற்கு நியோபியம் எனப் பெயரிட்டார். அதிகாரப்பூர்வமாகவும் இப்பெயர் 1949 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[52]
73 டாண்ட்டலம் 1802 கு.எக்பெர்க்கு கொலம்பைட்டு தாதுவுக்கு நிகரான வேறொரு தாதுவில் இருந்து எக்பெர்க்கு ஒரு புதியத் தனிமத்தைக் கண்டுபிடித்தார். இத்தனிமம் நியோபியம் தனிமத்திலிருந்து வேறுபட்டது என 1844 இல் என்ரிக் ரோசு நிரூபித்தார்.[53]
46 பலேடியம் 1803 1803 அ. ஒவ்லாசிடன் அ.ஒவ்லாசிடன் தென் அமெரிக்காவில் பெறப்பட்ட பிளாட்டினம் மாதிரிகளில் இருந்து வில்லியம் அய்டெ ஒவ்லாசிடன் பலேடியத்தைக் கண்டறிந்தார் என்றாலும் அவர் அதை உடனடியாக வெளியிடவில்லை. அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் சியரிசின் பெயரை வைக்கும் எண்ணம் அவருக்கிருந்தது. ஆனால் 1804 ஆம் ஆண்டில் தன்னுடைய கண்டுபிடிப்பை அவர் வெளியிட்டபோது சீரியம் அப்பெயரை பெற்றுவிட்டது. எனவே அதன் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பல்லாசு சிறுகோளின் பெயரை இவர் தன்னுடைய கண்டுபிடிப்புக்கு பலேடியம் என்று சூட்டினார்.[54]
58 சீரியம் 1803 1839 எ.கிளாப்ராத், ஜே.பெரிசிலியசு, மற்றூம் வி. இசிங்கர் க.மொசாண்டர் சீரியா என்றழைக்கப்படும் சீரியம் நான்காக்சைடு தாதுவில் இருந்து பெர்சிலியசு மற்றும் வில்லெம் இசிங்கர் சீரியம் தனிமத்தைக் கண்டுபிடித்தனர். அப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருந்த சிறுகோள் சியரிசின் பெயரை இத்தனிமத்திற்குச் சூட்டினர். அதேசமயத்தில் டாண்ட்டலம் மாதிரிகளிலும் சீரியம் காணப்படுவதாக கிளாப்ராத் தனிப்பட்டமுறையில் கண்டுபிடித்தார். அச்சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று ஆய்வுகளின் மாதிரிகளிலும் வேறு ஏதாவதொரு தனிமம் அவற்றுடன் இணைந்திருந்தது.[55]
76 ஓசுமியம் 1803 1803 சி.டெனண்ட் சி.டெனண்ட் தென் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட பிளாட்டினம் மாதிரிகளில் பலேடியம் தனிமத்திற்காக ஆய்வு செய்துகொண்டிருந்த வில்லியம் அய்டெ ஒவ்லாசிடன் போலவே சிமித்சன் டென்னண்டும் இதே ஆய்வில் இரண்டு புதிய தனிமங்களைக் கண்டுபிடித்தார். அவற்றுக்கு ஒசுமியம், இரிடியம் என்று பெயரிட்டார்.[56]
77 இரிடியம் 1803 1803 சி.டெனண்ட்]] சி.டெனண்ட் தென் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட பிளாட்டினம் மாதிரிகளில் பலேடியம் தனிமத்திற்காக ஆய்வு செய்துகொண்டிருந்த வில்லியம் அய்டெ ஒவ்லாசிடன் போலவே சிமித்சன் டென்னண்டும் இதே ஆய்வில் இரண்டு புதிய தனிமங்களைக் கண்டுபிடித்தார். அவற்றுக்கு ஒசுமியம், இரிடியம் என்று பெயரிட்டார். 1804 ஆம் ஆண்டில் இரிடியம் தொடர்பான முடிவுகளை வெளியிட்டார்.[57]
45 ரோடியம் 1804 1804 அ.ஒலாசிடன் அ.ஒலாசிடன் வில்லியம் அய்டெ ஒவ்லாசிடன் தென் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்ட பிளாட்டினம் மாதிரிகளில் இருந்து ரோடியம் தனிமத்தைக் கண்டறிந்து தனிமைப்படுத்தினார்.[58]
19 பொட்டாசியம் 1807 1807 ஹம்பிரி டேவி எச்.டேவி பொட்டாசு தாதுவில் இருந்து மின்னாற்பகுத்தல் முறையில் டேவி பொட்டாசியத்தைக் கண்டறிந்தார்.[59]
11 சோடியம் 1807 1807 ஹம்பிரி டேவி எச்.டேவி பொட்டாசியம் கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின்னர் டேவி சோடியம் ஐதராக்சைடை மின்னாற்பகுப்பு செய்து சோடியத்தையும் கண்டறிந்தார்.[60]
20 கால்சியம் 1808 1808 ஹம்பிரி டேவி எச்.டேவி டேவி சுட்டசுண்ணாம்பை மின்னாற்பகுப்பு செய்து கால்சியம் உலோகத்தையும் கண்டுபிடித்தார்.[60]
5 போரான் 1808 1808 லூ.கே-லூசக் மற்றும் லூயி ஜாக் தெனார் ஹம்பிரி டேவி 1808 ஆம் ஆண்டு சூன் 21 இல் லூசக் மற்றும் தெனார் இருவரும் வலிநீக்கும் உப்பில் ஒரு தனிமம் இருப்பதாக அறிவித்தனர். அதன்பிறகு சிலநாட்களில் டேவி போராசிக் அமிலத்தில் இருந்து போரான் என்ற ஒரு புதிய தனிமத்தைத் தனித்துப் பிரித்தார்.[61]
9 புளோரின் 1810 1886 ஆந்த்ரே-மாரி ஆம்பியர் ஆன்றி முவாசான் குளோரினுக்கு இணையான ஒரு தனிமத்தை ஐதரோ புளோரிக் அமிலத்திலிருந்து பெறமுடியும் என்று ஆந்த்ரே-மாரி ஆம்பியர் முன்னுரைத்தார். இத்தனிமத்தைப் பெற 1812 ஆம் ஆண்டிற்கும் 1886 ஆம் ஆண்டிற்கும் இடையில் பல்வேறு ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முடிவாக ஆன்றி முவாசான் , புளோரின் என்ற தனிமத்தைத் தனித்துப் பிரித்தார்.[62]
53 அயோடின் 1811 1811 பெ. கோர்டோயிசு பெ.கோர்டோயிசு கடலில் வளரும் களைச் சாம்பலில் இருந்து பெர்னார்டு கோர்டியசு அயோடினைப் பிரித்தெடுத்தார்.[63]
3 இலித்தியம் 1817 1821 ஆ.ஆர்ப்வெட்சன் வி.தா.பிராண்டெ பெடலைட்டு தாதுவில் இருந்து ஆர்ப்வெட்சன் காரவுலோகமான இலித்தியத்தை கண்டறிந்தார்.[64]
48 காட்மியம் 1817 1817 சா.இலெ. எர்மான், பி. சிடிரொமேயர், மற்றும் சே.சி.எச்.ரோலொப்பு சா.இலெ எர்மான், பி. சிடிரொமேயர் ,மற்றும் சே.சி.எச்.ரோலொப்பு காரல் சாமுவேல் லெபெர்சிடு எர்மான், பிரெடரிக் சுட்ரோமேயர் மற்றும் ஜே.சி.எச் உரோலோப்பு ஆகிய மூவரும் சைல்சியா நகர துத்தநாக ஆக்சைடு தாதுவின் மாதிரியில் இருந்து ஒரு அறியப்படாத தனிமத்தைக் கண்டறிந்தனர். பின்னாளில் சுட்ரோமேயர் இதற்குச் சூட்டிய காட்மியம் என்ற பெயர் ஏற்கப்பட்டது.[65]
34 செலினியம் 1817 1817 சே.பெர்சிலியசு மற்றும் கோ.கான் சே.பெர்சிலியசு மற்றும் கோ.கான் சே. பெர்சிலியசு மற்றும் கோ. கான் இருவரும் ஈயம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது இப்புதியத் தனிமத்தைக் கண்டறிந்தனர். முதலில் அது டெல்லூரியம் தனிமமாக இருக்கலாமென்று கருதிய அவர்கள், பின்னர் தொடர் ஆய்வுகளின் மூலம் அதை செலினியம் என்ற புதிய தனிமமாக அடையாளம் கண்டனர்.[66]
14 சிலிக்கான் 1824 1824 சே.பெர்சிலியசு சே.பெர்சிலியசு 1800 ஆம் ஆண்டில் அம்பிரி டேவி சிலிக்காவை அதுவொரு சேர்மமல்ல அது ஒரு தனிமம் என்று கருதினார். 1808 ஆம் ஆண்டில் அதற்காக தற்போதுள்ள பெயரையும் பரிந்துரைத்தார். 1818 இல் லூயிசு சோசப் கே – லூசக் மற்றும் லூயி – ஜாக் தெனார் இருவரும் இணைந்து தூய்மையற்ற சிலிக்கன் தனிமத்தைக் கண்டறிந்தனர். ஆனால் பெர்சிலியசு தூய்மையான சிலிக்கனை 1824 ஆம் ஆண்டில் தயாரித்து அதற்கான பெருமையை தனதாக்கிக் கொண்டார்.[67]
13 அலுமினியம் 1825 1825 ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் 1787 ஆம் ஆண்டில் அந்துவான் இலவாய்சியே அலுமினியத்தை கண்டுபிடிக்கப்படாத ஒரு தனிமத்தின் ஆக்சைடு என்று முன்னுரைத்தார். 1808 இல் ஹம்பிரி டேவி அதை ஒடுக்க வினையின் வழியாகத் தனித்துப் பிரிக்க முயற்சி செய்து தோல்வியடைந்தார். தற்பொழுதுள்ள அலுமினியம் என்ற பெயரையும் பரிந்துரைத்தார். இறுதியாக ஆன்சு கிருத்தியான் ஆர்ஸ்டெட் 1825 இல் உலோக அலுமினியத்தை தனித்துப் பிரித்து வெற்றி கண்டார்.[68]
35 புரோமின் 1825 1825 செ.பலார்டுமற்றும் இலெ.சிமிலின் செ.பலார்டு மற்றும் இலெ.சிமிலின் 1825 ஆம் ஆண்டின் ஒர் இலையுதிர் காலத்தில் அவர்கள் இருவரும் இப்புதிய புரோமின் தனிமத்தைக் கண்டறிந்து பின்னர் அடுத்த ஆண்டில் முடிவுகளை வெளியிட்டனர்.[69]
90 தோரியம் 1829 சே.பெர்சிலியசு பெர்சிலியசு இப்புதிய தனிமத்தின் ஆக்சைடை தோரைட்டு தாதுவில் இருந்து தயாரித்தார்..[70]
57 லாந்தனம் 1838 காரல் குசுதாவ் மொசாண்டர் செரியா மாதிரிகளில் ஒரு புதிய தனிமம் காணப்படுகிறது என்று கண்டறிந்த மொசாண்டர் 1842 ஆம் ஆண்டு முடிவுகளை வெளியிட்டார். ஆனால் பிற்காலத்தில் அவர் லாந்தனாவில் மேலும் நான்கு தனிமங்கள் இருந்ததை நிருபித்தார்.[71]
68 எர்பியம் 1842 காரல் கசுடாப் மொசாண்டர் காரல் கசுடாப் மொசாண்டர் பழைய இயிற்றியம் தனிமத்தை சரியான புதிய இயிற்றியமாகவும் எர்பியம் மூவாக்சைடு ஆகவும் மற்றும் பின்னர் டெர்பியம் மூவாக்சைடாகவும் மாற்ற முனைந்தார் [72]
65 டெர்பியம் 1842 1842 காரல் குசுதாவ் மொசாண்டர் காரல் குசுதாவ் மொசாண்டர் காரல் குசுதாவ் மொசாண்டர் 1842 ஆம் ஆண்டில் இயிற்றியம் தனிமத்தை மேலும் எர்பியா டெர்பியா என்ற இரண்டு கனிமங்களாகப் பிரிக்க முயற்சித்தார்.[73]
44 ருத்தீனியம் 1844 1844 கா.கிளாசு கா.கிளாசு உருசிய நாட்டின் பிளாட்டினம் மாதிரிகளில் இருந்து மூன்று தனிமங்களைத் தான் கண்டறிந்திருப்பதாக காட்பிரைடு வில்லெம் ஒசான் கருதினார். 1844 ஆம் ஆண்டில் காரல் எர்னஸ்டு கிளாஸ் அதில் புதியதாக ஒரு தனிமம், ருத்தீனியம் இருந்ததாக உறுதிப்படுத்தினார்.[74]
55 சீசியம் 1860 1882 ஆர். பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் கா.செட்டர்பெர்க் முதன்முதலில் புதிய தனிமங்களை நிறமாலையியல் ஆய்வுகளால் பரிந்துரைத்தவர்கள் இராபர்ட்டு பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் ஆகியோராவர். செருமனியில் உள்ள பேடு டர்க்கெய்ம் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற கனிமநீரில் இருந்து வெளிப்பட்ட இரண்டு நீலநிற நிறமாலை வரிகளைக் கொண்டு சீசியம் தனிமத்தை இவர்கள் கண்டறிந்தனர். தூய்மையான சீசியம் பின்னர் 1882 ஆம் ஆண்டில் செட்டில் பெர்க்கால் தனிமைப்படுத்தப்பட்டது.[75] The pure metal was eventually isolated in 1882 by Setterberg.[76]
37 ருபீடியம் 1861 ஆர். பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் ஆர். பன்சன் சீசியம் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் இராபர்ட்டு பன்சன் மற்றும் குசுத்தாவ் கிர்க்காஃப் இருவரும் இலெபிடோலைட்டு கனிமத்தில் இருந்து புதிய நிறமாலை வரிகள் வெளிப்படுவதைக் கண்டனர். பன்சனால் தூய ருபீடியம் தனிமத்தை தயாரிக்க இயலவில்லை, ஆனால் பிற்காலத்தில் எர்வெசி தயாரித்தார்.[77]
81 தாலியம் 1861 1862 வி.குரூக்ஸ் கி.அ- லேமி ருபீடியம் கண்டுபிடிக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பின்னர் வில்லியம் குரூக்ஸ் செலினியம் மாதிரியில் ஒரு புதிய பச்சைநிற நிறமாலை வரிகளைக் கண்டார். பின்னர் அதே ஆண்டின் இறுதியில் கிளாடு அகஸ்தெ லேமி அதை தாலியம் தனிமம் என்றும் அதுவொரு உலோகமென்றும் அடையாளப்படுத்தினார்.[78]
49 இண்டியம் 1863 1867 பெ. ரெய்ச்சுF. மற்றும் தி.ரிக்டர் தி. ரிக்டர் பிரகாசமான கருநீல நிற நிறமாலை வரிகள் இஸ்பாலெரைட் கனிமத்தில் இருந்து உமிழப்படுவதைக் கண்டு பெர்டினாண்டு ரெய்ச் மற்றும் அய்ரோனிமசு தியோடர் ரிக்டர் இருவரும் இண்டியம் தனிமத்தை அடையாளம் கண்டனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு ரிக்டர் இண்டியத்தைத் தனிமைப்படுத்தி பிரித்தார்.[79]
2 ஈலியம் 1868 1895 பியேர் ஜான்சென் மற்றும் என்.லொக்கியர் வி.இராம்சே, தி.கிளீவ், மற்றும் நி.இலாங்லெட் சூரிய நிறமாலையில் காணப்பட்ட மஞ்சள் நிற வரிகளை தனித்தனியே கவனித்த பியேர் ஜான்சன் மற்றும் ஜோசப் நோர்மன் லொக்கியர் இருவரும் அவ்வரிகள் வேறு எந்த தனிமத்தின் நிறமாலை வரிகளோடும் சேராமல் தனித்திருப்பதைக் கண்டனர்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இராம்சே, கிளீவ், இலாங்லெட் முவரும் கிளீவெய்ட்டு கனிமத்தில் ஈலியத்தை தனித்தனியே ஒரே நேரத்தில் கண்டனர்.[80]

1869 திமீத்ரி மெண்டெலீவ் முதலாவது நவீன தனிமவரிசை அட்டவணை அமைக்கப்பட்ட நேரத்தில் அதுவரை கண்டறியப்பட்டிருந்த 64 தனிமங்களையும் அட்டவணையில் பொருத்தி மேலும் பல தனிமங்களைக் குறித்து திமீத்ரி மெண்டலீவ் முன்னுரைத்தார்.
31 காலியம் 1875 பவுல் எமில் புவபோதிரான் பவுல் எமில் புவபோதிரான் பைரினியா பிளெண்ட் கனிமத்தின் மாதிரியில் இருந்து ஈகா அலுமினியம் சார்ந்த சில நிறமாலை வரிகள் வெளிப்படுவதை பவுல் எமில் புவபோதிரான் கண்டுபிடித்தார். 1871 ஆம் ஆண்டிலேயே திமீத்ரி மெண்டலீவ் அதை முன்னுரைத்து தொடர்ந்து மின்னாற்பகுத்தல் முறையில் தனிமைப்படுத்தினார்.[81]
70 இட்டெர்பியம் 1878 1907 சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் சார்செசு அர்பெயின் டெர்பியாவை தூய்மையான டெர்பியா மற்றும் இட்டெர்பியா என்று இரண்டு கனிமங்களாக 1878 ஆம் ஆண்டு அக்டோபர் 22 இல் சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் பிரித்தெடுத்தார்.[82]
67 ஓல்மியம் 1878 மார்க் தெலாபோன்டைன் சாக்குவசு லூயிசு சோரெட்டு மற்றும் பெர் தியோடர் கிளீவ்?? --> அடுத்த ஆண்டில் ஓல்மியத்தை சாமர்சிகைட்டில் இருந்து மார்க் தெலாபோன்டைன் பிரித்தெடுத்தார். சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் கண்டறிந்த எர்பியா கனிமத்தை எர்பியம் தனிமமாகவும் தூலியம் ஒல்மியம் என்ற மேலும் இரண்டு தனிமங்களாகவும் பெர் தியோடர் கிளீவ் பிரித்தார்.[83]
69 தூலியம் 1879 1879 பெர் தியோடர் கிளீவ் தி.கிளீவ் சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் கண்டறிந்த எர்பியா கனிமத்தை எர்பியம் தனிமமாகவும் தூலியம் ஒல்மியம் என்ற மேலும் இரண்டு தனிமங்களாகவும் பெர் தியோடர் கிளீவ் பிரித்தார்.[84]
21 இசுக்காண்டியம் 1879 1879 இலார்சு பிரெடரிக் நில்சன் பி.நில்சன் சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் கண்டறிந்த இட்டெர்பியத்தை இலார்சு பிரெடரிக் நில்சன் தூய்மையான இட்டெர்பியமாகவும் , 1871 இல் மெண்டலீவ் முன்னுரைத்த ஈகா-போரானாகவும் பிரித்தார்.[85]
62 சமாரியம் 1879 1879 பவுல் எமில் புவபோதிரான் பவுல் எமில் புவபோதிரான் ஆக்சைடு தாதுவான சாமர்சிகைட்டில் இருந்து ஒரு புதிய கனிமத்தைக் கண்டறிந்த பவுல் ���மில் புவபோதிரான் அதற்கு சமாரியா என்று பெயரிட்டார்.[86]
64 கடோலினியம் 1880 1886 சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக் பவுல் எமில் புவபோதிரான் தொடக்கத்தில் டெர்பியா என்றழைக்கப்படும் டெர்பியம் மூவாக்சைடு கனிமத்தில் ஒரு புதிய கனிமத்தை கண்டறிந்த சீன் சார்லசு கலிசார்டு தெ மாரிக்னாக்கைத் தொடர்ந்து பவுல் எமில் புவபோதிரான் சாம்ர்சிகைட்டுவில் இருந்து தூய்மையான கடோலினியம் மாதிரியைப் பிரித்தெடுத்தார்.[87]
59 பிரசியோடைமியம் 1885 அ.வான் வெல்சுபாட்சு தனித்துவமிக்க இரண்டு புதிய தனிமங்கள் சிரியாவில் வான் வெல்சுபாச்சால் கண்டறியப்பட்டன. நியோடைமியம் மற்றும் பிரசியோடைமியம் என்பன அவ்வுலோகங்களாகும்.[88]
60 நியோடைமியம் 1885 அ.வான் வெல்சுபாட்சு தனித்துவமிக்க இரண்டு புதிய தனிமங்கள் சிரியாவில் வான் வெல்சுபாச்சால் கண்டறியப்பட்டன. நியோடைமியம் மற்றும் பிரசியோடைமியம் என்பன அவ்வுலோகங்களாகும்.[89]
66 டிசிப்ரோசியம் 1886 பவுல் எமில் புவபோதிரான் எர்பியாவில் [[பவுல் எமில் புவபோதிரான் இப்புதிய தனிமத்தைக் கண்டறிந்தார்.[89]
32 செர்மானியம் 1886 விங்ளர் 1871 ஆம் ஆண்டில் மெண்டலீவ் முன்னுரைத்த ஆர்கைரோடைட்டு எனப்படும் ஈகா – சிலிக்கனை 1886 ஆம் ஆண்டு பிப்ரவரியில் விங்லர் கண்டறிந்தார்.[90]
18 ஆர்கான் 1894 1894 லார்டு இரேலெயிக் மற்றும் வி.இராம்சே லார்டு இரேலெயிக் மற்றும் வி.இராம்சே வேதியியல் முறையில் தயாரிக்கப்பட்ட நைட்ரசன் மற்றும் காற்றை நீர்மமாக்கும் போது தயாரிக்கப்பட்ட நைட்ரசன் ஆகியவற்றின் மூலக்கூறு எடைகளை ஒப்பிடும்போது அவர்கள் இவ்வாயுவைக் கண்டறிந்தனர். முதலில் தனிமைப்படுத்தப்பட முதல் மந்தவாயு இதுவாகும்.[91]
36 கிரிப்டான் 1898 1898 வி.இராம்சே மற்றும் வி. திராவர்சு வி. இராம்சே மற்றும் வி திராவர்சு 1898 ஆம் ஆண்டு மே 30 அன்று இராம்சே, திரவநிலை ஆர்கானின் கொதிநிலையில் இருந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி ஒரு புதிய மந்தவாயுவை தனித்துப் பிரித்தார்.[92]
10 நியான் 1898 1898 வி.இராம்சே மற்றும் வி. திராவர்சு ''வி. இராம்சே மற்றும் வி திராவர்சு சூன் 1898 ஆம் ஆண்டில் இராம்சே, திரவநிலை ஆர்கானின் கொதிநிலையில் இருந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி ஒரு புதிய மந்தவாயுவை தனித்துப் பிரித்தார்.[92]
54 செனான் 1898 1898 வி. இராம்சே மற்றும் வி திராவர்சு வி. இராம்சே மற்றும் வி திராவர்சு 1898 ஆம் ஆண்டின் சூலை 12 இல் இராம்சே , திரவநிலை ஆர்கானின் கொதிநிலையில் இருந்த வேறுபாட்டைப் பயன்படுத்தி மூன்றாவது புதிய மந்தவாயுவை தனித்துப் பிரித்தார்.[93]
84 பொலோனியம் 1898 1902 பியேர் கியூரி மற்றும் மேரி கியூரி வி.மார்க்வால்டு 1898 ஆம் ஆண்டு் சூலை 13 அன்று கியூரி இணை மேற்கொண்ட ஓர் ஆய்வில் பிட்ச்பிளெண்டு தாதுவில் இருந்து பெறப்பட்ட் யுரேனியத்தில் கதிரியக்கத்தின் அளவு அதிகரித்திருப்பதைக் கவனித்தார்கள் . பின்னர்தான் இதையொரு அறியப்படாத தனிமம் என்று குறித்துக்காட்டினார்கள்.[94]
88 ரேடியம் 1898 1902 பி. மற்றும் மே.கியூரி மே.கியூரி பொலோனியத்தில் இருந்து மாறுபட்ட ஒரு புதிய தனிமம் இருப்பதாக 1898 ஆம் ஆண்டு திசம்பர் 26 இல் கியூரி இணை அறிவித்தார்கள். பின்னர், யுரேனைட்டில் இருந்து மேரி கியூரி இதைத் தனித்துப் பிரித்தார்.[95]
86 ரேடான் 1898 1910 எ.டார்ண் வி.இராம்சே மற்றும் இரா.விட்லா கிரே ரேடியம் கதிரியக்கச் சிதைவின் போது ஒரு கதிரியக்க வாயுவாக மாற்றமைடைவதை டார்ன் கண்டறிந்தார். பின்னர் இராம்சே மற்றும் கிரே அதை தனித்துப் பிரித்தனர். Gray.[96][97]
89 ஆக்டினியம் 1899 1899 ஆ-லூ.டெபைர்ன் ஆ.லூ.டெபைர்ன் பிட்சிபிளென்டு தாதுவில் தோரியத்திற்கு நிகரான ஒரு தனிமமாக ஆக்டினியம் இருப்பதை ஆண்டுரெ லூயிசு டெபைம் கண்டறிந்தார்.[98]
63 யூரோப்பியம் 1896 1901 யூ.அ.டெமார்கே யூ.அ.டெமார்கே லெக்கோக் கண்டறிந்த சமாரியத்தில் ஒரு புதிய தனிமம் யூரோப்பியத்தின் அலைமாலை வரிகளை யூகின் அனடால் டெமார்கெ கண்டறிந்தார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து அதைத் தனித்துப் பிரித்தெடுத்தார்.[99]
71 லியுதேத்தியம் 1906 1906 ஜா.அர்பெயின் மற்றும் காரல் அவுர் வோன் வெல்சுபேட்சு ஜா.அர்பெயின் மற்றும் கா.அ.வான் வெல்சுபேட்சு இட்டெர்பியம் தனிமத்தில் லியுத்தேத்தியமும் கலந்து இருக்கிறதென அர்பெயின் மற்றும் காரல் அவுர் வோன் வெல்சுபேட்சு ஆகியோர் நிருபித்தனர்.[100]
75 ரீனியம் 1908 1925 ம.ஒகாவா ம.ஒகாவா தோரியனைட்டில் தாதுவில் இருந்து ரீனியத்தைக் கண்டறிந்த ஒகாவா இதை 75 ஆவது தனிமம் என்று அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக 43 ஆவது தனிமம் என்று அடையாளப்படுத்தி நிப்போனியம் என்று பெயரிட்டார்.[101] 1922 ஆம் ஆண்டில் வால்டர் நோடாக்கு , ஐடா நோடாக்கு மற்றும் ஓட்டோ பெர்கு ஆகியோர் கடோலினைட்டு தாதுவில் இருந்து இத்தனிமத்தைப் பிரித்தெடுத்து ரீனியம் என்று பெயரிட்டனர்.[58]
72 ஆஃபினியம் 1911 1922 ஜி.அர்பெயின் மற்றும் விளாதிமிர் வெர்னாத்ஸ்கி டி.காசுடர் மற்றும் ஜியார்ஜ் டி கிவிசி அருமண் எச்சங்களில் ஆபினியம் காணப்பட்டதாக அர்பெயின் தெரிவித்தார். அதேநேரத்தில் வெர்னாத்ஸ்கி ஆர்தைட் தாதுவில் ஆபினியம் உள்ளதென தனியராக கண்டறிந்தார். முதல் உலகப் போர் சூழல் காரணமாக இரண்டு கண்டுபிடிப்புகளுமே உறுதி செய்யப்படவில்லை. காசுடர் மற்றும் கிவிசி இருவரும் தங்களுடைய எக்சு கதிர் நிறமாலையியல் ஆய்வில் நார்வே நாட்டின் சிர்க்கான் தாதுவில் காணப்பட்டதை கண்டறிந்தனர்[102]. கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலைப்புத் தன்மைமிக்க கடைசி உலோகமாக ஆபினியம் விளங்கியது.[103]
91 புரோடாக்டினியம் 1913 ஆ.எ.கோக்ரிங் மற்றும்கா.பாசன்சு புரோடாக்டினியத்தின் முதலாவது ஓரிடத்தனை இவர்கள் இருவரும் கண்டறிந்தனர். 1871 ஆம் ஆண்டிலேயே திமீத்ரி மெண்டெலீவ் இதை யுரேனியத்தின் (238U)இயற்கையான கதிரியக்கச் சிதைவு வரிசைத் தனிமம் என்று முன்னுணர்ந்து கூறியுள்ளார். வில்லியம் குரூக்சு 1900 ஆம் ஆண்டில் தனித்துப்பிரித்தார்.[104][105]
43 டெக்னீசியம் 1937 1937 கா.பெர்ரியர் மற்றும் எமீலியோ சேக்ரே கா.பெர்ரியர் மற்றும் எ.சேக்ரே இருவரும் மாலிப்டினம் மாதிரியான ஒரு புதிய தனிமத்தைக் கண்டுபிடித்தனர். முதன் முதலில் கண்டறியப்பட்ட செயற்கைத் தனிமமான டெக்னீசியம் சுழற்சியலைவியில் உபயோகப்படுத்தப்படுகிறது. 1871 ஆம் ஆண்டிலேயே திமீத்ரி மெண்டெலீவ் இதை முன்னுணர்ந்து இகா மாங்கனீசு என்ற பெயரையும் வைத்துள்ளார்.[106][107]
87 பிரான்சியம் 1939 மா.பெர்ரி மார்க்குரைட் பெர்ரி இதை ஆக்டினைடு தனிமத்தின் (227Ac) கதிரியக்கச் சிதைவுத் தனிமமாகவே கண்டறிந்தார்.[108] இயற்கையில் கண்டறியக்கூடிய கடைசித் தனிமம் பிரான்சியம் ஆகும். மற்றவை ஆய்வகத்தில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டன. இருந்தாலும் புளுட்டோனியம், நெப்டியூனியம், அசுட்டட்டைன் போன்ற சில செயற்கைத் தனிமங்கள் பின்னர் இயற்கையில் மிகச்சிறிதளவு உள்ளதாக அறியப்பட்டது.[109]
85 அசுட்டாடைன் 1940 ஆர் கார்சன், ரோ.மெக்கன்சி மற்றும் எமீலியோ சேக்ரே பிசுமத்தை ஆல்பா துகள்களால் தொடர்ச்சியாகத் தாக்கி அசுட்டாடைன் தயாரிக்கப்பட்டது.[110] புவியின் மேலோட்டில் இயற்கையாகவே இது மிகச் சிறிதளவு (25 கிராம்களுக்குக் குறைவாக) காணப்படுகிறது என்று பின்னர் கண்டறியப்பட்டது.[111]
93 நெப்டியூனியம் 1940 எட்வின் மாக்மிலன் மற்றும் எ.அபெல்சன் யுரேனியத்தை நியூட்ரான்களின் கதிரியக்கத் தாக்குதலுக்கு உட்படுத்தி நெப்டியூனியம் தயாரிக்கப்பட்டது. முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட யுரேனியப் பின் தனிமம் இதுவாகும்.[112]
94 புளுட்டோனியம் 1940–1941 கிளேன்.தி.சீபோர்க்கு, ஆர்தர் சி வாக்ல், வி.கென்னடி மற்றும் எட்வின் மாக்மிலன் யுரேனியத்தை டியூட்ரான் துகள்களால் தாக்கி புளூட்டோனியம் தயாரிக்கப்பட்டது.[113]
95 அமெரிசியம் 1944 ஜி.தி.சீபோர்க்கு, ஏ.சேம்சு, ஒ.மார்கான் மற்றும் ஆல்பர்டு.கெயோர்சோ மன்காட்டன் திட்டத்தின் போது புளுட்டோனியத்தை நியூட்ரான்களின் கதிர்வீச்சுத் தாக்குதலுக்கு உட்படுத்தி அமெரிசியம் தயாரிக்கப்பட்டது.[114]
96 கியூரியம் 1944 ஜி.தி.சீபோர்க்கு, ஆர்.ஏ.சேம்சு மற்றும் ஆல்பர்டு.கெயோர்சோ மன்காட்டன் திட்டத்தின் போது புளுட்டோனியத்தை ஆல்பா துகள்களால் தொடர்ந்து தாக்கி கியூரியம் தயாரிக்கப்பட்டது.[115]
61 புரோமித்தியம் 1942 1945 செ.வூ, எமீலியோ சேக்ரே மற்றும் ஆ.பெத்தே சார்லசு தி.கோர்யெல், சேக்கப் அ.மாரின்சிகி, லாரன்சு இ. கிளெண்டினின்,மற்றும் அரோல்டு க.ரிக்டர் நியோடைமியம் மற்றும் பிரிசியோடைமியம் ஆகியனவற்றை நியூட்ரான்களால் தொடர் தாக்குதலுக்கு உட்படுத்தி 1942 ஆம் ஆண்டில் முதன்முதலாக புரோமித்தியம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தனிமத்தைத் தனித்துப் பிரித்தல் இயலாமல் இருந்தது. 1945 ஆம் ஆண்டில் மன்காட்டன் திட்டத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.[88]
97 பெர்க்கிலியம் 1949 இஸ்டான்லி ஜெரால்டு தாம்சன் , ஆல்பர்டு.கெயோர்சோ மற்றும் கிளேன்.தி.சீபோர்க்கு ஆல்ஃபா துகள்களைக் கொண்டு அமெரிசியத்தை தொடர்ச்சியாக தாக்கி இதைத் தயாரித்தார்கள் [116]
98 காலிபோர்னியம் 1950 இஸ்டான்லி ஜெரால்டு தாம்சன், கெ.ஸ்ட்ரீட், ஆல்பர்டு.கெயோர்சோ மற்றும் கிளென்.தி.சீபோர்க்கு ஆல்ஃபா துகள்களைக் கொண்டு கியூரியத்தை தொடர்ச்சியாக தாக்கி இதைத் தயாரித்தார்கள்[117]
99 ஐன்சுடைனியம் 1952 1952 ஆல்பர்டு.கெயோர்சோ யுரேனியத்தை நியூட்ரான்களால் கதிர்வீச்சுத் தாக்குதலால் நிகழ்த்தி நவம்பர் 1952 இல் வெப்ப ஆற்றல் வெடிப்பு உருவாக்கப்பட்டபோது இத்தனிமம் உருவானது. பல ஆண்டுகளாக இந்நிகழ்வு இரகசியமாக வைத்திருக்கப்பட்டது.[118]
100 பெர்மியம் 1952 ஆல்பர்டு கெயோர்சோ யுரேனியத்தை நியூட்ரான்களால் கதிர்வீச்சுத் தாக்குதலால் நிகழ்த்தி நவம்பர் 1952 இல் வெப்ப ஆற்றல் வெடிப்பு உருவாக்கப்பட்டபோது இத்தனிமம் உருவானது. பல ஆண்டுகளாக இந்நிகழ்வு இரகசியமாக வைத்திருக்கப்பட்டது.[119]
101 மெண்டலீவியம் 1955 ஆல்பர்டு.கெயோர்சோ, எஸ்.ஜி.தாம்சன் மற்றும் சிபோர்க்கு ஈலியம் சேர்ந்த ஐன்சுடைனியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[120]
102 நொபிலியம் 1958 ஆல்பர்டு.கெயோர்சோ, தோ.சிக்கிலேண்டு, மற்றும் சிபோர்க்கு கார்பன் அணுக்கள் சேர்ந்த கியூரியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் நொபிலியத்தைத் தயாரிக்கலாம்.[121]
103 லாரன்சியம் 1961 ஆல்பர்டு.கெயோர்சோ, தோர்ப்சான் சிக்கிலேண்டு போரான் அணுக்கள் சேர்ந்த காலிபோர்னியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் முதலில் இதைத் தயாரித்தார்கள்.[122]
104 ரூதர்போர்டியம் 1968 ஆல்பர்டு.கெயோர்சோ, கார்பன் அணுக்கள் சேர்ந்த காலிபோர்னியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[123]
105 தூப்னியம் 1970 ஆல்பர்டு.கெயோர்சோ, நைட்ரசன் சேர்ந்த காலிபோர்னியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[124]
106 சீபோர்கியம் 1974 ஆல்பர்டு.கெயோர்சோ, சே.நிட்செக்கி, சே.அலோன்சோ, க.அலோன்சோ, கிளேன் தி.சீபெர்க்கு, காலிபோர்னியம் 249 அணுவின் மீது ஆக்சிசன்அணுக்கள் மோதுவதால் சீபோர்கியம் உண்டாகிறது.[125]
107 போ��ியம் 1981 காட்பிரீடு மூன்சென்பெர்கு குரோமியம் சேர்ந்த பிசுமத்தை [126]
109 மெய்ட்னீரியம் 1982 காட்பிரடு மூன்சென்பெர்கு, பீ.அம்புருசிடர் இரும்பு அணுக்கள் சேர்ந்த பிசுமத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[127]
108 ஆசியம் 1984 காட்பிரீடு மூன்சென்பெர்கு, பீட்டர் அம்புருசிடர் இரும்பு அணுக்கள் சேர்ந்த ஈயத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் இதைத் தயாரிக்கலாம்.[128]
110 டார்ம்சிட்டாட்டியம் 1994 சிகார்டு ஆஃப்மான் நிக்கல் சேர்ந்த ஈயத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[129]
111 இரோயன்ட்கெனியம் 1994 சிகார்டு ஆஃப்மான் நிக்கல் சேர்ந்த பிசுமத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[130]
112 கோப்பர்நீசியம் 1996 சிகார்டு ஆஃப்மான் துத்தநாகம் சேர்ந்த ஈயத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[131][132]
114 பிளெரோவியம் 1999 யூரி ஒகானேசியன் அணுக்கரு ஆய்வக இணை நிறுவனம் , டப்னா கால்சியம் சேர்ந்த புளுட்டோனியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[133]
116 லிவர்மோரியம் 2000 யூரி ஒகானேசியன் அணுக்கரு ஆய்வக இணை நிறுவனம் , டப்னா கால்சியம் சேர்ந்த கியூரியத்தை தொடர்ந்து தாக்குவதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.[134]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Copper History". Rameria.com. Archived from the original on 2008-09-17. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  2. "CSA ��� Discovery Guides, A Brief History of Copper". Archived from the original on 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2015-05-20.
  3. "The History of Lead – Part 3". Lead.org.au. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  4. 47 Silver
  5. "Silver Facts – Periodic Table of the Elements". Chemistry.about.com. Archived from the original on 2016-11-21. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  6. "26 Iron". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  7. Weeks, Mary Elvira; Leichester, Henry M. (1968). "Elements Known to the Ancients". Discovery of the Elements. Easton, PA: Journal of Chemical Education. pp. 29–40. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-3872-0. LCCCN 68-15217.
  8. "Notes on the Significance of the First Persian Empire in World History". Courses.wcupa.edu. Archived from the original on 2010-07-20. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  9. "History of Carbon and Carbon Materials – Center for Applied Energy Research – University of Kentucky". Caer.uky.edu. Archived from the original on 2012-11-01. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  10. Ferchault de Réaumur, R-A (1722). L'art de convertir le fer forgé en acier, et l'art d'adoucir le fer fondu, ou de faire des ouvrages de fer fondu aussi finis que le fer forgé (English translation from 1956). Paris, Chicago.
  11. "Chinese made first use of diamond". BBC News. 17 May 2005. http://news.bbc.co.uk/2/hi/science/nature/4555235.stm. பார்த்த நாள்: 2007-03-21. 
  12. "50 Tin". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  13. "History of Metals". Neon.mems.cmu.edu. Archived from the original on 2007-01-08. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  14. "Sulfur History". Georgiagulfsulfur.com. Archived from the original on 2008-09-16. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  15. "Mercury and the environment — Basic facts". Environment Canada, Federal Government of Canada. 2004. பார்க்கப்பட்ட நாள் 2008-03-27. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  16. Craddock, P. T. et al. (1983), "Zinc production in medieval India", World Archaeology 15 (2), Industrial Archaeology, p. 13
  17. "30 Zinc". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  18. Weeks, Mary Elvira (1933). "III. Some Eighteenth-Century Metals". The Discovery of the Elements. Easton, PA: Journal of Chemical Education. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7661-3872-0.
  19. 19.0 19.1 "Arsenic". Los Alamos National Laboratory. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
  20. SHORTLAND, A. J. (2006-11-01). "APPLICATION OF LEAD ISOTOPE ANALYSIS TO A WIDE RANGE OF LATE BRONZE AGE EGYPTIAN MATERIALS". Archaeometry 48 (4): 657–669. doi:10.1111/j.1475-4754.2006.00279.x. 
  21. "15 Phosphorus". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  22. "27 Cobalt". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  23. "78 Platinum". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  24. "28 Nickel". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  25. "Bismuth". Los Alamos National Laboratory. பார்க்கப்பட்ட நாள் 3 March 2013.
  26. "12 Magnesium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  27. "01 Hydrogen". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  28. Andrews, A. C. (1968). "Oxygen". In Clifford A. Hampel (ed.). The Encyclopedia of the Chemical Elements. New York: Reinhold Book Corporation. pp. 272. LCCN 68-29938.
  29. "08 Oxygen". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  30. Cook, Gerhard A.; Lauer, Carol M. (1968). "Oxygen". In Clifford A. Hampel (ed.). The Encyclopedia of the Chemical Elements. New York: Reinhold Book Corporation. pp. 499–500. LCCN 68-29938.
  31. Roza, Greg (2010). The Nitrogen Elements: Nitrogen, Phosphorus, Arsenic, Antimony, Bismuth. pp. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781435853355.
  32. "07 Nitrogen". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  33. "17 Chlorine". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  34. "25 Manganese". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  35. "56 Barium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  36. "42 Molybdenum". Elements.vanderkrogt.net. Archived from the original on 2010-01-23. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  37. "52 Tellurium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  38. IUPAC. "74 Tungsten". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  39. "38 Strontium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  40. "Lavoisier". Homepage.mac.com. Archived from the original on 2002-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  41. "Chronology – Elementymology". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  42. Lide, David R., தொகுப்பாசிரியர் (2007–2008). "Zirconium". CRC Handbook of Chemistry and Physics. 4. New York: CRC Press. பக். 42. 978-0-8493-0488-0. 
  43. M. H. Klaproth (1789). "Chemische Untersuchung des Uranits, einer neuentdeckten metallischen Substanz". Chemische Annalen 2: 387–403. 
  44. E.-M. Péligot (1842). "Recherches Sur L'Uranium". Annales de chimie et de physique 5 (5): 5–47. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k34746s/f4.table. 
  45. "Titanium". Los Alamos National Laboratory. 2004. பார்க்கப்பட்ட நாள் 2006-12-29.
  46. Barksdale, Jelks (1968). The Encyclopedia of the Chemical Elements. Skokie, Illinois: Reinhold Book Corporation. pp. 732–38 "Titanium". LCCCN 68-29938.
  47. Browning, Philip Embury (1917). "Introduction to the Rarer Elements". Kongl. Vet. Acad. Handl. XV: 137. http://books.google.com/?id=VV5KAAAAMAAJ&pg=PA46&lpg=PA46&dq=Yttrium+discovery. 
  48. Crell Anal. I: 313. 1796. 
  49. Vauquelin, Louis Nicolas (1798). "Memoir on a New Metallic Acid which exists in the Red Lead of Sibiria". Journal of Natural Philosophy, Chemistry, and the Art 3: 146. http://books.google.com/?id=6dgPAAAAQAAJ. 
  50. "04 Beryllium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  51. "23 Vanadium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  52. "41 Niobium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  53. "73 Tantalum". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  54. "46 Palladium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  55. "58 Cerium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  56. "76 Osmium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  57. "77 Iridium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  58. 58.0 58.1 "45 Rhodium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  59. "19 Potassium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  60. 60.0 60.1 "11 Sodium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  61. "05 Boron". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  62. "09 Fluorine". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  63. "53 Iodine". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  64. "03 Lithium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  65. "48 Cadmium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  66. "34 Selenium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  67. "14 Silicon". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  68. "13 Aluminium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  69. "35 Bromine". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  70. "90 Thorium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  71. "57 Lanthanum". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  72. "68 Erbium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  73. "65 Terbium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  74. "44 Ruthenium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  75. "55 Caesium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  76. "Caesium". Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
  77. "37 Rubidium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  78. "81 Thallium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  79. "49 Indium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  80. "02 Helium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  81. "31 Gallium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  82. "70 Ytterbium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  83. "67 Holmium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  84. "69 Thulium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  85. "21 Scandium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  86. "62 Samarium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  87. "64 Gadolinium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  88. 88.0 88.1 "59 Praseodymium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  89. 89.0 89.1 "60 Neodymium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  90. "32 Germanium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  91. "18 Argon". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  92. 92.0 92.1 "10 Neon". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  93. "54 Xenon". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  94. "84 Polonium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  95. "88 Radium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  96. Partington, J. R. (May 1957). "Discovery of Radon". நேச்சர் 179 (4566): 912. doi:10.1038/179912a0. Bibcode: 1957Natur.179..912P. 
  97. Ramsay, W.; Gray, R. W. (1910). "La densité de l'emanation du radium". Comptes rendus hebdomadaires des séances de l'Académie des sciences 151: 126–128. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k31042/f126.table. 
  98. "89 Actinium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  99. "63 Europium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  100. "71 Lutetium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  101. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2008-10-03. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.
  102. "72 Hafnium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  103. Noddack, W.; Tacke, I.; Berg, O (1925). "Die Ekamangane". Naturwissenschaften 13 (26): 567. doi:10.1007/BF01558746. Bibcode: 1925NW.....13..567.. https://archive.org/details/sim_naturwissenschaften_1925-06-26_13_26/page/n1. 
  104. "91 Protactinium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  105. Emsley, John (2001). Nature's Building Blocks ((Hardcover, First Edition) ed.). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 347. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-850340-7.
  106. "43 Technetium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  107. History of the Origin of the Chemical Elements and Their Discoverers, Individual Element Names and History, "Technetium"
  108. "87 Francium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  109. Adloff, Jean-Pierre; Kaufman, George B. (2005-09-25). Francium (Atomic Number 87), the Last Discovered Natural Element பரணிடப்பட்டது 2013-06-04 at the வந்தவழி இயந்திரம். The Chemical Educator 10 (5). [2007-03-26]
  110. "85 Astatine". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  111. Close, Frank E. (2004). Particle Physics: A Very Short Introduction. Oxford University Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-280434-1.
  112. "93 Neptunium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  113. "94 Plutonium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  114. "95 Americium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  115. "96 Curium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  116. "97 Berkelium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  117. "98 Californium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  118. "99 Einsteinium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  119. "100 Fermium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  120. "101 Mendelevium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  121. "102 Nobelium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  122. "103 Lawrencium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  123. "104 Rutherfordium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  124. "105 Dubnium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  125. "106 Seaborgium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  126. "107 Bohrium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  127. "109 Meitnerium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  128. "108 Hassium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  129. "110 Darmstadtium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  130. "111 Roentgenium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  131. "112 Copernicium". Elements.vanderkrogt.net. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  132. "Discovery of the Element with Atomic Number 112". www.iupac.org. 2009-06-26. Archived from the original on 2009-12-21. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  133. Oganessian, Yu. Ts.; Utyonkov, V. K.; Lobanov, Yu. V.; Abdullin, F. Sh.; Polyakov, A. N.; Shirokovsky, I. V.; Tsyganov, Yu. S.; Gulbekian, G. G. et al. (October 1999). "Synthesis of Superheavy Nuclei in the 48Ca + 244Pu Reaction". Physical Review Letters 83 (16): 3154. doi:10.1103/PhysRevLett.83.3154. Bibcode: 1999PhRvL..83.3154O. 
  134. Oganessian, Yu. Ts.; Utyonkov, V. K.; Lobanov, Yu. V.; Abdullin, F. Sh.; Polyakov, A. N.; Shirokovsky, I. V.; Tsyganov, Yu. S.; Gulbekian, G. G. et al. (2000). "Observation of the decay of 292116". Physical Review C 63: 011301. doi:10.1103/PhysRevC.63.011301. Bibcode: 2001PhRvC..63a1301O.