இந்திரஜா
இந்திரஜா | |
---|---|
பிறப்பு | இராஜாத்தி[1] 30, சூன் 1978 சென்னை |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1993 – 2007 2014 – தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | முகமது அப்சர் |
பிள்ளைகள் | 1 |
இராஜாத்தி என்ற இயற்பெயரைக் கொண்ட இந்திரஜா என்ற திரைப் பெயரைக் கொண்டவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்பட்டுள்ளார். இவர் ஒரு சில தமிழ் மற்றும் கன்னட படங்களிலும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.[2][3]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இந்திராஜாவின் உண்மையான பெயர் இராஜத்தி என்பதாகும். இவர் தமிழ்நாட்டின் சென்னையில் ஒரு கருநாடக இசைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் மூன்று சகோதரிகளில் மூத்தவர், மற்ற இருவர் பாரதி மற்றும் சோபா என்பவர்களாவர். பள்ளி நாட்களில், இவர் பாடல் மற்றும் நாடக போட்டிகளில் பரிசுகளை வென்றுள்ளார். பயிற்சிபெற்ற பாரம்பரிய இசைப் பாடகரும், நடனக் கலைஞரான இவர் குச்சிப்புடி நடன வடிவத்தை மாதவபெட்டி மூர்த்தியிடம் கற்றுக்கொண்டார்.[2] இவர் ஒரு பத்திரிகையாளராக ஆகவேண்டுமென்று தயாராகி கொண்டிருந்தார்.[4][5] இவர் தக்க திமி தா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
தொழில்
[தொகு]ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி படத்தில் இந்திரஜா கு��ந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். வளர்ந்த பிறகு இவர் நடித்த முதல் திரைப்படமான ஜந்தர் மந்தர், படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரான 'இந்திரஜா' என்பதையே தன் திரைப் பெயராக ஏற்றுக்கொண்டார். பின்னர், எஸ். வி. கிருஷ்ண ரெட்டியின் யமலீலா இவரை உடனடி நட்சத்திரமாக மாற்றியது. இப்படம் ஓராண்டு கடந்தும் ஓடியது.[2] இவர் தடயம் மற்றும் ராஜாவின் பார்வையிலே ஆகிய படங்களில் நடித்தார். ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுக்கும் வெற்றிப் படங்களாக அமையாததால் தமிழ்த் திரைப்படங்களில் மேலும் முன்னேற முடியவில்லை.
இவர் பல வெற்றிகரமான மலையாளப் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவற்றில் 1999 ஆண்டில் மோகன்லாலடன் இண்ந்து நடித்த அதிரடி நாடகப் படமான உஸ்த்த், 2002 ஆண்டில் சுரேஷ் கோபியுடன் இணைந்து திகில் குற்றவியல் திரைப்படமான எப்.ஐ.ஆர், 2002 ஆண்டில் மம்மூட்டியுடன் இணைந்து நகைச்சுவை-நாடகப்படமான குரோனிக் பேச்சிலர், 2004 ஆண்டில் ஜெயராமுக்கு ஜோடியாக நகைச்சுவை நாடகப்படமான மயிலாட்டம், 2005 ஆண்டில் கலாபவன் மணியுடன் இணைந்து நடித்த பென் ஜான்சன் போன்றவை குறிப்பிடத்தக்க படங்களாகும். திருமணத்திற்கு பிறகு ஒரு இடைவெளிக்குப் பிறகு, பல தெலுங்கு திரைப்படங்களில் சில குறிப்பிடத்தக்க பாத்திரங்களை ஏற்று இவர் திரையுலகத்துக்குத் திரும்பியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இந்திரஜா 7 செப்டம்பர் 2005 அன்று நடிகர் முகமது அப்சரை திருமணம் செய்து கொண்டார். தம்பதியருக்கு ஒரு மகள் உள்ளார்.[6]
திரைப்படவியல்
[தொகு]படங்கள்
[தொகு]ஆண்டு | பெயர் | பாத்திரம் | மொழி(கள்) | குறிப்பு |
---|---|---|---|---|
1993 | உழைப்பாளி | இளம் ஸ்ரீவித்யா | தமிழ் | |
1993 | புருஷ லட்சணம் | திரைப்பட நடிகை | தமிழ் | |
1994 | ஹலோ பிரதர் | அவராகவே | தெலுங்கு | "கன்னிபிட்டா ரோ" பாடலில் சிறப்புத் தோற்றம் |
1994 | ஜந்தர் மந்தர் | இந்திரஜா | தெலுங்கு | |
1994 | யலீலா | லில்லி | தெலுங்கு | |
1994 | அமைதிப்படை | தாயம்மாளின் தோழி | தமிழ் | |
1995 | சோகாசு சூதா தரமா | நீலு (நீலிமா தேவி) | தெலுங்கு | |
1995 | அம்மா தொங்கா | மோகனா / கல்யாணி | தெலுங்கு | |
1995 | ராஜாவின் பார்வையிலே | கௌரி | தமிழ் | |
1995 | பலராஜு பங்காரு பெல்லாம் | நாகமணி | தெலுங்கு | |
1995 | ஆஸ்தி மூரேடு ஆசா பாரேடு | மருத்துவர் | தெலுங்கு | |
1995 | வாடு பாவா தப்பு | Priya | தெலுங்கு | |
1995 | சர்வர் சுந்தராம்கரி அபாய் | தெலுங்கு | ||
1995 | எர்ரோடு | சீதலு | தெலுங்கு | |
1995 | லவ் கேம் | இந்து | தெலுங்கு | |
1995 | வஜ்ரம் | - | தெலுங்கு | |
1995 | சுபமஸ்து | சரோஜா | தெலுங்கு | |
1995 | ம்மி மீ அயனோச்சாடு | சாரதா | தெலுங்கு | |
1996 | சம்பதாயம் | கீதா | தெலுங்கு | |
1996 | பிட்டலா டோரா | நிக்கி | தெலுங்கு | |
1996 | ஒன்ஸ்மோர் | கல்யாணி | தெலுங்கு | |
1996 | ல்ல பூசலு | ரேவதி | தெலுங்கு | |
1996 | ஜகதீக வீரடு | லப்பூ | தெலுங்கு | |
1996 | பொப்புலி புலி | ரதனி | தெலுங்கு | |
1997 | தடயம் | தேவி | தெலுங்கு, தமிழ் | |
1997 | ஒக்க சின்ன மாட்டா | கீதா | தெலுங்கு | |
1997 | ஜெய் பஜரங்கபளி | ரம்யா | தெலுங்கு | |
1997 | இல்லாலு | தெலுங்கு | ||
1997 | சிலக்கட்டுட்டு | இந்திரஜா | தெலுங்கு | |
1997 | பெத்தனய்யா | ஸ்ரவானி | தெலுங்கு | |
1997 | சின்னப்பாயி | லலிதா | தெலுங்கு | கௌரவத் தோற்றம் |
1998 | வேலை | சாருலதா | தமிழ் | |
1998 | கலவாரி செல்லேலு கனக மகா லட்சுமி | - | தெலுங்கு | |
1998 | கடிபிடி கிருஷ்ணா | - | கன்னடம் | |
1999 | தி குட்மேன் | மும்தாஸ் | மலையாளம் | |
1999 | சூரிய புத்திரிகா | தெலுங்கு | ||
1999 | இண்டிபெண்டன்ஸ் | சிந்து | மலையாளம் | |
1999 | எப்.ஐ.ஆர் | லலிதா | மலையாளம் | |
1999 | பிச்சோடி செட்டிலோ ராய் | தெலுங்கு | ||
1999 | சின்னி சின்னி ஆசா | ஆசா | தெலுங்கு | |
1999 | தெலங்கானா | தெலுங்கு | ||
1999 | உஸ்தாத் | க்ஷாமா | மலையாளம் | |
1999 | கூலி ராஜா | சுமா | கன்னடம் | |
1999 | ப்ரத்யார்த்தா | கன்னடம் | ||
1999 | அவளே நன்ன ஹுடுகி | கன்னடம் | ||
1999 | தி கில்லர் | சீத்தா | கன்னடம் | |
2000 | சமக்கா சரக்கா | - | தெலுங்கு | |
2000 | முந்தைத்தே ஊரு ஹப்பா | கன்னடம் | ||
2000 | சுந்தர புருஷா | கதாநாயகி இர்வாசி | கன்னடம் | |
2000 | கடகா | காயத்திரி | கன்னடம் | |
2000 | ஸ்ரதா | சுதா | மலையாளம் | |
2001 | உன்னதங்கலைல் | ஹேமா | மலையாளம் | |
2002 | கிருஷ்ணா கோபாலகிருஷ்ணா | பாமா | மலையாளம் | |
2003 | செர்ரி | அருந்ததி | மலையாளம் | |
2003 | அச்சந்தே கொச்சுமோல் | டெய்சி | மலையாளம் | |
2003 | கிரோனிக் பேச்சுலர் | பவானி ராஜசேகரன் | மலையாளம் | |
2003 | வார் அன்ட் லவ் | கேப்டன் ஹேமா வர்மா | மலையாளம் | |
2003 | ரிலாஸ் | சித்ரா | மலையாளம் | |
2004 | தலமேளம் | அம்முகுட்டி | மலையாளம் | |
2004 | அக்னிநட்சத்திரம் | அம்மு | மலையாளம் | |
2004 | எங்கள் அண்ணா | பவானி | தமிழ் | |
2004 | மயிலாட்டம் | மீனாட்சி | மலையாளம் | |
2005 | லோகநாதன் ஐஏஎஸ் | மலையாளம் | ||
2005 | பென் ஜான்சன் | கௌரி | மலையாளம் | |
2006 | ஹைவே போலிஸ் (2006 திரைப்படம்) | ரஞ்சனி | மலையாளம் | |
2006 | நரகாசூரன் | நீனா விஸ்வநாதன் | மலையாளம் | |
2007 | இந்திரஜித் | சாகினா | மலையாளம் | |
2014 | திக்குலு சூடக்கு ராமையா | பவானி | தெலுங்கு | |
2015 | பதுகு | மருத்துவர் தீதா ரெட்டி | தெலுங்கு | |
2015 | லயன் | சிபிஐ துணைத் தலைவர் இந்திராணி | தெலுங்கு | |
2017 | சதமானம் பவதி | ஜான்சி | தெலுங்கு | |
2017 | சமந்தகமணி | பானுமதி | தெலுங்கு | |
2018 | அக்னயதவாசி | கிருஷ்ணவேணி பார்கவ் | தெலுங்கு | |
2018 | ஹேப்பி வெட்டிங் | நீரஜா | தெலுங்கு | |
2019 | சாப்ட்வேர் சுதீர் | சந்துவின் தாய் | தெலுங்கு | |
TBA | 12சி | பாஷா பாய் | மலையாளம் | படப்பிடிப்பில் |
தொலைக்காட்சி
[தொகு]நிகழ்ச்சி | மொழி | இலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|
சுந்தரகாண்டா | தெலுங்கு | ஜெமினி தொலைக்காட்சி | |
அசோகவனம் | தமிழ் | புதுயுகம் தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி | சுந்தரகாண்டாவின் மொழிமாற்றுப் பதிப்பு |
பாசம் | சன் தொலைக்காட்சி | ||
ஆண் பாவம் | |||
பைரவி ஆவிகளுக்குப் பிரியமானவள் | சிறப்புத் தோற்றம் | ||
வள்ளி | கதாபாத்திரம்-மதுமிதா சுப்பு |
குறிப்புகள்
[தொகு]- ↑ "Indraja". சிஃபி. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 19 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ 2.0 2.1 2.2 "Indraja". Sify. Archived from the original on 23 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Profile of Malayalam Actor Indraja. En.msidb.org (26 January 2009). Retrieved on 2017-10-25.
- ↑ "Director's dream". Rediff. பார்க்கப்பட்ட நாள் 3 July 2012.
- ↑ "Tamil Star – Profile". Archived from the original on 4 May 2001.
- ↑ My Marriage isn't a Secret: Senior Heroine பரணிடப்பட்டது 2018-10-05 at the வந்தவழி இயந்திரம். AP Today (7 September 2014)