இடைக்காலச் சோழர்கள்பொ.ஊ. 9-ம் நூற்றாண்டில் மிகப்பெரியதும் பிரபலமானதுமான பேரரசை நிறுவினார்கள். தென் இந்தியாவின் மிகப்பெரும்பாலான பகுதிகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். இவர்களுடைய கடற்படை மிகவும் வலிமை உள்ளதாக இருந்தது. அதன் மூலமாகத் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக சிறீவிஜயம் வரை தங்களது செல்வாக்கை நீட்டித்து இருந்தார்கள். இவர்கள், தங்களுடைய தொடர் படையெடுப்புகள் மற்றும் ஆக்கரமிப்புகளால் இரண்டு நூற்றாண்டுகளாக இலங்கையின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.[1][2][3]