எம். ஈ. எச். முகம்மது அலி
எம். ஈ. எச். முகம்மது அலி M. E. H. Mohamed Ali | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் மூதூர் | |
பதவியில் 1952–1960 | |
முன்னையவர் | ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கர் |
பின்னவர் | ஏ. எல். அப்துல் மஜீத் |
பதவியில் 1962–1970 | |
முன்னையவர் | தம்பையா ஏகாம்பரம் |
பின்னவர் | அருணாசலம் தங்கத்துரை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 மார்ச்சு 1925 |
இறப்பு | 31 திசம்பர் 2004 | (அகவை 79)
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
இனம் | இலங்கைச் சோனகர் |
முகம்மது எகுத்தார் ஹாஜியார் முகம்மது அலி (Mohamed Ehuttar Hadjiar Mohamed Ali, 27 மார்ச் 1925 – 31 திசம்பர் 2004) கிழக்கிலங்கை முசுலிம் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்புy
[தொகு]முகம்மது அலி கிழக்கு மாகாணம், திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் பிறந்தவர்.[1][2] எம். ஈ. எச். மகரூப் இவரது சகோதரர் ஆவார்.[3]
அரசியலில்
[தொகு]முகம்மது அலி கிண்ணியா கிராம சபைத் தலைவராகப் பணியாற்றினார்.[3] இவர் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்டுக் கட்சியின் சார்பில் மூதூர் தொகுதியில் போட்டியிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஏ. ஆர். ஏ. எம். அபூபக்கரிடம் 1720 வாக்குகளால் தோல்வியடைந்தார்.[2][4] 1952 தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][5] 1956, மார்ச் 1960 தேர்தல்களிலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6][7] சூலை 1960 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[8]
இலங்கைத் தமிழரசுக் கட்சி 1961 இல் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டங்களில் முகம்மது அலி தீவிரமாகப் பங்குபற்றினார்.[2] தமிழரசுக் கட்சியின் மூதூர் உறுப்பினர் தம்பையா ஏகாம்பரம் 1962 இல் இறந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு 1962 சூன் 28 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் முகம்மது அலி தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[9][10][11] 1965 தேர்தலில் மீண்டும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2][12] 1970 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.[2][13]
பின்னர் முகம்மது அலி மாலைத்தீவுகளில் இலங்கையின் தூதுவராகவும், நெல் சந்தைப்படுத்தும் திணைக்களத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.[14] இவர் 2004 திசம்பர் 31 இல் தனது 79-வது அகவையில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Past Members: Mohamed Ali, Mohamed Ehuttar Hadjiar". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 "Trinco veteran Muslim parliamentarian dies". தமிழ்நெட். 1 January 2005. http://www.tamilnet.com/art.html?artid=13821&catid=13.
- ↑ 3.0 3.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L. 9th Parliament of Sri Lanka (PDF). Associated Newspapers of Ceylon Limited. p. 272. Archived from the original (PDF) on 2015-06-23.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-02-04.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-02-04.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-02-04.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-12.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-02-04.
- ↑ "Summary of By Elections 1947 to 1988" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
- ↑ D. B. S. Jeyaraj (22 September 2012). "Najeeb Abdul Majeed makes history as the first muslim CM of Sri Lanka". The Daily Mirror. http://www.dailymirror.lk/22121/najeeb-abdul-majeed-makes-history-as-the-first-muslim-cm-of-sri-lanka.
- ↑ R. Sampanthan (20 December 2005). "The need for a political solution - Part-2". Daily News (Sri Lanka). http://archives.dailynews.lk/2005/12/20/fea04.htm.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2015-07-13.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). Department of Elections, Sri Lanka. Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-26.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Collure, Shyamal A. (3 August 1997). "UNP’s Trinco choice under fire". The Sunday Times (Sri Lanka). http://www.sundaytimes.lk/970803/newsm.html.
- 1925 ப��றப்புகள்
- 2004 இறப்புகள்
- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கை முசுலிம்கள்
- ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்வாதிகள்
- மூதூர் நபர்கள்
- திருகோணமலை மாவட்ட நபர்கள்