இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை
மலேசிய கூட்டரசு சாலை 52 Malaysia Federal Route 52 Laluan Persekutuan Malaysia 52 | |
---|---|
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை Iskandar Coastal Highway Johor Bahru West Coast Parkway Lebuhraya Pesisir Pantai Iskandar | |
கோத்தா இசுகந்தர் நெடுஞ்சாலை (2016) | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 23 km (14 mi) இசுகந்தர் புத்தேரி–தங்கா விரிகுடா: 15 km (9.3 mi) தங்கா விரிகுடா–நகர மையம்: 8 km (5.0 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | இசுகந்தர் புத்திரி |
கோத்தா இசுகந்தர் சாலை புக்கிட் இண்டா நெடுஞ்சாலை | |
கிழக்கு முடிவு: | ஜொகூர் பாரு நகர மையம் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோத்தா இசுகந்தர்; பெர்லிங்; புக்கிட் இண்டா; தங்கா விரிகுடா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை அல்லது மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route 52; அல்லது Iskandar Coastal Highway) (ICH); (முன்னர்: ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway); மலாய்: Laluan Persekutuan Malaysia 52 அல்லது Lebuhraya Pesisir Pantai Iskandar (LPPI); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டத்தில் உள்ள கூட்டரசு சாலை ஆகும்.[1]
ஜொகூர் பாரு மாநகரத்தில் தற்போது மிகவும் பரபரப்பான சாலைகளில் இதுவும் ஒன்றாகும்.
பொது
[தொகு]இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலையின் கிலோமீட்டர் 0; இசுகந்தர் புத்திரியில் உள்ள லேடாங் வட்டச்சுற்று வழியில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டணமில்லா நெடுஞ்சாலை; மற்றும் இசுகந்தர் மலேசியா திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது இசுகந்தர் மலேசியாவில் கிழக்கு-மேற்கு நோக்கிய ஐந்தாவது அதிவேக நெடுஞ்சாலை ஆகும்.
இசுகந்தர் மலேசியாவில் உள்ள இதர நெடுஞ்சாலைகள்:
- பாசிர் கூடாங் நெடுஞ்சாலை - (Pasir Gudang Highway)
- பொந்தியான்-ஜொகூர் பாரு இணைப்பு - (Pontian–Johor Bahru Link)
- செனாய்-தெசாரு விரைவுச்சாலை - (Senai–Desaru Expressway)
- ஜொகூர் பாரு கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை - (Johor Bahru East Coast Highway)
அமைவு
[தொகு]இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை என்பது ஜொகூர் பாரு மேற்கு கடற்கரை பூங்கா சாலை (Johor Bahru West Coast Parkway) என்று அழைக்கப்பட்டது. 8 கிமீ (5 மைல்) நீளம் கொண்ட அந்தக் கடற்கரை பூங்கா சாலை, சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முன்பு மலேசிய கூட்டரசு சாலை 1-இன் ஒரு பகுதியாக இருந்தது.
இருப்பினும், 1965-இல் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்த பிறகு, சிங்கப்பூர் மக்களுக்கான வணிக மையமாக ஜொகூர் பாரு மாற்றம் கண்டது. அதன் காரணமாக சுகூடாய் நெடுஞ்சாலை கட்டப்படுவதற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இசுகந்தர் கடற்கரை நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது.
சாலைத் தரம்
[தொகு]இந்த நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[2]
விளக்கம்
[தொகு]- மலேசிய கூட்டரசு சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Route; மலாய்: Laluan Persekutuan Malaysia)
- மலேசிய நெடுஞ்சாலை: (ஆங்கிலம்: Malaysian Highway; மலாய்: Laluan Malaysia)
- மலேசிய விரைவுச்சாலை: (ஆங்கிலம்: Malaysian Expressway; மலாய்: Lebuhraya Malaysia)
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statistik Jalan (Edisi 2013). Kuala Lumpur: Malaysian Public Works Department. 2013. pp. 16–64. பன்னாட்டுத் தர தொடர் எண் 1985-9619.
- ↑ "Construction of roads in Malaysia implemented mainly by the Federal Government and State Government. However, since the mid-1980s, construction of toll roads has been started by private companies who then authorized by the government to charge tolls to road users" (PDF). www.piarc.org/. பார்க்கப்பட்ட நாள் 14 October 2024.