ஏதேன்
ஏதேன் புதைப்படிவ காலம்:பின் மியோசீன்[1] முதல் தற்காலம் வரை | |
---|---|
சிறிய ஆந்தை, Athene noctua | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ஏதேன் பிரடரிக் போய், 1822
|
Species | |
Athene blewitti | |
வேறு பெயர்கள் | |
Heteroglaux |
ஏதேன் என்பது ஆந்தைகளின் பேரினமாகும். இது தற்போது உயிர் வாழும் நான்கில் இரண்டு இனங்களைக் கொண்டுள்ளது. இந்த பறவைகள் சிறியதாகவும், பழுப்பு மற்றும் வெள்ளை நிறப் புள்ளிகளுடனும், மஞ்சள் கண்களுடனும் மற்றும் வெள்ளை புருவங்களைக் கொண்டதாகவும் உள்ளன. இந்தப் பேரினம் ஆத்திரேலியா, அந்தாட்டிக்கா மற்றும் துணை-சகார ஆப்பிரிக்கா தவிர மற்ற அனைத்துக் கண்டங்களிலும் காணப்படுகிறது.
இந்த பேரினத்தின் பெயரான ஏதேன் சிறிய ஆந்தையின் அறிவியல் பெயரான ஏதேன் நாக்டுவாவில் இருந்து பெறப்படுகிறது. இப்பெயர் கிரேக்க பெண் கடவுளான ஏதேனாவுடன் நெருங்கிய தொடர்புடையது ஆகும். இக்கடவுளுடன் இந்த ஆந்தை அடிக்கடி சித்தரிக்கப்படுகிறது. இக்கடவுளின் உண்மையான பங்கானது இரவின் பெண் கடவுள் என்பதாகும். இதன் காரணமாகவே இக்கடவுள் ஆந்தையுடன் தொடர்புபடுத்தப்படுகிறார் என்பதை நாம் அறிய முடிகிறது.[2]
வாழும் உயிரினங்கள்
[தொகு]படம் | அறிவியல் பெயர் | பொதுப்பெயர் | பரவல் |
---|---|---|---|
அதீனா பிரமா, Athene brama | புள்ளி ஆந்தை | இந்திய பெரும் நிலப்பரப்பு முதல் தென் கிழக்கு ஆசியா வரை உள்ள ஆசியாவின் வெப்பமண்டல பகுதி | |
அதீனா நாக்டுவா, Athene noctua | சிறிய ஆந்தை | ஐரோப்பா, கொரியா வரையிலான கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா | |
அதீனா பிலேவிட்டி, Athene blewitti - சில நேரங்களில் ஹெட்டிரோலாகிலாக்ஸ் பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது | காட்டு ஆந்தை | நடு இந்தியா | |
அதீனா குனிகுலாரியா, Athene cunicularia - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது | வளை ஆந்தை | வட மற்றும் தென் அமெரிக்கா | |
அதீனா சூப்பர்சிலியாரிஸ், Athene superciliaris | வெள்ளை-புருவ ஆந்தை | மடகாஸ்கர் |
அற்றுவிட்ட இனங்கள்
[தொகு]இந்தப் பேரினத்தின் சில இனங்கள் முக்கியமாக தீவுகளில் வாழ்ந்த இனங்கள் தொல்லுயிர் எச்சம் அல்லது அவை சார்ந்த ஆதாரங்கள் மூலம் மட்டுமே நமக்கு தெரிய வருகின்றன:
- அதீனா மெகாலோபெசா, Athene megalopeza (தொல்லுயிர் எச்சம்; ஐக்கிய அமெரிக்காவின் ரெக்ஸ்ரோட்டில் பிலியோசின் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- அதீனா வெட்டா, Athene veta (தொல்லுயிர் எச்சம்; போலந்தின் ரெபியேலைஸ் என்ற இடத்தில் ஆரம்ப பிலெய்ஸ்டோசீன் காலம்)
- அதீனா ஏஞ்சலிஸ், Athene angelis (தொல்லுயிர் எச்சம்; கோர்சிகா தீவின் கஸ்டிக்லியோன் பகுதியில் நடு-பின் பிலெய்ஸ்டோசீன் காலம்)
- அதீனா டிரினாக்கிரியாய், Athene trinacriae (பிலெய்ஸ்டோசீன்)
- அதீனா சி. எஃப். குனிகுலாரியா, Athene cf. cunicularia (தொல்லுயிர் எச்சம்; பர்புடா, மேற்கிந்திய தீவுகளின் பிலெய்ஸ்டோசீன் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- அதீனா சி. எஃப். குனிகுலாரியா, Athene cf. cunicularia (தொல்லுயிர் எச்சம்; கேமன் தீவுகள், மேற்கு இந்திய தீவுகளின் பிலெய்ஸ்டோசீன் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- அதீனா சி. எஃப். குனிகுலாரியா, Athene cf. cunicularia (தொல்லுயிர் எச்சம்; ஜமைக்கா, மேற்கிந்திய தீவுகளின் பிலெய்ஸ்டோசீன் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- அதீனா சி. எஃப். குனிகுலாரியா, Athene cf. cunicularia (தொல்லுயிர் எச்சம்; மோனா தீவு, மேற்கிந்திய தீவுகளின் பிலெய்ஸ்டோசீன் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- அதீனா சி. எஃப். குனிகுலாரியா, Athene cf. cunicularia (தொல்லுயிர் எச்சம்; போர்ட்டோ ரிக்கோ, மேற்கிந்திய தீவுகளின் பிலெய்ஸ்டோசீன் காலம்) - சில நேரங்களில் இசுபியோடைடோ பேரினத்தில் வகைப்படுத்தப்படுகிறது
- கிரேட்டன் ஆந்தை, அதீனா கிரேட்டன்ஸிஸ், Athene cretensis (வரலாற்றுக்கு முந்தைய காலம்; மத்தியதரைக் கடலின் கிரீட் தீவு)
கிரேட்டன் ஆந்தை என்பது பறக்க இயலாத அல்லது கிட்டத்தட்ட பறக்க இயலாத வடிவமுடைய 50 சென்டி மீட்டருக்கு மேல் (கிட்டத்தட்ட இரண்டு அடி) உயரமுடைய ஒரு ஆந்தை ஆகும். கிரீட் தீவானது மனிதர்கள் வாழும் இடமாக ஆனபிறகு இந்த ஆந்தை அற்றுவிட்ட இனம் ஆனது.
பிற்கால மியோசீன் காலத்தில் (சுமார் 1.6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்) வடகிழக்கு அங்கேரியின் ருடபன்யா என்ற இடத்தில் கிடைக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் இந்தப் பேரினத்தில் தற்காலிகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3] அதீனா பேரினத்தின் அறியப்பட்ட தொல்லுயிர் எச்ச காலம் மற்றும் ஐரோப்பாவில் இருந்து கிடைத்த பல மியோசீன் கால உண்மையான ஆந்தை குடும்ப உறுப்பினர்கள் தவறாக வகைப்படுத்தப்பட்டமை ஆகியவை இது இந்த பேரினத்தின் ஆரம்ப கால உறுப்பினர் அல்லது இந்தப் பேரினத்திற்கு தொடர்பில்லாத உறுப்பினராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. "அதீனா" முரிவோரா, "Athene" murivora என்று கருதப்படும் ஆந்தைக்கு கொடுக்கப்பட்ட அறிவியல் பெயர் ஆண் ரோட்ரிகசின் ஆந்தையின் துணை தொல்லுயிர் எச்ச எலும்புகளுக்கு கொடுக்கப்பட்ட பெயராகும்.
- ஆண்டிகுவா வளை ஆந்தை, அதீனா குனிகுலாரியா அமவுரா, Athene cunicularia amaura - அற்றுவிட்ட இனம் (அண்.1905)
- குவாடலோப் வளை ஆந்தை, அதீனா குனிகுலாரியா குவாடலோபென்சிஸ், Athene cunicularia guadeloupensis - அற்றுவிட்ட இனம் (அண்.1890)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bernor, R.L.; Kordos, L. & Rook, L. (eds): "Recent Advances on Multidisciplinary Research at Rudabánya, Late Miocene (MN9), Hungary: A compendium. பரணிடப்பட்டது 2007-06-28 at the வந்தவழி இயந்திரம்" Paleontographica Italiana 89: 3-36.
- ↑ Jobling, James A (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 58, 274. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ Bernor, R.L.; Kordos, L. & Rook, L. (eds): "Recent Advances on Multidisciplinary Research at Rudabánya, Late Miocene (MN9), Hungary: A compendium. பரணிடப்பட்டது 2007-06-28 at the வந்தவழி இயந்திரம்" Paleontographica Italiana 89: 3-36.