உள்ளடக்கத்துக்குச் செல்

ஒ.ச.நே - 00:44

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒ.ச.நே - 00:44 (UTC-00:44) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -00:44 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும்.

ஒ.ச.நே - 00:44 நேரக் குறியீட்டை மே 1, 1972ஆம் ஆண்டு வரை லைபீரியாவில் பயன்படுத்தி வந்தனர். இது மொன்ரோவியா இடைநிலை நேரம் அல்லது லைபீரிய நேரம் எனவும் குறிப்பிடப்படும். மொன்ரோவிய நிலநிரைக்கோட்டின்படி ஒ.ச.நே - 00:43:08 என்பதே சரியான நேரக் குறியீடாகும்; ஆயினும், மார்ச்சு 1, 1919ல் இது ஒ.ச.நே - 00:44 என மாற்றியமைக்கப்பட்டது.

மே 1, 1972ஆம் ஆண்டு வரை இக்குறியீட்டினை தனது நேர வலயமாகப் பயன்படுத்திய லைபீரியா, தற்போது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தினையே (ஒ.ச.நே) தனது நேர வலயமாகப் பயன்படுத்திவருகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Liberia Time from The International Atlas 5th Edition by Thomas G. Shanks
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒ.ச.நே_-_00:44&oldid=1853448" இலிருந்து மீள்விக்கப்பட்டது