ஓசுனி முபாரக்
ஓசுனி முபாரக் Hosni Mubarak | |
---|---|
حسني مبارك | |
2009 இல் முபாரக் | |
4-வது எகிப்திய அரசுத்தலைவர் | |
பதவியில் 14 அக்டோபர் 1981 – 11 பெப்ரவரி 2011 | |
பிரதமர் | See list
|
Vice President | ஒமார் சுலைமான் |
முன்னையவர் | சூபி அபு தாலிப் (பதில்) |
பின்னவர் | முகமது உசைன் தந்தாவி (இடைக்கால) |
எகிப்தியத் தலைமை அமைச்சர் | |
பதவியில் 7 அக்டோபர் 1981 – 2 சனவரி 1982 | |
குடியரசுத் தலைவர் | சூபி அபு தாலிப் (பதில்) இவரே |
முன்னையவர் | அன்வர் சாதாத் |
பின்னவர் | அகமது முகைதீன் |
15-வது எகிப்தியத் துணை அரசுத்தலைவர் | |
பதவியில் 16 ஏப்ரல் 1975 – 14 அக்டோபர் 1981 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் சாதாத் |
முன்னையவர் | உசைன் எல்-சபெய் மகுமுது பௌசி |
பின்னவர் | ஒமார் சுலைமான் |
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலர் | |
பதவியில் 16 சூலை 2009 – 11 பெப்ரவரி 2011 | |
முன்னையவர் | ராவுல் காஸ்ட்ரோ |
பின்னவர் | முகம்மது தந்தாவி (பதில்) |
வான்படைத் தளபதி | |
பதவியில் 23 ஏப்ரல் 1972 – 16 ஏப்ரல் 1975 | |
குடியரசுத் தலைவர் | அன்வர் சாதாத் |
முன்னையவர் | அலி பக்தாவி |
பின்னவர் | மகுமுது சாக்கர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முகம்மது ஓசுனி எல் சாயிது முபாரக் 4 மே 1928 காபிர்-எல் மெசெலா, எகிப்து |
இறப்பு | 25 பெப்ரவரி 2020 கெய்ரோ, எகிப்து | (அகவை 91)
அரசியல் கட்சி | தேசிய சனநாயகக் கட்சி (1978–2011) |
துணைவர் | சூசன் தாபெத் (தி. 1959) |
பிள்ளைகள் |
|
முன்னாள் கல்லூரி | எகிப்திய இராணுவக் கல்விக்கழகம் எகிப்திய வான்படைக் கல்விக்கழகம் சோவியத் இராணுவக் கல்விநிலையம் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | Egypt |
கிளை/சேவை | எகிப்து வான்படை |
சேவை ஆண்டுகள் | 1950–1975 |
தரம் | – வன்படை உயர் தலைவர்[1] |
கட்டளை | எகிப்திய வான்படை |
ஓசுனி முபாரக் (Hosni Mubarak; 4 மே 1928 – 25 பெப்ரவரி 2020) எகிப்திய இராணுவ, அரசியல் தலைவர் ஆவார். இவர் 1981 முதல் 2011 வரை எகிப்தின் அரசுத்தலைவராக இருந்தவர்.
அரசியலுக்கு வருவதற்கு முன், முபாரக் எகிப்திய வான்படையில் 1972 முதல் 1975 வரை தளபதியாகப் பணியாற்றினார்.[1] அரசுத்தலைவர் ���ன்வர் சாதாத் 1981 இல் படுகொலை செய்யப்பட்ட பின்னர் முபாரக் அரசுத்தலைவரானார். முபாரக் கிட்டத்தட்ட முப்பதாண்டு காலம் அரசுத்தலைவராக இருந்தார். 43 ஆண்டுகள் பதவியில் இருந்த முகம்மது அலி பாசாவின் பின்னர் அதிககாலம் எகிப்தின் அரசுத்தலைவர் பதவியில் இருந்தவர் முபாரக் ஆவார்.[2] 2011 எகிப்தியப் புரட்சியின் போது இடம்பெற்ற 18-நாள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து முபாரக் பதவியில் இருந்து விலகினார்.[3] 2011 பெப்ரவரி 11 இல் எகிப்தின் ஆட்சி இராணுவத் தலைமைகளிடம் ஒப்படைக்கப்பட்டது.[4][5]
2011 ஏப்ரல் 13 இல் முபாரக்கும் அவரது இரண்டு மகன்களும் ஊழல் மற்றும் அதிகார முறைகேடு ஆகிய குற்ரச்சாட்டுகளுக்காக 15 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.[6] மக்கள் புரட்சியின் போது அமைதியான போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதைத் தடுக்கத் தவறியதற்காக முபாரக்கிற்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.[7] இதற்கான விசாரணைகள் 2011 ஆகத்து 3 ஆம் நாள் ஆரம்பமாயின.[8] 2012 சூன் 2 இல், எகிப்திய நீதிமன்றம் முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கியது. சிறைக்காலத்தில், இவர் தொடர்ச்சியான சுகவீன நெருக்கடிகளை சந்தித்தார். 2013 சனவரி 13 இல், எகிப்திய உயர் நீதிமன்றம் முபாரக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மீள் விசாரணைக்கு உத்தரவிட்டது.[9] இவரது வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முபாரக், அவரது மகன்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு 2015 மே 9 சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.[10] 2015 அக்டோபர் 12 இல் முபாரக் இராணுவ மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டு, மகன்கள் விடுதலை செய்யப்பட்டனர்.[11] 2017 மார்ச் 2 இல் இவர் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, 2017 மார்ச் 24 இல் விடுதலை செய்யப்பட்டார்.[12][13]
2020 பெப்ரவரி 25 இல் முபாரக் தனது 91-வது அகவையில் கெய்ரோவில் காலமானார்.[14][15] இவரது உடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.[16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Air Marshal Mohammed Hosni Mubarak". Egyptian Armed Forces Web Site. Egyptian Armed Forces. Archived from the original on 23 March 2010.
- ↑ Slackman, Michael (8 March 2010). "Hosni Mubarak". The New York Times. http://topics.nytimes.com/top/reference/timestopics/people/m/hosni_mubarak/index.html.
- ↑ Kirkpatrick, David D. (28 January 2011). "Egypt Calls in Army as Protesters Rage". The New York Times. https://www.nytimes.com/2011/01/29/world/middleeast/29unrest.html.
- ↑ Kirkpatrick, David D.; Shadid, Anthony; Cowell, Alan (11 February 2011). "Mubarak Steps Down, Ceding Power to Military". The New York Times. https://www.nytimes.com/2011/02/12/world/middleeast/12egypt.html.
- ↑ "Egypt crisis: President Hosni Mubarak resigns as leader". BBC. 11 February 2010. https://www.bbc.co.uk/news/world-middle-east-12433045.
- ↑ Kirkpatrick, David D.; Stack, Liam (13 March 2011). "Prosecutors Order Mubarak and Sons Held". The New York Times. https://www.nytimes.com/2011/04/14/world/middleeast/14egypt.html.
- ↑ "Mubarak to be tried for murder of protesters". Reuters. 24 May 2011 இம் மூலத்தில் இருந்து 31 மே 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110531105100/https://www.reuters.com/article/2011/05/24/us-egypt-mubarak-idUSTRE74N3LG20110524.
- ↑ "Trial of Egypt's Hosni Mubarak starts". BBC. 3 August 2011. https://www.bbc.co.uk/news/world-middle-east-14384691.
- ↑ Egypt's Mubarak to get retrial பரணிடப்பட்டது 20 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம். 3 News. Retrieved 16 January 2014.
- ↑ "Egypt's Hosni Mubarak jailed in corruption retrial". BBC News. 9 May 2015. https://www.bbc.com/news/world-middle-east-32672630.
- ↑ "Jailed sons of Egypt's deposed leader Hosni Mubarak freed". Associated Press. 13 October 2015. https://www.bostonglobe.com/news/world/2015/10/12/jailed-sons-deposed-egypt-autocrat-mubarak-freed/VuNVDh0ucjGA5hNbzpnDLP/story.html.
- ↑ "Egypt's Hosni Mubarak acquitted over 2011 protester deaths". 3 March 2017. https://www.bbc.co.uk/news/world-middle-east-39140887.
- ↑ "Egypt's Hosni Mubarak freed after six years in detention". BBC News. 24 March 2017. https://www.bbc.com/news/world-middle-east-39378045.
- ↑ "Egypt's former president Hosni Mubarak dies at 91". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 25 February 2020.
- ↑ "Former Egyptian president Hosni Mubarak dies". BBC News. 25 February 2020. https://www.bbc.com/news/world-middle-east-51630142.
- ↑ Ruth Michaelson (26 February 2020). "Hosni Mubarak buried with full military honours". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 26 February 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- President Mubarak at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது 7 சனவரி 2007) at the official Egyptian government site
- Air Marshal Hosni Mubarak at the official Egyptian Air Force site