உள்ளடக்கத்துக்குச் செல்

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. அணைக்கட்டில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள்வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 1,31,047 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 29,068 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 12,728 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:[3]

அணைக்கட்டு, அப்புக்கல், அத்திக்குப்பம், பிராமணமங்கலம், தேவிசெட்டிக்குப்பம், இலவம்பாடி, இறைவன்காடு, கெங்கநல்லூர், சார்தன்கொல்லை,கழணிப்பாக்கம், கந்தனேரி, கரடி���ுடி, கருங்காலி, கீழ்கொத்தூர்,கீழ்க்கிருட்டிணாபுரம், மடையப்பட்டு, மகமதுபுரம், மருதவல்லிப்பாளையம்,மேலரசம்பட்டு, நேமந்தபுரம், ஒதியத்தூர், ஒங்கப்பாடி, பாலம்பட்டு, பீஞ்சமந்தை, பின்னத்துரை, பொய்கை,புத்தூர், சத்தியமங்கலம், செதுவாலை, சேர்பாடி, திப்பசமுத்திரம், ஊனை, வல்லண்டராமம், ஊனைவாணியம்பாடி, வண்ணாந்தாங்கல், வரதலாம்பட்டு, வசந்தநடை மற்றும் விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றங்கள் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளன.

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/05-Vellore.pdf
  3. அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்