உள்ளடக்கத்துக்குச் செல்

அர்கைரோதைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்கைரோதைட்டு
Argyrodite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுAg8GeS6
இனங்காணல்
நிறம்கருப்பு,செவ்வூதா
படிக இயல்புபோலி எண்முகம் அல்லது போலி கனசதுரம், பன்னிருமுகம், கனசதுரம்; கதிர்வீசும் படிகங்கள், கொத்து மேலோடுகள்
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்சூடோசிபைனல் சட்டம் {111} உட்செலுத்திய இரட்டைகள்
பிளப்புஇல்லை
முறிவுசமமற்றும் சங்குருவமும்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகம்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி6.2-6.5
ஒளியியல் பண்புகள்பலவீனம்
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
மேற்கோள்கள்[1][2]

அர்கைரோதைட்டு (Argyrodite) என்பது Ag8GeS6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். வெள்ளி செருமேனியம் சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. உலோகப் பளபளப்பும் இரும்பு அல்லது எஃகு தோற்றத்தை அளிக்கும் கருப்பு நிறமும் அர்கைரோதைட்டு கனிமத்தின் தோற்றப் பண்புகளாகும். 1886 ஆம் ஆண்டு கிளமென்சு விங்ளெர் அர்கைரோதைட்டை கண்டுபிடித்தார்[3]. செருமேனியம் தனிமம் தனிமைப்படுத்தப்பட்ட சிறிது காலத்திற்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதால் இக்கனிமம் அதிகமான கவனத்தை ஈர்த்தது. மெண்டலீவ் பரிந்துரைத்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு இது விவரிக்கப்பட்டது. செருமனி நாட்டின் சாக்சோனி மாநிலத்திலுள்ள பிரீபெர்கு என்ற சுரங்க நகரத்தில் இம்மெல்சுபர்சுட்டு சுரங்கத்தில் முதன்முதலில் இக்கனிமம் கிடைத்தது[2]. பிரீபெர்கு கனிமம் முன்னதாக ஆகத்து பிரீதாப்ட் என்பவர் தவறுதலாக பிளசிங்லான்சு என்ற பெயரில் விவரித்திருந்தார். இதேபோல பொலிவியன் படிகங்கள் 1849 ஆம் ஆண்டில் படிகப்படுத்தப்பட்ட புரோங்னியார்தைட்டு என்றும் தவறாக விவரிக்கப்பட்டிருந்தன[3].

வெள்ளீயத்தை உட்கூறாகக் கொண்டுள்ள Ag8SnS6 கனிமம் அர்கைரோதைட்டுடன் சம உருவத்தைக் கொண்டுள்ளது. இதுவும் பொலிவியாவில் போலிகனசதுரப் படிகங்களாகக் கிடைக்கிறது. இக்கனிமம் கான்பீல்தைட்டு என்ற பெயரில் அறியப்படுகிறது[3]. தொடர்புடைய (Cu4.7Ag3.3)GeS6. என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட புட்சைட்டு என்ற கனிமமும் அறியப்படுகிறது.

வெள்ளி மிகு கனிமம் என்ற பொருள் கொண்ட கிரேக்க சொல்லிலிருந்து அர்கைரோதைட்டு என்ற பெயர் வருவிக்கப்பட்டு கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது[1].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் அர்கைரோதைட்டு கனிமத்தை Agy[4]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Mindat.org
  3. 3.0 3.1 3.2 Spencer 1911, ப. 488.
  4. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்கைரோதைட்டு&oldid=4091671" இலிருந்து மீள்விக்கப்பட்டது