மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம்
சுங்கை பீசியில் தற்போதைய பல்கலைக்கழகம் | |
முந்தைய பெயர்கள் | மலேசிய இராணுவக் கழகம் (ATMA) |
---|---|
குறிக்கோளுரை | கடமை, மரியாதை, நேர்மை Kewajipan, Maruah, Integriti Duty, Honour, Integrity |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1995 (Akademi Tentera Malaysia) 2006 மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் (Universiti Pertahanan Nasional Malaysia) |
வேந்தர் | மலேசியப் பேரரசர் இப்ராகிம் இசுகந்தர் |
துணை வேந்தர் | டத்தோ மார்சுக்கி முகமது (Datuk Mardzuki bin Muhammad) |
படைத்தலைவர் | லெப்டினன்ட் கானல் இப்ராகிம் யாசிர் |
அமைவிடம் | சுங்கை பீசி முகாம், 57000 , , 3°8′8″N 101°41′16″E / 3.13556°N 101.68778°E |
வளாகம் | சுங்கை பீசி முகாம் |
நிறங்கள் | கருநீலம், சிகப்பு, மயில் நிறம் |
சேர்ப்பு | மலேசிய பாதுகாப்பு படைகள் |
இணையதளம் | www |
மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் (National Defence University of Malaysia, மலாய்: Universiti Pertahanan Nasional Malaysia; NDUM அல்லது UPNM) என்பது மலேசியா, கோலாலம்பூர், சுங்கை பீசி முகாமில் அமைந்துள்ள ஓர் இராணுவப் பல்கலைக்கழகம் ஆகும். மலேசிய ஆயுதப் படைகளின் தேவைகள் மற்றும் மேம்பாட்டிற்கான முதல் இராணுவப் பல்கலைக் கழகமாக அமைக்கப்பட்டது.
தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய 2,700 இளங்கலை மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 890-க்கும் மேற்பட்டோர் இராணுவ அதிகாரிகளுக்கான நான்கு - ஐந்து ஆண்டுகள் பயிற்சிகளைப் பெறுகின்றனர்.
பொது
[தொகு]மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகம் என்பது முதலில் மலேசிய இராணுவக் கழகம் (ATMA) அல்லது மலேசிய ஆயுதப் படைகளின் கழகம் என தன் சேவைகளைத் தொடங்கியது. இந்தப் பல்கலைக்கழகம் 1 சூன் 1995-இல் நிறுவப்பட்டது. இராணுவப் பயிற்சியுடன் பொறியியல், அற��வியல் மற்றும் மேலாண்மைத் துறைகளில் இளங்கலைப் பட்டங்களை வழங்கிய ஓர் அமைப்பாக இயங்கி வந்தது.
வரலாறு
[தொகு]தொடக்கத்தில் இளங்கலை பட்டப் படிப்புகள், மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தால் (Universiti Teknologi Malaysia) அங்கீகரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. விரிவுரையாளர்கள் சிலர் ஆயுதப் படைகளில் இருந்து வந்தனர்; சிலர் மலேசிய இராணுவக் கழகத்தால் பணியில் அமர்த்தப்பட்டனர்; மீதமுள்ளவர்கள் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் ஆகும்.
10 நவம்பர் 2006 அன்று, மலேசிய இராணுவக் கழகம், பல்கலைக்கழகத் தகுதிக்கு தரம் உயர்த்தப்பட்டது. மலேசிய நாடாளுமன்றத்தில் 2007-ஆம் ஆண்டு வரவு செலவு அறிக்கை வழங்கப்பட்ட போது, அப்போதைய பிரதமர் டத்தோ ஸ்ரீ அப்துல்லா அகமது படாவி அவர்களால் அறிவிக்கப்பட்டது.
சுங்கை பீசி முகாம்
[தொகு]பல்கலைக்கழகத்தின் முதன்மை வளாகம் கோலாலம்பூரில் உள்ள சுங்கை பீசி முகாமில் உள்ளது. இந்த வளாகத்தின் கட்டுமானம் 2002-இல் நிறைவடைந்தது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னரே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.[1]
பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு RM 500 மில்லியன் ரிங்கிட் செலவானது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கட்டுமானச் செலவுகளை மலேசிய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொண்டது. 2007/2008-ஆம் கல்வியாண்டு அமர்வுக்காகப் பல்கலைக்கழகத்தின் முதல் மாணவர் சேர்க்கை அமைந்தது.[2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ UPNM: "UPNM; location UPNM - lokasi UPNM", June 2007
- ↑ New Straits Times: "UPNM inaugural convocation; UPNM all set to celebrate first convocation", 8 October 2010