உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறாட்டுபுழா கோவில்

ஆள்கூறுகள்: 10°25′06″N 76°13′48″E / 10.418398°N 76.230039°E / 10.418398; 76.230039
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறாட்டுபுழா கோவில்
ஆறாட்டுபுழா கோவில் is located in கேரளம்
ஆறாட்டுபுழா கோவில்
ஸ்ரீ சாஸ்தா கோயில், ஆறாட்டுபுழா, திருச்சூர், கேரளா
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:திருச்சூர்
அமைவு:ஆறாட்டுபுழா
ஏற்றம்:28.39 m (93 அடி)
ஆள்கூறுகள்:10°25′06″N 76°13′48″E / 10.418398°N 76.230039°E / 10.418398; 76.230039
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளக் கட்டடக்கலை

ஆறாட்டுபுழா கோவில் (Arattupuzha Temple) என்பது மிகவும் பழமை வாய்ந்த மற்றும் புகழ் பெற்ற ஸ்ரீ தர்மா சாஸ்தா கோவிலைக் குறிப்பதாகும், இக்கோவில் இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில், திரிச்சூர் நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர்கள் தொலைவில் ஆறாட்டுபுழா என்ற கிராமத்தில் உள்ளது. திரிச்சூர் கொடுங்கல்லூர் சாலையில் அமைந்துள்ள தேவர் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.[1][2][3]

வரலாறு

[தொகு]

இந்தக் கோவில் 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. ஆண்டு தோறும் கொண்டாடப் படும் மிகவும் பழமையானதும், புராதனமானதும் ஆன மிகவும் புகழ் பெற்ற "தேவமாலா" திருவிழா இந்தக் கோவிலின் விசேஷமான திருவிழா ஆகும், அப்பொழுது ஆறாட்டுபுழாவில் அனைத்து தேவர்களும் தேவதைகளும் வந்து சங்கமிப்பதாக (கூடுவதாக) ஐதீகம்.

உலகில் உள்ள அனைத்து தேவ வடிவங்களின் தெய்வீகத்தன்மையின் சாரம் மற்றும் சக்தி இந்த ஆலயத்தின் இறைவன் உட்கிரகித்துக் கொள்கிறார். இடது கால் மடங்கி இருக்க, வலது காலும் இடது காலின் அருகே மடங்கி இருக்கும் நிலையில், மேலும் இடது கை இடது துடையில் அமைந்திருக்க, இறைவன் அமைதியான நிலையில் அமர்ந்து காணப்படுகிறார், மேலும் அவரது வலது கையில் அம்ருத கலசத்தை ஏந்தி, வலது கால் முழங்காலில் அதை தாங்கி அமர்ந்துள்ளார்.

இராமரின் மிகவும் குருவான வசிட்டரின் அவதாரமாக ஆறாட்டுபுழா கோவிலில் இருக்கும் ஈசன் கருதப்படுகிறார். வேறு எந்த இறைவன்/ இறைவியின் சன்னிதானமும் காணப்படாத மிகவும் அரிதான கோவில்களில் இது ஒன்றாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.arattupuzhasreesasthatemple.com/pages/home.html
  2. "Arattupuzha temple to webcast celebrations live". OneIndia. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  3. "Arattupuzha Temple". ArattupuzhaSasthaTemple. பார்க்கப்பட்ட நாள் 2023-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறாட்டுபுழா_கோவில்&oldid=3890626" இலிருந்து மீள்விக்கப்பட்டது