உராய்வுமானி
உராய்வுமானி (tribometer) என்பது உராய்வின் அளவுகளை, குறிப்பாக இரண்டு தொடர்புடைய பரப்புகளுக்கிடையேயான உராய்வுக் குணகம், உராய்வு விசை, தேய்மான அளவு, மற்றும் வளைவு அளவு ஆகியவற்றை அளவிடப் பயன்படும் ஒரு துணைக்கருவியாகும். இது 18 ஆம் நூற்றாண்டின் டச்சு அறிவியலாளர் பீட்டர் வான் முசன்புரூக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1][2]
இது உராய்வுப்பரிசோதனைக்கருவி (tribotester) என்று பொதுவான பெயரால் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் பரிசோதனைகள் செய்யவும், தேய்மானம், உராய்வு மற்றும் உயவு போன்ற உராய்வியலின் பாடங்களை உருவகப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளின் நீண்டகால செயல்திறனைச் சோதித்து ஆய்வு செய்யவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, எலும்பியல் உட்பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள் உராய்வுப்பரிசோதனைக்கருவிக்கு கணிசமான தொகையை செலவழித்து மனித இடுப்பு மூட்டுகளில் ஏற்படும் இயக்கங்களையும், சக்திகளையும் துல்லியமாக கண்டறிகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Historic scientific instruments in Denmark
- ↑ Hutton, Charles A Mathematical and Philosophical Dictionary பரணிடப்பட்டது 2011-09-26 at the வந்தவழி இயந்திரம்
வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.invogineering.com/index.html பரணிடப்பட்டது 2017-06-22 at the வந்தவழி இயந்திரம்
- http://rtec-instruments.com/tribometers.htm பரணிடப்பட்டது 2017-05-02 at the வந்தவழி இயந்திரம்
- http://www.tribonet.org/tribometers/ - List of various types of tribometers