உள்ளடக்கத்துக்குச் செல்

அராஸ் சண்டை (1940)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆரஸ் சண்டை (1940) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அராஸ் சண்டை
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி

அராசில் ஒரு பிரெஞ்சுப் பதுங்கு குழி
நாள் மே 21, 1940[1]
இடம் அராஸ் , பிரான்சு
ஜெர்மானிய வெற்றி
  • பிரித்தானிய தாக்குதல் முறியடிப்பு
  • சுற்றி வளைக்கப்படாமலிருக்க பிரித்தானிய படைகள் பின் வாங்கின
  • பிரெஞ்சுத் தாக்குதல்கள் முறியடிப்பு
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
பிரான்சு பிரான்சு
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ஹரோல்ட் ஃபிராங்க்ளின் நாட்சி ஜெர்மனி எர்வின் ரோம்மல்
பலம்
74 டாங்குகள்[2]
இழப்புகள்
~35 டாங்குகள்[3]

50-75 (மாண்டவர்/காயமடைந்தவர்), 170 போர்க்கைதிகள் எஸ். எஸ் படையின்ரால் கொல்லப்பட்டனர்[4]

300 (மாண்டவர்/காயமடைந்தவர்)

400 (கைப்பற்றப்பட்டவர்)

அராஸ் சண்டை (Battle of Arras) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 21, 1940ல் நடந்த இச்சண்டையில் ஆங்கிலக் கால்வாயை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த நாசி ஜெர்மனியின் படைகள் நேச நாட்டுப் படைகளின் எதிர்த் தாக்குதலை முறியடித்தன.

ஜெர்மானியப் படைகள் மே 10 ஆம் தேதி பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளை பெல்ஜியத்தில் பொறி வைத்துப் பிடிப்பது ஜெர்மானியரின் திட்டம். மே 15ல் செடான் சண்டையில் வெற்றியடைந்ததால் அவர்களால் நேச நாட்டுப் படைகளை பெல்ஜியத்தில் சுற்றி வளைக்க முடிந்தது. சுற்றி வளைத்தபின் ஆங்கிலக் கால்வாய் ஓரமாக அவை பெல்ஜியத்தை நோக்கி முன்னேறத் தொடங்கின. நேச நாட்டுப் படைகளைச் சுற்றியிருந்த ஜெர்மானியப் படைவளையம் இறுகத் தொடங்கியது. சிக்கிக் கொண்ட பொறியிலிருந்து தப்ப நேச நாட்டுப் படைகள் ஜெர்மானிய முன்னேற்றத்தின் பக்கவாட்டில் தாக்கின. ஆரம்பத்தில் இந்த எதிர்தாக்குதல் நலல விளைவுகளைக் கொடுத்தாலும், ஜெர்மானியப் படைகள் விரைவில் சுதாரித்து இதை முறியடித்தன. பொறியிலிருந்து தப்பிக்கும் முயற்சியில் இத்தாக்குதல் தோல்வியடைந்தாலும், இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெர்மானிய தலைமையகம், தனது படைகளின் முன்னேற்றத்தை ஒரு நாள் நிறுத்தி வைத்தது. இந்தத் தாமதம் பொறியில் சிக்கியிருந்த நேச நாட்டுப் படைகளில் பெரும்பகுதி டன்கிர்க் துறைமுகம் வழியாக இங்கிலாந்துக்குத் தப்ப உதவியது.

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Bond 1990, p. 71
  2. Harmon 1981, p. 93.
  3. Harmon 1981, p. 100.
  4. Harmon 1981, p. 88.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அராஸ்_சண்டை_(1940)&oldid=3924521" இலிருந்து மீள்விக்கப்பட்டது