மலேசிய மக்கள் இயக்கக் கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி clean up, replaced: Infobox political party v2 → Infobox political party |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox political party |
{{Infobox political party |
||
|name_english = கெராக்கான்<br>மலேசிய மக்கள் இயக்கக் கட்சி<br>Malaysian People's Movement Party<br>Parti Gerakan Rakyat Malaysia |
|name_english = கெராக்கான்<br>மலேசிய மக்கள் இயக்கக் கட்சி<br>Malaysian People's Movement Party<br>Parti Gerakan Rakyat Malaysia |
||
|name_native = |
|name_native = |
||
வரிசை 41: | வரிசை 41: | ||
===தொழிற்சங்கப் பிரபலங்கள்=== |
===தொழிற்சங்கப் பிரபலங்கள்=== |
||
கெராக்கான் கட்சி தொடக்கப்பட்ட காலத்தில், அப்போது அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயக கட்சி ({{lang-en|United Democratic Party}}) உறுப்பினர்களின் ஆதரவையும், தொழிலாளர் கட்சியில் ஆங்கிலம் கற்றவர்களின் ஆதரவையும் மட்டுமே பெற்று இருந்தது. |

மலேசியாவைப் போன்ற பல்லினச் சமுதாயங்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஓர் அரசியல் கட்சி முறையாகச் செயல்பட வேண்டும் என்றால், அதற்கு தொழிற்சங்கவாதிகளின் ஆதரவு தேவை என்பதை கட்சியின் மேல்மட்டம் உணரத் தயங்கவில்லை. |
மலேசியாவைப் போன்ற பல்லினச் சமுதாயங்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஓர் அரசியல் கட்சி முறையாகச் செயல்பட வேண்டும் என்றால், அதற்கு தொழிற்சங்கவாதிகளின் ஆத��வு தேவை என்பதை கட்சியின் மேல்மட்டம் உணரத் தயங்கவில்லை. |
||
===[[வி. டேவிட்]]=== |
===[[வி. டேவிட்]]=== |
||
ஆகவே, அந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் மிகப் பிரபலமாக விளங்கிய தொழிற்சங்கவாதிகள் இருவர் சாதுர்யமாகக் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டனர். மலேசியத் தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவர் இயோ தெ சாய் என்பவரும், மலேசியப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் [[வி. டேவிட்]] அவர்கள் இருவருமே அந்த முக்கியப் பிரபலங்கள். |

1968 மே 25ஆம் தேதி, மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் தொடக்க விழா கோலாலம்பூர் மாநகரத்தில் நடைபெற்றது. [[பேராசிரியர்]] [[சையட் உசேன் அலத்தாஸ்]] கட்சியின் நோக்கங்களையும் கொள்கைகளையும் தொடக்க விழாவில் முன்வைத்தார். தேர்வு செய்யப்பட்ட தற்காலிகச் செயற்குழுவின் பதினாறு உறுப்பினர்களில் [[மலாய் மக்கள்|மலாய்க்காரர்கள்]] 6 பேர், [[சீனர்]]கள் 6 பேர், [[மலேசிய இந்தியர்|இந்தியர்கள்]] 4 பேர், இவர்களில் இரு பெண்களும் அடங்குவர். |

===1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்=== |
===1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்=== |
||
அதன் பின்னர் நாடு முழுமையும் 43 கிளைகள் திறக்கப்பட்டன. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 1,400ஆக உயர்ந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1969ஆம் ஆண்டு மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. குறைந்த மனித நிதி ஆதாரங்களைக் கொண்டு கெராக்கான் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும் நல்ல வெற்றியைப் பெற்றது. |

24 இடங்களைக் கொண்ட பினாங்கு மாநிலத்தில் 16 இடங்களில் வெற்றி வாகை சூடியது. [[சிலாங்கூர்]] மாநிலத்தில் நான்கு இடங்களையும், [[பேராக்]] மாநிலத்தில் இரண்டு இடங்களையும், [[கெடா]] மாநிலத்தில் இரண்டு இடங்களையும், [[மலாக்கா]], [[பகாங்]] மாநிலங்களில் தலா ஓர் இடத்தையும் பெற்றது. |

வரிசை 59: | வரிசை 59: | ||
===1969 மலேசிய இனக்கலவரம்=== |
===1969 மலேசிய இனக்கலவரம்=== |
||
தவிர மலேசிய நாடாளுமன்றத்தில் அதற்கு எட்டு இடங்களும் கிடைத்தன. இனச் சார்பு இல்லாமல் போட்டியிட்டாலும், மலேசியத் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்பதற்கு அந்தத் தேர்தல் முடிவு நல்ல ஒரு சான்றாக அமைந்தது. |

ஆனால், [[13 மே இனக்கலவரம்|1969 மலேசிய இனக் கலவரங்களுக்குப்]] பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய முடியாமல் போய்விட்டது. அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, அரசாங்க நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் ({{lang-en|National Operations Council}}) ஏற்று நடத்தியது. |

==[[பினாங்கு]] மாநிலத்தின் ஆட்சிசை இழந்தது== |
==[[பினாங்கு]] மாநிலத்தின் ஆட்சிசை இழந்தது== |
||
[[டான் ஸ்ரீ]] டாக்டர் [[கோ சு கூன்]] (''Koh Tsu Koon'') [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் |
[[டான் ஸ்ரீ]] டாக்டர் [[கோ சு கூன்]] (''Koh Tsu Koon'') [[மலேசியா]]வின் [[பினாங்கு]] மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் மலேசிய மக்கள் இயக்கக் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இப்போதைய பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் [[இராமசாமி பழனிச்சாமி]]யிடம் [[பத்து காவான்]] நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.<ref>{{Cite web | title = Malaysia Decides 2008 | publisher = த ஸ்டார் | date = | url = http://thestar.com.my/election/ | accessdate = 20 டிசம்பர் 2009}}</ref> 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய பொதுத் தேர்தலில் இவரின் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, பினாங்கு சட்டமன்றத்தில், [[பாக்காத்தான் ராக்யாட்]]டின் [[ஜனநாயக செயல் கட்சி]]யிடம் 19 இடங்களையும், [[மக்கள் நீதிக் கட்சி]]யிடம் 9 இடங்களையும், [[மலேசிய இஸ்லாமிய கட்சி]]யிடம் 1 இடத்தையும் பறிகொடுத்து இருபது ஆண்டு மலேசிய மக்கள் இயக்கக் கட்சி மற்றும் [[தேசிய முன்னணி (மலேசியா)]]யின் பினாங்கு ஆட்சியை இழந்தார்.<ref>{{cite web | url=http://thestar.com.my/election/results/05/05nopp.html | title= Penang State Assembly Election Result}}</ref>. |
||
==ஏ. கோகிலன் பிள்ளை== |
==ஏ. கோகிலன் பிள்ளை== |
05:19, 11 பெப்பிரவரி 2015 இல் நிலவும் திருத்தம்
கெராக்கான் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி Malaysian People's Movement Party Parti Gerakan Rakyat Malaysia | |
---|---|
தலைவர் | மா சியாவ் கியோங் |
தொடக்கம் | மார்ச் 24, 1968 |
தலைமையகம் | கோலாலம்பூர், மலேசியா |
கொள்கை | இனக்கொள்கை தாராண்மைவாதம் |
தேசியக் கூட்டணி | தேசிய முன்னணி (மலேசியா) |
பன்னாட்டு சார்பு | ஜனநாயக கூடமைப்பு, [1] |
வட்டார இணைப்பு | ஆசிய ஜனநாயக இனக்கொள்கை மன்றம் |
இணையதளம் | |
www.gerakan.org.my |
மலேசிய மக்கள் இயக்கக் கட்சி (மலாய்: Parti Gerakan Rakyat Malaysia, ஆங்கில மொழி: Malaysian People's Movement Party) என்பது மலேசியாவில் ஒரு தாராண்மைவாத அரசியல் கட்சியாகும். 24 மார்ச் 1968-இல் தோற்றுவிக்கப்பட்டது.[2] இப்போது ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாக இருக்கின்றது.
கெராக்கான் என சுருக்கமாக அழைக்கப்படும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு எதிரான கட்சியாக இருந்தது. 1969 மலேசியப் பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி, பினாங்கு மாநிலத்தில் பெரும்பான்மையான இடங்களை வென்றது. மலேசிய இஸ்லாமிய கட்சி கிளாந்தான் மாநிலத்தைக் கைப்பற்றியது.
அந்தக் காலக்கட்டத்தில் இவ்விரு கட்சிகளும் ஆளும் கூட்டணியுடன் கூட்டு சேரவில்லை. இருப்பினும், 1973இல் கெராக்கான் கட்சியும் ஆளும் கூட்டணியும் இணைந்து தேசிய முன்னணி எனும் புதிய கூட்டணியை உருவாக்கின.
வரலாறு
கெராக்கான் எனும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி 24 மார்ச் 1968இல் தோற்றுவிக்கப்பட்டது. மலேசியாவின் சில முக்கிய கல்வியாளர்களும், அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து அந்தக் கட்சியைத் தொடங்கினர். அவர்களின் விவரங்கள்:
- பேராசிரியர் சையட் உசேன் அலத்தாஸ், சிங்கப்பூர் பல்கலைக்கழகம்
- டாக்டர் டேவிட் தான் சீ கூன், சிலாங்கூர், பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
- டாக்டர் ஜே.பி.ஏ. பீட்டர், மலேசிய மருத்துவர் சங்கத்தின் தலைவர்
- டாக்டர் லிம் சோங் இயூ, பினாங்கு, தஞ்சோங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்
- பேராசிரியர் வாங் குங்பூ, மலாயா பல்கலைக்கழகம்
- வி, வீரப்பன், சட்டத் தொழிலாற்றுநர்; வழக்குரைஞர்
தொழிற்சங்கப் பிரபலங்கள்
கெராக்கான் கட்சி தொடக்கப்பட்ட காலத்தில், அப்போது அரசாங்கத்தினால் கலைக்கப்பட்ட ஐக்கிய ஜனநாயக கட்சி (ஆங்கில மொழி: United Democratic Party) உறுப்பினர்களின் ஆதரவையும், தொழிலாளர் கட்சியில் ஆங்கிலம் கற்றவர்களின் ஆதரவையும் மட்டுமே பெற்று இருந்தது.
மலேசியாவைப் போன்ற பல்லினச் சமுதாயங்களைக் கொண்ட ஒரு நாட்டில், ஓர் அரசியல் கட்சி முறையாகச் செயல்பட வேண்டும் என்றால், அதற்கு தொழிற்சங்கவாதிகளின் ஆதரவு தேவை என்பதை கட்சியின் மேல்மட்டம் உணரத் தயங்கவில்லை.
ஆகவே, அந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் மிகப் பிரபலமாக விளங்கிய தொழிற்சங்கவாதிகள் இருவர் சாதுர்யமாகக் கட்சிக்குள் ஈர்க்கப்பட்டனர். மலேசியத் தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவர் இயோ தெ சாய் என்பவரும், மலேசியப் போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. டேவிட் அவர்கள் இருவருமே அந்த முக்கியப் பிரபலங்கள்.
1968 மே 25ஆம் தேதி, மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் தொடக்க விழா கோலாலம்பூர் மாநகரத்தில் நடைபெற்றது. பேராசிரியர் சையட் உசேன் அலத்தாஸ் கட்சியின் நோக்கங்களையும் கொள்கைகளையும் தொடக்க விழாவில் முன்வைத்தார். தேர்வு செய்யப்பட்ட தற்காலிகச் செயற்குழுவின் பதினாறு உறுப்பினர்களில் மலாய்க்காரர்கள் 6 பேர், சீனர்கள் 6 பேர், இந்தியர்கள் 4 பேர், இவர்களில் இரு பெண்களும் அடங்குவர்.
1969ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
அதன் பின்னர் நாடு முழுமையும் 43 கிளைகள் திறக்கப்பட்டன. உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 1,400ஆக உயர்ந்தது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, 1969ஆம் ஆண்டு மூன்றாவது பொதுத் தேர்தல் நடைபெற்றது. குறைந்த மனித நிதி ஆதாரங்களைக் கொண்டு கெராக்கான் கட்சி தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும் நல்ல வெற்றியைப் பெற்றது.
24 இடங்களைக் கொண்ட பினாங்கு மாநிலத்தில் 16 இடங்களில் வெற்றி வாகை சூடியது. சிலாங்கூர் மாநிலத்தில் நான்கு இடங்களையும், பேராக் மாநிலத்தில் இரண்டு இடங்களையும், கெடா மாநிலத்தில் இரண்டு இடங்களையும், மலாக்கா, பகாங் மாநிலங்களில் தலா ஓர் இடத்தையும் பெற்றது.
1969 மலேசிய இனக்கலவரம்
தவிர மலேசிய நாடாளுமன்றத்தில் அதற்கு எட்டு இடங்களும் கிடைத்தன. இனச் சார்பு இல்லாமல் போட்டியிட்டாலும், மலேசியத் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என்பதற்கு அந்தத் தேர்தல் முடிவு நல்ல ஒரு சான்றாக அமைந்தது.
ஆனால், 1969 மலேசிய இனக் கலவரங்களுக்குப் பின்னர், தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களுக்குச் சேவை செய்ய முடியாமல் போய்விட்டது. அந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, அரசாங்க நிர்வாகத்தை தேசிய நடவடிக்கை மன்றம் (ஆங்கில மொழி: National Operations Council) ஏற்று நடத்தியது.
பினாங்கு மாநிலத்தின் ஆட்சிசை இழந்தது
டான் ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் (Koh Tsu Koon) மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் மற்றும் மலேசிய மக்கள் இயக்கக் கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இப்போதைய பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமியிடம் பத்து காவான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[3] 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசிய பொதுத் தேர்தலில் இவரின் மலேசிய மக்கள் இயக்கக் கட்சி, பினாங்கு சட்டமன்றத்தில், பாக்காத்தான் ராக்யாட்டின் ஜனநாயக செயல் கட்சியிடம் 19 இடங்களையும், மக்கள் நீதிக் கட்சியிடம் 9 இடங்களையும், மலேசிய இஸ்லாமிய கட்சியிடம் 1 இடத்தையும் பறிகொடுத்து இருபது ஆண்டு மலேசிய மக்கள் இயக்கக் கட்சி மற்றும் தேசிய முன்னணி (மலேசியா)யின் பினாங்கு ஆட்சியை இழந்தார்.[4].
ஏ. கோகிலன் பிள்ளை
இக்கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ஏ. கோகிலன் பிள்ளை[5] 2008ஆம் ஆண்டு, மலேசிய நாடாளுமன்றத்தின் மேலவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அவர் மலேசிய வெளியுறவு துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2013 மலேசிய பொதுத் தேர்தலில், பூச்சோங் நகரின் நாடாளுமன்ற தொகுதியில் ஜனநாயக செயல் கட்சியின் கோவிந்த் சிங் தியோ உடண் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
தலைவர்கள்
தலைவர்
எண���. | பெயர் | பதவி காலம் தொடக்கம் | பதவி காலம் முடிவு |
---|---|---|---|
1 | சையட் உசேன் அலத்தாஸ் | 1968 | 1969 |
2 | துன் லிம் சோங் இயூ | 1969 | 1980 |
3 | துன் லிம் கெங் இயெக் | 1980 | 2007 |
4 | டான் ஸ்ரீ டாக்டர் கோ சு கூன் | 2008 | 2013 |
5 | மா சியாவ் கியோங் | 2013 | இன்று வரை |
மேற்கோள்கள்
- ↑ Gerakan Rakyat Malaysia Party உறுதி செய்யப்பட்டது 05 April 2013.
- ↑ Parti Gerakan Rakyat Malaysia was formed on 24th March 1968. The six founders of the party were Professor Syed Hussain Alatas...
- ↑ "Malaysia Decides 2008". த ஸ்டார். பார்க்கப்பட்ட நாள் 20 டிசம்பர் 2009.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Penang State Assembly Election Result".
- ↑ Selangor Gerakan liaison chairman and Deputy Foreign Minister Senator A. Kohilan Pillay said the multi-racial party had decided to select more Indian candidates in recognition of their contributions.