அகிம்சை
அகிம்சை, அல்லது அஹிம்சை (ⓘ) (சமக்கிருதம்: अहिंसा, ஆங்கிலம்: Ahimsa, பாளி:[1] ‘காயப்படுத்தாமை' அல்லது ‘இரக்க உணர்வு' என்று பொருள்படும்) இந்திய சமயங்களில் ஒரு முக்கிய ஒழுக்கத்தைக் குறிக்கிறது.[2][3][4]
“ஹிம்சை” என்பது ‘காயம்’ அல்லது ‘தீங்கு’ ஆகும். ‘அஹிம்சை’ இதற்கு எதிா்மாறான பொருள் கொண்டது. அதாவது "காயம் ஏற்படுத்தாதீா்கள்", “தீங்கு செய்யாதீா்கள்” என்பது பொருள்.[5][6] அகிம்சை என்பது அறப் போராட்டத்தையும் குறிக்கும். அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் என்று இந்திய மதங்கள் குறிப்பிடுகின்றன.[7]
சைனம், இந்து சமயம், பௌத்தம் ஆகியவற்றில் ‘அகிம்சை’ என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.[3] அகிம்சை என்பது பல பரிமாணக் கருத்துகளைக் கொண்டது.[8] பிறரின் காயத்தைத் தடுக்க, தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளுதல் என்றும் பொருள்படும். இந்து மதத்தின் பண்டைய அறிஞா்கள், அகிம்சைக் கொள்கைகளில் முன்னோடியாக இருந்தனா். காலப்போக்கில் அகிம்சை கொள்கைகளை பூா்த்தி செய்தனா். அகிம்சை, ஜைனத்தின் நெறிமுறை தத்துவத்தில் ஒரு அசாதாரண நிலையை அடைந்துள்ளது.[3][9] பொ.ஊ.மு. முதலாம் நூற்றாண்டுக்கும் பொ.ஊ. 5-ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்த தமிழ்ப் புலவரான வள்ளுவர் அகிம்சை மற்றும் புலால் மறுத்தலை தனிநபர் நற்��ண்புகளாக வலியுறுத்தி அவற்றை தனது நூலின் மைய போதனைகளாக அமைத்தார்.[10] மிகப் பிரபலமாக, மகாத்மா காந்தி அகிம்சை கொள்கையில் உறுதியாக இருந்தாா். ‘காயப்படுத்தாமை‘ என்பது ஒருவரின் சொல், செயல், வாா்த்தை மற்றும் எண்ணம் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.[11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rune E. A. Johansson (6-12-2012). Pali Buddhist Texts: An Introductory Reader and Grammar. Routledge. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-11106-8.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ "Sanskrit dictionary reference". Archived from the original on 2020-09-17. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
- ↑ 3.0 3.1 3.2 Stephen H. Phillips & other authors (2008), in Encyclopedia of Violence, Peace, & Conflict (Second Edition), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-373985-8, Elsevier Science, Pages 1347–1356, 701–849, 1867
- ↑ Dundas, Paul: The Jains, second edition, London 2002, p. 160; Wiley, Kristi L.: Ahimsa and Compassion in Jainism, in: Studies in Jaina History and Culture, ed. Peter Flügel, London 2006, p. 438; Laidlaw pp. 153–154.
- ↑ Mayton, D. M., & Burrows, C. A. (2012), Psychology of Nonviolence, The Encyclopedia of Peace Psychology, Vol. 1, pages 713–716 and 720–723, Wiley-Blackwell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4051-9644-4
- ↑ பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம், see Ahimsa
- ↑ Bajpai, Shiva (2011). The History of India - From Ancient to Modern Times, Himalayan Academy Publications (Hawaii, USA), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-38-8; see pages 8, 98
- ↑ John Arapura in K. R. Sundararajan and Bithika Mukerji Ed. (1997), Hindu spirituality: Postclassical and modern, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1937-5; see Chapter 20, pages 392–417
- ↑ Chapple, C. (1990). Nonviolence to animals, earth and self in Asian Traditions (see Chapter 1). State University of New York Press (1993)
- ↑ Das, G. N. (1997). Readings from Thirukkural. Abhinav Publications. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-1701-7342-6.
- ↑ Gandhi, M. (2002). The essential Gandhi: an anthology of his writings on his life, work, and ideas. Random House Digital, Inc.