உள்ளடக்கத்துக்குச் செல்

நகுலன் (மகாபாரதம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2402:4000:b130:e288:1776:4ca4:f31f:9aca (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 14:35, 29 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நகுலன் மகாபாரதத்தில் வரும் பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாத்ரியின் புதல்வராவார்.நகுலன் மிகவும் அழகான தோற்றம் கொண்டவர் ஆவார். இவர் அஸ்வினி குமார தேவர்களின் மூலமாக பிறந்தவர். இவரும் சகாதேவனும்இரட்டையர்கள் ஆவர்.

பாண்டவர்கள் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கையின் போது, நகுலன், கிரந்திகன் என்ற மாற்றுப் பெயருடன் விராடமன்னனின் போர்க்குதிரைகளை மேற்பார்வையிடுபவராக மாறுவேடம் தாங்கினார்.[1] நகுலன் மிகவும் அழகானவராகக் கூறப்பட்டுள்ளார்.குதிரைகளை பராமரிப்பதில் வல்லவர், குதிரைகளின் மொழி அறிந்தவர்(அதற்கு பரிபாஷை என்று பெயர்),மேலும் குதிரைகளை மின்னல் வேகத்தில் செலுத்தும் ஆற்றல் பெற்றவர்.இவர் ஆயுர்வேத மருத்துவத்தில் கைத்தேர்ந்தவர்.இவர் வாள் வீச்சில் சிறந்த வீரனாக திகழ்ந்தார்.இவர் மகாபாரத போரில் சகுனியின் மகனான உலூகனைக் கொன்றார்.மேலும் கர்ணனின் மகன்கள் மூவரை இவர் கொன்றார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்பு

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நகுலன்_(மகாபாரதம்)&oldid=3764736" இலிருந்து மீள்விக்கப்பட்டது