இரகுநாதராவ்
இரகுநாத ராவ் | |
---|---|
रघुनाथ राव | |
மரத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் | |
பதவியில் 5 டிசம்பர் 1773 – 1774 | |
ஆட்சியாளர் | இரண்டாம் இராசாராம் |
முன்னையவர் | பேஷ்வா நாராயணராவ் |
பின்னவர் | மாதவராவ் நாராயணன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சாதாரா | 18 ஆகத்து 1734
இறப்பு | 11 திசம்பர் 1783 | (அகவை 49)
தேசியம் | இந்தியர் |
தொழில் | பேஷ்வா |
இரகுநாதராவ் (Raghunathrao)[1] (18 ஆகஸ்டு 1734 – 11 டிசம்பர் 1783) மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சராக 1773 முதல் 1774 முடிய பணியாற்றியவர். மராத்திய பேஷ்வா முதலாம் பாஜிராவின் மகன் இரகுநாத ராவ் ஆவார்.
வட இந்தியப் ப���ுதிகளை கைப்பற்றல்
[தொகு]இரகுநாதராவ், கிபி 1753 - 1755களில் வட இந்தியாவின் ஜாட் மக்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, முகலாயர்கள் ஆட்சியில் இருந்த மதுரா, பிருந்தாவனம், கயை, குருச்சேத்திரம் போன்ற இந்துக்களின் புனித நகரங்களைக் கைப்பற்றியதுடன், முகலாய அரசன் அகமத் ஷாவை கைது செய்து, ஆலம்கீர் என்பவரை தில்லி அரசனாக நியமித்தார்.
மூன்றாம் பானிபட் போர்
[தொகு]14 ஜனவரி 1761ல் தில்லிக்கு வடக்கே 60மைல் (97கி.மீ) தொலைவில் பானிபட் என்ற இடத்தில், மராட்டிய பேரரசின் வடக்கு படைகளுக்கும், ஆப்கானிஸ்தான் ம��்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் நடந்த மூன்றாம் பானிபட் போரில் கலந்து கொண்டவர். இப்போரில் மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
அரசப்பிரதிநிதி
[தொகு]பேஷ்வா இளைய மாதவராவின் அரச காப்பாளராகப் பணியாற்றியவர் இரகுநாதராவ். ஐதராபாத் நிசாமுடன் கூட்டு சேர்ந்து இளைய மாதவராவை ஒழித்துக் கட்டி, தான் பேஷ்வா பதவியில் அமர திட்டமிட்ட இரகுநாதராவைக் கைது செய்து வீட்டுச் சிறையில் அடைத்தனர்.
1772ல் முதலாம் மாதவராவ் இறந்த பின்னர், பேஷ்வா பதவியேற்ற அவரது இளைய தம்பி நாராயண ராவின் பாதுகாவலராக இரகுநாதராவ் நியமிக்கப்பட்டார். சனிவார்வாடா அரண்மனையில் இரகுநாதராவ், தனது மனைவி ஆனந்திபாயுடன் சேர்ந்து, நாராயண இராவைக் கொலை செய்தார்.[2][3]
பேஷ்வாவைக் கொலை செய்த காரணத்தினால், இரகுநாதராவ் நாடு கடத்தப்பட்டார். நாடு கடத்தப்பட்ட இரகுநாதராவ், 6 மார்ச் 1775 அன்று பிரித்தானியர்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, தானே, வசாய் மற்றும் சஸ்டி நகரங்கள் பிரித்தானியர் வசம் ஒப்படைப்பது என்றும், அதற்கு பிரதிபலனாக, இரகுநாதராவை பேஷ்வா பதவியில் நியமிப்பது என முடிவானது.[4]
11 திசம்பர் 1783ல் இரகுநாதராவ் மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின்னர் இரகுநாத ராவின் மகன்களான இரண்டாம் பாஜி ராவ், இரண்டாம் சிம்மாஜி ராவ் மற்றும் மனைவி ஆனந்திபாய் பேஷ்வாவின் அமைச்சரான நானா பட்நாவிசின் கட்டுப்பாட்டில் இருந்தனர்.
பேஷ்வா இரண்டாம் மாதவ ராவின் இறப்பிற்குப் பின் இரண்டாம் பாஜி ராவை மராத்தியப் பேரரசின் பேஷ்வா பதவியில் அமர்த்தினர்.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Preeti Panwar. "Top 10 most haunted places in India". Zee News. Archived from the original on 22 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Huned Contractor (31 October 2011). "Going ghost hunting". Sakal. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
- ↑ Naravane, M.S. (2014). Battles of the Honorourable East India Company. A.P.H. Publishing Corporation. pp. 54–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131300343.
- ↑ The Asiatic Journal and Monthly Register for British and Foreign India, China, and Australia, Volume 10. Parbury, Allen, and Company. 1833. p. 22.