ஆரஞ்சு வரியன்
ஆரஞ்சு வரியன் | |
---|---|
Upperside | |
Underside | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. genutia
|
இருசொற் பெயரீடு | |
Danaus genutia (Cramer, [1779]) | |
வேறு பெயர்கள் | |
|
வரியன்கள், சிறகன்கள், வசீகரன்கள் யாவும் (நிம்பாலிடே) Nymphalidae குடும்பத்தை சார்ந்தது ஆகும். இதில் ஒரு அழகிய வண்ணதுப்பூச்சி ஆரஞ்சு வரியன்.
பெயர்கள்
[தொகு]தமிழில்: ஆரஞ்சு வரியன்
ஆங்கிலப்பெயர்: Striped Tiger
அறிவியல் பெயர்: Danaus genutia [1]
உடலமைப்பு
[தொகு]72 மி.மீ முதல் 100 மி.மீ வரை இருக்கும், ஆரஞ்சு நிற இறகுகளில் கருப்பு கலந்த பழுப்பு நிறக் வரிகளுடன் காணப்படும். இறகுளின் ஓரத்திலும் கீழ்ப் பகுதிகளிலும் வெள்ளைப் பட்டைகள் காணப்படும். தரையை ஒட்டி மெதுவாகப் பறக்கும் திறன் கொண்டது. ஆண்டு முழுவதும் காணப்படும் ஆரஞ்சு வரியன்களை அனைத்து இடங்களிலும் காணலாம். பார்ப்பதற்கு வெந்தய வரியனை போன்று காணப்பட்டாலும் சிறு மாற்றங்களை காணலாம். இவற்றில் தெளிவான கருப்பு நரம்புகள் காணப்படும். [2]
வாழ்க்கை சுழற்சி
[தொகு]இந்த பட்டாம்பூச்சி தனித்த முட்டைகளை இதற்கு உணவாகும் அஸ்லிபிலடாசிய குடும்பத் தாவரத்தின் இலையின் அடிப்பகுதியில் இடுகின்றது. இதனுடைய இளம் உயிரி கருப்பு நிறத்தில் ஊத கலந்த மஞ்சள் நிறப் புள்ளி மற்றும் கோடுகளுடன் காணப்படும். இதற்கு மூன்று இணை உணர்கொம்புகள் காணப்படும். முட்டையிலிருந்து வெளிவந்தவுடன், இந்த இளம் உயிரி முட்டை ஓட்டினை உண்ணும். பின்னர் இலையினை உண்ண ஆரம்பிக்கும். கிரைசாலிஸ் எனப்படும் கூட்டுப்புழுவானது பசுமை நிறத்தில் தங்க மஞ்சள் நிறப் புள்ளிகளுடன் காணப்படும்.[3]
புழுக்களுக்கு உணவாகும் தாவரங்கள்
[தொகு]- இரத்த எருக்கு
- பஞ்சுகொடி
வெளி இணைப்புகள்
[தொகு]- Sri Lanka Wild Information Database பரணிடப்பட்டது 2011-07-18 at the வந்தவழி இயந்திரம்
படங்கள்
[தொகு]Gallery
[தொகு]-
முட்டை
-
கம்பளிப்பூச்சி
-
கூட்டுப் புழு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Danaus_genutia 'ஆரஞ்சு வரியன்'". பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2017.
- ↑ காடு தடாகம் வெளியீடு மே-ஜூன் 2016,பக்கம் எண்:38
- ↑ Kunte (2000): 45, pp. 148–149.
- ↑ அறிமுக கையேடு வண்ணத்துப்பூச்சிகள் டாக்டர் ஆர்.பானுமதி க்ரியா வெளியீடு ,பக்கம் எண்:159