உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி (Prostate-specific antigen, PSA), அல்லது காம்மா-விரைப்புரதம் (gamma-seminoprotein) அல்லது கல்லிக்ரீன் (kallikrein-3, KLK3), என்பது மனிதர்களில் KLK3 மரபணுவால் குறியிடப்பட்ட கிளைக்கோபுரதம் நொதியம் ஆகும். பிஎஸ்ஏ கல்லிக்ரீன் தொடர்புடைய புரத நொதி குடும்பத்தைச் சேர்ந்தது; இதனை முன்னிற்கும் சுரப்பியின் புறவணியிழைய உயிரணுக்கள் சுரக்கின்றன. இது விந்து தள்ளலுக்காக உருவாக்கப்படுகிறது; விரையுறையில் விந்து பாய்மத்தை நீர்த்து விந்து இலகுவாக நீந்த உதவுகிறது.[1] மேலும் இது கருப்பைச் சளியை கரைத்து கருப்பைக்குள் விந்து செல்லுவதற்கு வழி செய்வதாகவும் நம்பப்படுகிறது. [2]

நலமுள்ள முன்னிற்குஞ்சுரப்பிகளை உடைய ஆடவர்களின் குருதி நீர்மத்தில் பிஎஸ்ஏ சிறிய அளவில் காணப்படுவதுண்டு. ஆனால் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோய் அல்லது பிற முன்னிற்குஞ்சுரப்பி தொடர்பான நோய்களின்போது இது கூடிய அளவில் காணப்படுகிறது.[3]

மேற்சான்றுகள்

  1. Balk SP, Ko YJ, Bubley GJ (January 2003). "Biology of prostate-specific antigen". J. Clin. Oncol. 21 (2): 383–91. doi:10.1200/JCO.2003.02.083. பப்மெட்:12525533. 
  2. Hellstrom WJG, ed. (1999). "Chapter 8: What is the prostate and what is its function?". American Society of Andrology Handbook. San Francisco: American Society of Andrology. ISBN 1-891276-02-6. {{cite book}}: |access-date= requires |url= (help); |archive-url= requires |url= (help); Unknown parameter |chapterurl= ignored (help)
  3. . பப்ம���ட்:7512659. 

வெளி இணைப்புகள்