இரும்பு(III) பாசுப்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) பாசுப்பேட்டு
| |
வேறு பெயர்கள்
பெர்ரிக் ஆர்த்தோபாசுப்பேட்டு, பெர்ரிக் பாசுப்பேட்டு
| |
இனங்காட்டிகள் | |
10045-86-0 (நீரிலி) 13463-10-0 (இருநீரேற்று) | |
ChEBI | CHEBI:131371 |
ChemSpider | 23244 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24861 |
| |
UNII | N6BAA189V1 |
பண்புகள் | |
FePO4 | |
வாய்ப்பாட்டு எடை | 150.815 கி/மோல் (நீரிலி) |
தோற்றம் | மஞ்சள் பழுப்பு திண்மம் |
அடர்த்தி | 3.056 கி/செ.மீ3 (நீரிலி) 2.87 கி/செ.மீ3 (20 °செல்சியசு, இருநீரேற்று) |
உருகுநிலை | 250 °C (482 °F; 523 K) (இருநீரேற்று) சிதைவடையும்[1] |
நீரிலி: insoluble இருநீரேற்று: 0.642 கிராம்/100 மி.லிட்டர் (100 °செல்சியசு)[1] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
9.91×10−16[2] |
+11,500.0·10−6 செ.மி3/மோல் | |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
-1888 கிலோயூல்/மோல் (இருநீரேற்று)[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
171.3 யூல்/மோல்·கெல்வின் (இருநீரேற்று)[1] |
வெப்பக் கொண்மை, C | 180.5 யூல்/மோல்·கெல்வின் (இருநீரேற்று)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | [3] |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335[3] | |
P261, P305+351+338[3] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(III) பாசுப்பேட்டு (Iron(III) phosphate) என்பது FePO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர்ரிக் பாசுப்பேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.[4][5] நீரற்ற இரும்பு(III) பாசுப்பேட்டு சேர்மத்திற்கு நான்கு வெவ்வெறு உருவங்களும் கூடுதலாக இரும்பு(III) பாசுப்பேட்டு இருநீரேற்றுக்கு (FePO4·(H2O)2 இரண்டு உருவங்களும் உள்ளன. இந்த பொருட்கள் மின்கலன்களில் சாத்தியமான எதிர்மின்வாய் பொருட்களாக அதிக ஆர்வத்தை ஈர்த்துள்ளன.
கட்டமைப்பு
[தொகு]இரும்பு(III) பாசுப்பேட்டு சேர்மம் பொதுவாக α-குவார்ட்சு கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இதன் அடிப்படையில் இக்கட்டமைப்பில் நான்முகி Fe(III) மற்றும் பாசுப்பேட் தளங்கள் உள்ளன.[6] இதனால் P மற்றும் Fe ஆகியவை நான்முக மூலக்கூறு வடிவவியலைக் கொண்டுள்ளன. உயர் அழுத்தங்களில், எண்முக Fe மையங்களுடன் மிகவும் அடர்த்தியான கட்டமைப்பிற்கு ஒரு கட்ட மாற்றம் ஏற்படுகிறது. இரண்டு செஞ்சாய்சதுர கட்டமைப்புகளும் ஓர் ஒற்றைச்சரிவச்சு கட்டமைப்பும் அறியப்படுகின்றன. இருநீரேற்றின் இரண்டு உருவங்களில் Fe மையம் இரண்டு பரசுபர சிசு நீர் ஈந்தணைவிகளுடன் எண்முகமாக உள்ளது.[7]
பயன்கள்
[தொகு]இரும்பு(III) பாசுப்பேட்டு எஃகு மற்றும் உலோக உற்பத்தி செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் உலோக மேற்பரப்பில் பிணைக்கப்படும் போது, இரும்பு பாசுப்பேட்டு உலோகத்தின் மேலும் ஆக்சிசனேற்றத்தைத் தடுக்கிறது. இதன் இருப்பு தில்லி இரும்புத் தூணின் அரிப்பு எதிர்ப்பிற்கு ஓரளவு காரணமாகும்.
இரும்பு(III) பாசுப்பேட்டு பூச்சுகள் பொதுவாக சாயங்கள் அல்லது தூள் பூச்சு தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இது இரும்பு அல்லது எஃகு அடி மூலக்கூறில் ஒட்டுதலை அதிகரிக்கவும், அரிப்பைத் தடுக்கவும் பயன்படுகிறது. அடுத்தடுத்த பூச்சு செயல்முறைகளில் இது முன்கூட்டியே தோல்வியை ஏற்படுத்தும்.
இலித்தியம் இரும்பு பாசுப்பேட்டு சேர்மத்தை தயாரிக்க இரும்பு(III) பாசுப்பேட்டு பயன்படுகிறது.[8] இது இலித்தியம் இரும்பு பாசுப்பேட்டு மின்கலங்களில் உள்ள எதிர்மிவாயை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.[9][10]
பூச்சிக் கொல்லி
[தொகு]கரிம வேளாண்மையில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட சில மெல்லுடலி கொல்லிகளில் இரும்பு பாசுப்பேட்டும் ஒன்றாகும்.[11] பூச்சிக்கொல்லி மாத்திரைகளில் இரும்பு பாசுப்பேட்டும் ஈடிடிஏ எனப்படும் எத்திலீன் டையமீன் டெட்ரா அசிட்டிக் அமிலம் போன்ற இடுக்கும் முகவியும் சேர்ந்திருக்கும்.[12]
கனிமம்
[தொகு]சிட்ரெங்கைட்டு என்பது நீரேறிய இரும்பு(III) பாசுப்பேட்டின் கனிம வடிவமாகும்.
சட்ட அங்கீகாரம்
[தொகு]ஐரோப்பிய ஒன்றியத்தில் இரும்பு(III) பாசுப்பேட்டு ஓர் உணவு சேர்க்கையாக அனுமதிக்கப்படவில்லை. 2007 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 2002/46/ஈசி உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட பொருட���களின் பட்டியலிலிருந்து இது திரும்பப் பெறப்பட்டது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "iron(III) phosphate dihydrate". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 3 July 2014.
- ↑ John Rumble (June 18, 2018). CRC Handbook of Chemistry and Physics (in English) (99 ed.). CRC Press. pp. 5–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1138561632.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 3.0 3.1 3.2 Sigma-Aldrich Co., Iron(III) phosphate dihydrate. Retrieved on 2014-05-03.
- ↑ "Iron(III) Phosphate". NIH, U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- ↑ "FERRIC PHOSPHATE". EndMemo.com. பார்க்கப்பட்ட நாள் 22 January 2016.
- ↑ Haines, J.; Cambon, O.; Hull, S. (2003). "A neutron diffraction study of quartz-type FePO4: High-temperature behavior and α–β phase transition". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 218 (3): 193. doi:10.1524/zkri.218.3.193.20755. Bibcode: 2003ZK....218..193H.
- ↑ Zaghib, K.; Julien, C. M. (January 2005). "Structure and electrochemistry of FePO4·2H2O hydrate". Journal of Power Sources 142 (1–2): 279–284. doi:10.1016/j.jpowsour.2004.09.042. Bibcode: 2005JPS...142..279Z. https://www.researchgate.net/publication/245105788. பார்த்த நாள்: 3 July 2014.
- ↑ "Lithium iron phosphate comes to America". Chemical & Engineering News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-12.
- ↑ Roncal-Herrero, T., Rodriguez-Blanco, J.D., Benning, L.G., Oelkers, E.H. (2009) Precipitation of Iron and Aluminium Phosphates Directly from Aqueous Solution as a Function of Temperature from 50 to 200°C. Crystal Growth & Design, 9, 5197-5205. doi: 10.1021/cg900654m.
- ↑ Song, Y.; Zavalij, P. Y.; Suzuki, M.; Whittingham, M. S. (2002). New Iron(III) Phosphate Phases: Crystal Structure and Electrochemical and Magnetic Properties. 41. பக். 5778–5786. doi:10.1021/ic025688q. பப்மெட்:12401083. http://materials.binghamton.edu/whittingham/pdfpapers/IC_41_5778_02.pdf. பார்த்த நாள்: 3 July 2014.
- ↑ "COMMISSION REGULATION (EC) No 889/2008". European Union law. பார்க்கப்பட்ட நாள் 3 July 2014.
- ↑ "The Regional Institute - Slugs, Snails and Iron based Baits: An Increasing Problem and a Low Toxic Specific Action Solution 1". www.regional.org.au. 11 September 2018.