உள்ளடக்கத்துக்குச் செல்

ஐதரோசிங்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரோசிங்கைட்டு
Hydrozincite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுZn5(CO3)2(OH)6
இனங்காணல்
நிறம்வெண்மை மற்றும் சாம்பல், வெளிர் இளஞ்சிவப்பு சாயம், அல்லது வெளிர் மஞ்சள் அல்லது பழுப்பு; கடத்தப்பட்ட ஒளியில் நிறமற்றது.
படிக இயல்புமரச்சிரால் அல்லது கூர்மையான படிகங்கள், இழைமங்களாக, கசிந்து விழுந்த துளிகளாக, சிறுநீரக வடிவ சுண்ணாம்புப் பாறை படிவுகள்; மண்ணாக, வெளிறியதாக பெருத்ததாக
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
இரட்டைப் படிகமுறல்இரட்டைப்படிகமுறல் {100} இல்
பிளப்புதெளிவாக {100} இல்
முறிவுசீரற்று/சமமின்றி
விகுவுத் தன்மைஎளிதில் நொறுங்கும்
மோவின் அளவுகோல் வலிமை2 - 2 12
மிளிர்வுமென்மையாக, முத்தாக, மங்கலாக, மண்ணாக
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் ஒளிகசியும்
ஒப்படர்த்தி3.5 - 4
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.630 nβ = 1.642 nγ = 1.750
இரட்டை ஒளிவிலகல்δ = 0.120
2V கோணம்அளவிடப்பட்டது: 40° , கணக்கிடப்பட்டது: 40°
நிறப்பிரிகைவலியது
புறவூதா ஒளிர்தல்புற ஊதா ஒளியில் இளஞ்சிவப்பு, வெளிர் நீலம் ஒளிர்வு.
கரைதிறன்அமிலங்களில் கரையும்.
மேற்கோள்கள்[1][2][3]

ஐதரோசிங்கைட்டு (Hydrozincite) என்பது Zn5(CO3)2(OH)6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துத்தநாகப் பூ அல்லது மாரியோனைட்டு என்ற பெ���ராலும் இது அறியப்படுகிறது. வெண்மை நிற கார்பனேட்டு கனிமவகையான இக்கனிமம் படிகவடிவத்திற்கு மாறாக பெரும்படிவுகளாகக் காணப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஐதரோசிங்கைட்டு கனிமத்தை Hznc[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

துத்தநாக தாதுக்களின் ஆக்சிசனேற்றத் தயாரிப்பாக சுரங்கங்களின் மேலோடுகளில் இது இயற்கையில் தோன்றுகிறது. பெரும்பாலும் சிமித்சோனைட்டு, எமிமார்பைட்டு, வில்லெமைட்டு, செருசைட்டு, அரிச்சால்சைட், கால்சைட்டு, லிமோனைட்டு போன்ற கனிமங்களுடன் ஐதரோசிங்கைட்டு கலந்து காணப்படுகிறது[1].

ஐதரோசிங்கைட்டு முதன்முதலாக 1853 ஆம் ஆண்டில் ஆத்திரியா நாட்டின் காரிந்தியா மாநிலத்தில் அமைந்துள்ள பேடு பிளீபெர்க் என்ற வர்த்தக நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. இதன் வேதியியல் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்டு இதற்கு ஐதரோசிங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது[2].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat
  3. Webmineral data
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரோசிங்கைட்டு&oldid=4093356" இலிருந்து மீள்விக்கப்பட்டது