உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசக் இன்பராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருளய்யா ஐசக் இன்பராஜா (ஒக்டோபர் 11, 1952 — சூலை 29, 2014) ஈழத்து நாடகக்கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். 1985இல் இருந்து செருமனியில் வாழ்ந்து வந்தவர். விகடவிற்பனர், நகைச்சுவை வேளம், ஹஸ்யமணி போன்ற பல விருதுகளைப் பெற்றவர். லூஸ் மாஸ்ரர் என்னும் தனி நடிப்பு நாடகத்தின் மூலம் லூஸ் மாஸ்ரர் என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டவர்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

யாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட ஐசக் இன்பராஜா மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர்.[1]

நாடகத் துறையில்

[தொகு]

ஈழத்துத் தயாரிப்பான நிர்மலா திரைப்படத்தை இயக்கிய அமரர் அருமைநாயகம் அவர்களைக் கலைக்குருவாக கொண்டு நாடகத் துறைக்குள் பிரவேசித்தவர். ஆருமைநாயகத்தின் சகாயர் நாடகாலயத்தின் தயாரிப்புகளான விழிப்பு, யாருக்காக அழுதான், மாப்பிள்ளை தேவை, லேடி ரைப்பிஸ்ற் போன்ற நாடகங்களில் நடித்தார். 1974 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் கலைவிழாவில் யாருக்காக அழுதான் நாடகத்தில் நடித்ததற்காக பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப் பெற்றர்.

பிரம்மஸ்ரீ தங்கராசா ஐயரின் வில்லிசைக் குழுவிலும், யாழ்ப்பாணம் சின்னமணியின் வில்லிசைக் குழுவிலும் நகைச்சுவைத் தொகுப்பாளராகவும் இருந்தார். 1984 இல் சின்னமணி இசைக்குழுவினருடன் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்று வில்லிசை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினார். மறைந்த திரைப்படக் கலைஞர் சிலோன் விஜயேந்திரனின் காதலா? கடமையா?, ஆச்சிக்குட்டிக்கு வாச்ச மாப்பிள்ளை போன்ற நாடகங்கள் மூலமாக வடமாகாணத்தில் நூற்றுக்கணக்கான மேடைகளில் நடித்தார்.

புலம் பெயர்ந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கும் இவர் மாப்பிள்ளை தேவை, கிளாலிக்குள் மாப்பிள்ளை' வருவார் வருகின்றார் வந்திட்டார் போன்ற பல நகைச்சுவை நாடகங்களை தானே எழுதி, இயக்கி அரங்கேற்றியுள்ளார். இவர் கலைஞர் இரா-குணபாலன் அவர்களின் ஆர்.ரி.எம். பிரதஸ் தயாரிப்பில் ரகுநாதன் இயக்கிய முகத்தார் வீடு திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார்.[2]

ஈழத்தில் இவர் நடித்த நாடகங்கள்

[தொகு]
  • விழிப்பு
  • யாருக்காக அழுதான்
  • மாப்பிள்ளை தேவை
  • லேடி ரைப்பிஸ்ற்
  • காதலா? கடமையா?
  • ஆச்சிக்குட்டிக்கு வாச்ச மாப்பிள்ளை

ஐரோப்பியாவில் இவர் எழுதி, இயக்கி, நடித்த நாடகங்கள்

[தொகு]
  • மாப்பிள்ளை தேவை
  • கிளாலிக்குள் மாப்பிள்ளை
  • வருவார் வருகின்றார் வந்திட்டார்

இவர் நடித்த திரைப்படங்கள்

[தொகு]
  • முகத்தார் வீடு

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐசக்_இன்பராஜா&oldid=2713407" இலிருந்து மீள்விக்கப்பட்டது