ஒழுங்கில்லா விண்மீன் பேரடை
Appearance
ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் (Irregular galaxy) என்பது நீள்வட்ட அமைப்பையோ அல்லது சுருள் அமைப்பையோ கொண்டிருக்காமல் ஒழுங்கற்ற அமைப்பில் உள்ள விண்மீன் பேரடைகள் ஆகும்.[1] சாதாரணமாக அனைத்து விண்மீன் பேரடைகளும் ஹபிள் வரிசையில் உள்ள அமைப்பை மட்டுமே கொண்டிருக்கும், ஆனால் இது போன்ற விண்மீன் பேரடைகள் அசாதாரணமானது.[2]
ஒரு சில ஒழுங்கில்லா விண்மீன் பேரடைகள் முன்பு நீள்வட்டவடிவமான அமைப்பிலோ அல்லது சுருள் போன்ற அமைப்பிலோ இர���ந்திருக்கும் ஆனால் ஈர்ப்பு விசை காரணமாகச் சிதைந்து இது போன்ற ஒழுங்கற்ற அமைப்பைப் பெற்றுள்ளது.[3] இவைகள் ஏராளமாக வாயு மற்றும் தூசிகளைக் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Butz, Stephen D. (2002). Science of Earth Systems. Cengage Learning. பக். 107. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7668-3391-3.
- ↑ Morgan, W. W. & Mayall, N. U. (1957). "A Spectral Classification of Galaxies." Publications of the Astronomical Society of the Pacific. 69 (409): 291–303.
- ↑ Faulkes Telescope Educational Guide - Galaxies - Irregulars