காலடியணையக் கட்டமைப்பு
உயிரியலில் காலடியணையக் (pedate) கட்டமைப்பு அல்லது இணைதாள் மடல் கட்டமைப்பு என்பது மாந்தனின் காலடியை நினைவூட்டும் அல்லது காலடியொத்த பண்புள்ள பின்னற் கட்டமைப்பாகும்.
தாவரங்கள்
[தொகு]தாவரவியலாக, இச்சொல் கூட்டிலைகளையும் கூட்டு நரம்பமைவையும் ஒத்த பிற தாவரக் கட்டமைவுகளையும் குறிக்கிறது. இந்த அமைப்பில் இக்கட்டமைப்பு ஒரு நடுமையப் புள்ளியில் தோன்றிப் பிரிந்து பரவும், பிறகு வேண்டுமானால் ஒவ்வொரு உட்பிரிவும் இரண்டாக நுகம்போல கிளைக்கும்.[1] மிக அகல்விரிவாக, இது இறுதியில் சிற்றிலைகள் கிளைக்கும் கூட்டிலையைக் குறிக்கலாம். இலையின் அச்சுகள் இருபுறமும் பிரிந்து செல்வதோடு அவை முன்னும் பின்னும் வெளிப்புறமோ உட்புறமோ வளைந்து செல்லும். அச்சின் வெளிப்புற வளைவில் சிற்றிலைகளைப் பெற்றமையும்.[2] இதற்கு இணைதாள் மடற் கட்டமைப்புக்குப் பனை மட்டை நல்ல எடுத்துகாட்டாகும்
விலங்குகள்
[தொகு]விலங்குகளில் "pedate" எனும் சொல் "காலுள்ள" எனும் பொருளில் வழங்குகிறது. இது முட்தோலிகளின் பின்னற் குழல்காலடிகளையும் முதுகென்பிகளின் இணைகால்களையும் குறிக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Harris, James G.; Harris, Melinda Woolf (1994). Plant Identification Terminology (2nd ed.). Spring Lake, Utah: Spring Lake Publishing. p. 81. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9640221-6-8.
- ↑ Walters, Stuart Max (2000). The European garden flora. Cambridge University Press. p. 674.