உள்ளடக்கத்துக்குச் செல்

கலோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலோஸ் என்பது ஒரு தாவர பல்சக்கரைட் ஆகும். β-1,3 பிணைப்புகளால் பிணைக்கப்பட்ட குளுக்கோசு ஒருபகுதியங்களாலானது. கலோஸ் ஒரு கட்டமைப்புப் பலத்தை வழங்கும் பல்சக்கரைட்டாகும். இது தாவரங்களின் கலச்சுவரில் கலோஸ் தொகுப்பி எனும் நொதியத்தால் தொகுக்கப்படுகின்றது. β-1,3 குளுக்கானேசு எனும் நொதியத்தைப் பயன்படுத்தி குளுக்கோசு ஒருபகுதியங்களாகப் பிரித்தெடுக்கலாம். மகரந்தங்களின் விருத்தியின் போது மகரந்தக்கூடுகளின் சுவர்களில் இப்பல்சக்கரைட்டு சேமிக்கப்படுகின்றது. தாவர வளர்ச்சிக் காலத்தின் இறுதியில் கலோஸ் படிவுகள் தாவர உரியத்தின் நெய்யரித்தட்டுகளில் படிவுகளாகப் படிகின்றது. தாவரக் கலங்கள் காயப்படும்போதும் அமிலங்களால் தாக்கப்பட்டாலும் கலோஸ் படிவுகள் அவ்விடங்களில் தோன்றுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hine R, Martin E, eds. (2016). "Callose". A Dictionary of Biology. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-871437-8.
  2. "Callose homeostasis at plasmodesmata: molecular regulators and developmental relevance". Frontiers in Plant Science 5: 138. 2014. doi:10.3389/fpls.2014.00138. பப்மெட்:24795733. 
  3. Nowicki, Marcin; Lichocka, Małgorzata; Nowakowska, Marzena; Kłosińska, Urszula; Kozik, Elżbieta U. (January 2012). "A Simple Dual Stain for Detailed Investigations of Plant-Fungal Pathogen Interactions". Vegetable Crops Research Bulletin 77 (1): 61–74. doi:10.2478/v10032-012-0016-z. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலோஸ்&oldid=4165073" இலிருந்து மீள்விக்கப்பட்டது