உள்ளடக்கத்துக்குச் செல்

காந்தி உலக குடும்ப பதக்கமும் விருதும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய விமானப்படை அதிகாரிக்கு மகாத்மா காந்தி விருதை குலாம் நபி ஆசாத் & ஆளுநர் ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா மற்றும் பத்மஸ்ரீ எஸ். பி. வர்மா வழங்கினர்

காந்தி உலக குடும்ப பதக்கமும்  விருதும் (Gandhi Global Family medals and awards) என்பது காந்தி உலக குடும்பத்தின் சார்பில் சமூகத்திற்கான பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் விருதுகள்.

காந்தி உலக குடும்பம்பதக்கங்கள்/விருதுகள்

[தொகு]
விருது தகுதிகள்
மகாத்மா காந்தி விருது அனைவருக்கும்
மகாத்மா காந்தி சேவா பதக்கம் அனைவருக்கும்
காந்தி உலக தூதுவர் விருது அனைவருக்கும்
காந்தி தூத் பதக்கம் மாணவர்களுக்கு

மகாத்மா காந்தி விருதுகள்

[தொகு]

மகாத்���ா காந்தி விருது காந்தி உலக குடும்பத்தால் வழங்கப்படும் மிக உயரிய விருது ஆகும். இந்திய சுதந்திர இயக்கத்தின் தலைவரான மகாத்மா காந்தியின் நினைவாக இந்த விருது பெயரிடப்பட்டது. 2005 காஷ்மீர் நிலநடுக்கத்திற்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் செய்ததற்காக இந்திய வான்படை மற்றும் இந்தியத் தரைப்படை மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்காக சதானக்வாசியின் ஜெயின் ஆச்சார்யா சாம்ராட் சிவ் முனி ஜி மகாராஜ் ஆகியோர் மகாத்மா காந்தி விருது பெற்றவர்கள்.[1]

மகாத்மா காந்தி சேவா பதக்கம்

[தொகு]

மகாத்மா காந்தி சேவா பதக்கம் இரண்டாவது மிக உயர்ந்த விருது. வறிய பிரிவினருக்கு வழங்கப்படும் சிறந்த சேவைகளை அங்கீகரித்துத் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இது வழங்கப்படுகிறது. மகாத்மா காந்தி சேவா பதக்கத்தைப் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்களில் தலாய் லாமா, மேனாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன், தலைவர் & இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி, மக்களவைத் தலைவர் மீரா குமார், முன்னாள் ஒடிசா முதல்வரும் தற்போதைய அசாம் ஆளுநருமான ஜானகி பல்லப் பட்நாயக் ஆகியோர் அடங்குவர். முன்னாள் இந்திய தரைப்படைத் தளபதியும் அருணாச்சலப் பிரதேச ஆளுநருமான ஜோகிந்தர் ஜஸ்வந்த் சிங், இந்திய இளையோர் விடுதி சங்கத் தலைவர் ஹரிஷ் சக்சேனா, சாகிப் பந்த்கியைச் சேர்ந்த சத்குரு மது பரமன்சு,[2] தாய் துறவி வென் பிரராஜபவனாவிசுத், பொதுச் செயலாளர், சார்க்லா ஹேமந்த் பத்ரா.[3][4][5][6]

நிரன்கரி பாபா அர்தேவ் சிங் ஜி, சந்த் நிரங்காரி சேவையினைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 26 நவம்பர் 2013 அன்று இந்தப் பதக்கத்தைப் பெற்றார்.[7][8] இராஜ்சந்திரா மிசன் தரம்பூரின் நிறுவனர் மற்றும் இராஜ்சந்திரா லவ் அண்ட் கேர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமான பூஜ்ய குருதேவ்ஸ்ரீ ராகேஷ்பாய் 2017-இல் பெற்றவர் [9]

நிறுவன தூதுவர்

[தொகு]

நிறுவன தூதுவர் என்பது மூன்றாவது மிக உயர்ந்த விருது.

காந்தி தூத் பதக்கம்

[தொகு]

காந்தி தூத் பதக்கம் நான்காவது உயரிய விருதாகும். இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கும் மாணவர் அல்லது மாணவர் அமைப்புக்கு இது வழங்கப்படுகிறது.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gandhi Global Family decorates His Holiness Dalia Lama with "Mahatma Gandhi Seva Medal" | Adilmohd's Blog". Adilmohdblog.com. 2012-07-15. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  2. https://www.youtube.com/watch?v=G74YLpNmb_A Award video Mission(Bhring Mat)
  3. "Dr. Harish K. Saxena, National President, YHAI was awarded Mahatma Gandhi Seva Medal". Yhaindia.org. 2012-10-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  4. "Orissa: Gandhi Seva Medal Conferred on KIIT's Dr. Samanta, Odisha Current News, Odisha Latest Headlines". Orissadiary.com. 2010-06-24. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  5. "Phrarajabhavanavisudh - FanBox.com". Blogs.fanbox.com. Archived from the original on 2013-10-19. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  6. "Port Blair | GGF decorates Lall with Mahatma Gandhi Seva Medal". The Echo of India. 2012-08-13. Archived from the original on 2013-10-20. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.
  7. "GGF presents Mahatma Gandhi Seva Medal to Sant Nirankari Mission". பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  8. "GGF presents Mahatma Gandhi Seva Medal to SNM". Jammu Kashmir Newspoint. Archived from the original on 11 December 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2013.
  9. "Gandhi Global Family awards the prestigious Gandhi Seva Medal to Pujya Gurudevshri". Shrimad Rajchandra Mission Dharampur. Shrimad Rajchandra Mission Dharampur. பார்க்கப்பட்ட நாள் 9 November 2017.
  10. "Daily Excelsior". Daily Excelsior. 2013-05-25. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.