உள்ளடக்கத்துக்குச் செல்

அபுகிர் விரிகுடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபூகீர் விரிகுடா
செயற்கைக்கோளிலிருந்து பார்க்கையில் அபூகீர் விரிகுடா
அபூகீர் விரிகுடா is located in Egypt
அபூகீர் விரிகுடா
அபூகீர் விரிகுடா
எகிப்தில் அபூகீர் விரிகுடா
அமைவிடம்பெஹீரா ஆளுகை
ஆள்கூறுகள்31°18′N 30°10′E / 31.300°N 30.167°E / 31.300; 30.167
வகைவிரிகுடா
பூர்வீக பெயர்அரபு மொழி: خليج أبو قير
சொற்பிறப்புஅபூ கீர் என்பது கோப்டிக்கு திருச்சபையைச் சேர்ந்த அருட்தந்தை சைரசின் அராபியப் பெயராகும் .
Part ofநடுநிலக் கடல்
முதன்மை வரத்துநைல் முகவையிலுள்ள ரோஸட்டா, இட்கூ ஏரி
மேற்பரப்பளவு500–600 km2 (190–230 sq mi)
சராசரி ஆழம்10–12 m (33–39 அடி)
அதிகபட்ச ஆழம்18 m (59 அடி)
நீர்க் கனவளவு5–6 km3 (1.2–1.4 cu mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்கடல் மட்டம்
மேற்கோள்கள்நீர் ஊட்டமடைதல்: காரணிகள், விளைவுகள் மற்றும் கட்டுப்பாடுகள்.[1]

அபூகீர் விரிகுடா (Abū Qīr Bay, Abukir Bay அல்லது Aboukir Bay, (Arabic: خليج أبو قير‎; transliterated: Khalīj Abū Qīr) என்பது மத்திய தரைக்கடலில், எகிப்தில் அமைந்துள்ள ஒரு விரிகுடாவாகும். பண்டைய நகரங்களான கனோபசு,[2] கெராக்லியோன்,[3] மற்றும் மெனூத்திஸ்,[4] இந்த வளைகுடா நீருக்கடியில் மூழ்கியுள்ளன. இந்த வளைகுடாவில் இயற்கை எரிவளிவயல் 1970-களில் கண்டுபிடிக்கப்பட்டது.

அபூகீர் விரிகுடா

அமைவிடம்

[தொகு]

அபூகீர் விரிகுடா 31°23’ வடக்கு 30°13’ கிழக்கில் அமைந்துள்ளது. இது எகிப்தின் அலெக்சாந்திரியாவுக்கு அருகில் நைல் ஆற்றின் முகவையிலுள்ள ரோஸெட்டா நகருக்கும் அலெக்ஸாந்திரியாவின் தென் மேற்கிலுள்ள அபூ கீர் நகருக்கும் இடையில் அரைவட்ட வடிவில் அமைந்துள்ளது.

அபூகீர் விரிகுடாவின் சிறப்பு

[தொகு]

இவ்விரிகுடா எகிப்து அரபுக் குடியரசின் ஆட்சிக்குட்பட்டது. இவ்விரிகுடாவில் 1798 ஆம் ஆண்டு ஹோரஷியோ நெல்சன் தலைமையிலான் பிரித்தானிய கப்பற்படைக்கும் நெப்போலியன் தலைமையிலான பிரான்ஸின் முதலாம் பேரரசின் கப்பற்படைக்கும் இடையில் நிகழ்ந்த நைல் போரில் நெப்போலியனின் படை தோற்கடிக்கப்பட்டது.

நூலோதி

[தொகு]
  • தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு: அறிவியல் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் எண்:858
  • Encyclopaedia Americana, Vol-14, 1980 Page-519

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ansari, Abid A.; Singh, Gill Sarvajeet; Lanza, Guy R.; Rast, Walter (2010). Eutrophication: causes, consequences and control. Vol. Volume 1. Springer Science & Business Media. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789048196258. {{cite book}}: |volume= has extra text (help)
  2. Rothstein, Edward (3 June 2010). "Cleopatra’s Underwater Kingdom". The New York Times. https://www.nytimes.com/2010/06/04/arts/design/04cleo.html. 
  3. "Lost underwater city explored in documentary". Νεος Κοσμος. 3 May 2013. http://neoskosmos.com/news/en/Lost-underwater-city-explored-in-documentary. 
  4. Stanford University(11 December 2000). "Scientists, archaeologists and historians will unravel the mystery of Egypt's sunken cities". செய்திக் குறிப்பு. பரணிடப்பட்டது 2020-06-22 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுகிர்_விரிகுடா&oldid=3659556" இலிருந்து மீள்விக்கப்பட்டது