அதலஜ்
அதலஜ்
અડાલજ | |
---|---|
city | |
Country | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | காந்தி நகர் |
ஏற்றம் | 68 m (223 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 11,957 |
Languages | |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
PIN | |
வாகனப் பதிவு | GJ |
இணையதளம் | gujaratindia |
அதலஜ் (Adalaj) இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும்.
புவியியல்
[தொகு]அதலஜ் சராசரியாக 68 மீட்டர்கள் (223 அடி) உயரத்தில் உ��்ளது.[சான்று தேவை]
விளக்கப்படங்கள்
[தொகு]2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, இங்கு மக்கள்தொகை 9,774 பேர் ஆகும். ஆண்கள் 51 விழுக்காடும் பெண்கள் 49 விழுக்காடாகவும் உள்ளனர்.அடலஜில் 61% சராசரியாக கல்வியறிவு பெற்றிருக்கின்றனர். இது 59.5% என்ற தேசிய அளவை விட அதிகம். ஆண்களின் கல்வியறிவு 59 விழுக்காடாகவும், பெண்களின் கல்வியறிவு 41 விழுக்காடாகவும் உள்ளது. மக்கள் தொகையில் 15 விழுக்காடு பேர் 6 வயதிற்கும் குறைவானவர்கள்.
அதலஜ் படிக்கிணறு
[தொகு]அதலஜ் படிக்கிணறு நகரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாகும், இது காந்திநகரிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிணறு கி. பி 1498 தனது கணவர் ரானா வீர் சிங் என்ற மன்னரின் நினைவாக அவரது ராணி ருடாபாய் என்பவரால் கட்டப்பட்டது.[1] குஜராத்தி மொழியில் இக்கிணறு ”வாவ்” என்று அழைக்கப்படுகிறது. இதன் படிகள் சிறந்த கலையம்சத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குப் பல கதைகள் வழங்கப்படுகின்றன. அதன் சுவர்கள் மற்றும் தூண்களில் உள்ள செதுக்கல்களில் இலைகள், பூக்கள், பறவைகள், மீன், வடிவியல் வடிவங்கள் மற்றும் பிற வியப்புக்குரிய அலங்கார வடிவமைப்புகள் உள்ளன.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Editor (11 January 2018). "All you need to know about Adalaj Ni Vav,Gandhinagar". Ashaval.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
{{cite web}}
:|last=
has generic name (help)