கன்னாட்டு பிளேசு, புது தில்லி
கன்னாட்டு பிளேசு
இராசீவ் சௌக்கு | |
---|---|
அண்டையயல் | |
அடைபெயர்(கள்): சீப்பீ | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | புதுதில்லி |
பெயர்ச்சூட்டு | கன்னாட்டு & இசுட்ராதெரன் பிரபு |
அரசு | |
• நிர்வாகம் | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
மொழிகள் | |
• அலுவல் | பஞ்சாபி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
பின் | 110001 |
மக்களவை (இந்தியா) தொகுதி | புது தில்லி |
உள்ளாட்சி அமைப்பு | புது தில்லி மாநகராட்சி மன்றம் |
கன்னாட்டு பிளேசு (Connaught Place, இந்தி: कनॉट प्लेस, Punjabi: ਕਨਾਟ ਪਲੇਸ, உருது: کناٹ پلیس, Sindhi:ڪناٽ پليس, அலுவல்முறையாக ராஜீவ் சௌக்) இந்தியாவின் புது தில்லியிலுள்ள மிகப் பெரும் நிதிய, வணிக, அங்காடி வளாகமாகும். இது பரவலாக சுருக்கப்பட்டு சீப்பீ என அழைக்கப்படுகின்றது. இங்கு பல பெரிய இந்திய நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்குகின்றன. பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின் தலைமையிடமாக விளங்கிய இவ்விடம் நகரின் மிகப் பெருமையான இடமாக விளங்குகின்றது; புது தில்லியிலுள்ள பாரம்பரியக் கட்டிடங்களில் பல இங்கு அமைந்துள்ளன. லுட்யெனின் தில்லியில் இது முக்கியமான மைய வணிக மாவட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
படைத்துறை உயர்தர தளபதி, கன்னாட்டு மற்றும் இசுட்ராதெரனின் முதலாம் பிரபு, இளவரசர் ஆர்த்தரின் நினைவில் இது பெயரிடப்பட்டுள்ளது. 1929இல் கட்டத் தொடங்கப்பட்டு 1933இல் முடிக்கப்பட்டது. கன்னாட்டு பிளேசின் உள்வட்டம் இராசீவ் சௌக்கு என ராஜீவ் காந்தி நினைவாக பெயரிடப்பட்டது. [1] வெளிவட்டம் இந்திரா சௌக்கு எனப்படுகின்றது.
-
கன்னாட்டு பிளேசின் முதல் திரையரங்கு, ரீகல் சினிமா, 1932இல் திறக்கப்பட்டது.
-
சீப்பீயின் உள்வட்டமும் நடுவண் பூங்காவும்
-
இராபர்ட்டு டோர் ரசல் கன்னாட்டு பிளேசின் கட்டிட வடிவமைப்பாளராக இருந்தார்]]
-
1986இல் கட்டப்பட்ட ஜீவன் பாரதி, எல்ஐசி கட்டிடம், கன்னாட்டு பிளேசு, வெளி வட்டம்]]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "New Delhi renames 'British' sites to honour the Gandhis". அசோசியேட்டட் பிரெசு. Deseret News. 21 August 1995 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140708080323/http://www.deseretnews.com/article/434849/NEW-DELHI-RENAMES-BRITISH-SITES-TO-HONOR-THE-GANDHIS.html?pg=all. பார்த்த நாள்: 14 July 2014.