விக்கிசெய்தி:ஆலமரத்தடி
விக்கிசெய்தி, விக்கிசெய்திகள் எது சரி?
[தொகு]wikinews = விக்கிசெய்திகள் என்பதே பொருத்தமாயிருக்கும் விக்கிசெய்தி என்பது சரியல்ல என்பது என் கருத்து. மாஹிர் 08:51, 9 ஏப்ரல் 2010 (UTC)
வணக்கம் அன்பர்களே, எனது பெயர் ச.உதயன். யாமும் உங்களோடு இணைகிறேன்.தேவைப்படின் உதவுவீர்கள் என நம்புகிறேன்.--−முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து ச.உதயன் (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனரால் பதியப்பட்டது. .
- வணக்கம் உதயன், உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறேன். உங்கள் நாட்டில் உள்ளூர்ச் செய்திகளை தமிழில் மொழிபெயர்த்துத் தாருங்கள். உதவி தேவைப்படின் தயங்காது கேளுங்கள்.--Kanags \பேச்சு 10:46, 15 ஜூலை 2010 (UTC)
வலைவாசல் உருவாக்கப்பட்டுள்ளது
[தொகு]கனகு, வலைவாசல் பெயர்வெளி உருவாக்கப்பட்டுள்ளது. bugzilla. இதேபோல் Wikinews பெயர்வெளியையும் தமிழில் விக்கிசெய்திகள் என்று மாற்றம் செய்ய கேட்கலாமா? -- மாஹிர் 00:04, 1 செப்டெம்பர் 2010 (UTC)
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒன்றை செய்திருக்கிறீர்கள். நன்றி. இதே போல் விக்கிசெய்தி என்பதையும் மாற்றக் கேட்கலாம். வேறும் சில செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். நினைவில் இல்லை.--Kanags \பேச்சு 10:32, 1 செப்டெம்பர் 2010 (UTC)
செய்தியை இடுகை செய்வது எப்படி?
[தொகு]2010 செப்டம்பர் 16ஆம் நாள் போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட் ஐக்கிய இராச்சியம் செல்லவிருக்கிறார். - போப் பயணம். அது குறித்து ஒரு செய்தி எழுதலாம் என நினைக்கிறேன். எப்படி எழுதுவது என்று சொல்வீர்களா? நன்றி.--பவுல்-Paul 02:46, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- வணக்கம் பவுல், போப் பயணம் குறித்து அவசியம் ஒரு செய்தி எழுதுங்கள். சுருக்கமான (பொருத்தமான) தலைப்பு ஒன்றைத் தேர்ந்தெடுத்து விக்கியில் கட்டுரை எழுதுவது போல் செய்தியாக எழுதுங்கள். மேற்கோளுக்கு செய்திக்குக் கீழே இணைப்புக் கொடுங்கள். போப் பயணம் மேற்கொள்ளுவது பற்றி முன்கூட்டியே ஒரு செய்தி எழுதலாம். பின்னர் அவரது பயணம் மேற்கொள்ளப்பட்டவுடன் அவ்வப்போது பயணம் தொடர்பான செய்திகளை அவ்வப்போது எழுதுங்கள். முதல் செய்தியை எழுதி சேமியுங்கள். நான் திருத்தித் தருகிறேன். நன்றி.--Kanags \பேச்சு 02:55, 4 செப்டெம்பர் 2010 (UTC)
- முதல் கட்ட இடுகை செய்துள்ளேன். சரி பார்க்கவும். தொடர்ந்து பங்களிக்க முனைகிறேன்.--பவுல்-Paul 04:23, 4 செப்டெம்பர் 2010 (UTC)
த.விக்சனரியில் சொற்பதிவேற்றம்
[தொகு]கோவைத் தமிழ்மாநாட்டில் தமிழக அரசு அளித்தக் கொடைச்சொற்களில், நம்மிடமில்லாச்சொற்களை கீழ்கண்ட தொடுப்பில் உள்ளவாறு தானியங்கி முறையில் பதிவேற்ற உள்ளோம். ஏறத்தாழ ஒரு இலட்சம் சொற்கள் பதிவேற உள்ளன. இதன்மூலம் தமிழ்விக்சனரி 17வது இடத்திலிருந்து, முதல் 10இடங்களுக்குள் சென்றடையும். தங்களின் கருத்துகளை அங்கு வாக்களித்து, மேல காணப்படும் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். விக்சனரி:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம் இதுவரை 14நபர்கள் வாக்களித்துள்ளனர். நீங்களும் வருக! வணக்கம்.--த*உழவன் 17:45, 13 அக்டோபர் 2010 (UTC)
RSS செய்தி ஊட்டுக்கள்
[தொகு]http://feeds.feedburner.com/LatestTamilWikinews எனும் தளத்தினூடான செய்தி ஊட்டுக்கள் இற்றைப்படுத்தப்படாமல் உள்ளது, ஒவ்வொருநாள் செய்திகளும் உடனுக்குடன் rss அல்லது atom ஊட்டுக்கள் மூலம் பார்ப்பதற்கு ஏதேனும் வழி உண்டா?--Drsrisenthil 19:36, 13 டிசம்பர் 2010 (UTC)
- வணக்கம் செந்தி, கடந்த 10 நாட்களாக இற்றைப்படுத்தப்படவில்லை போலிருக்கிறது. எனக்கு இதில் ஆழ்ந்த அறிவு இல்லை. வேறு யாராவது இந்த சேவை வழங்குகிறார்களா என அறிய வேண்டும். மாஹிருக்குத் தெரிந்திருக்கலாம்.--Kanags \பேச்சு 20:11, 13 டிசம்பர் 2010 (UTC)
- இதே சந்தேகம் எனக்கும் உள்ளது ஆங்கில wikinews http://en.wikinews.org/w/index.php?title=Special:NewsFeed&feed=atom&categories=Published¬categories=No publish|Archived|AutoArchived|disputed&namespace=0&count=30&hourcount=124&ordermethod=categoryadd&stablepages=only என்னும் தொடுப்பில் உள்ளது, இதை போன்று தமிழில் உள்ள விக்கிசெய்திகளுக்கும் இணைப்பு உள்ளதா? http://feeds.feedburner.com/LatestTamilWikinews ல் தலைப்பு மட்டுமே குறிப்பிடப் பட்டு உள்ளது. என்னைப் போன்ற rss பிரியர்களுக்கு உள்ளடக்கமும் கொடுத்தால் உதவுமே! -Pitchaimuthu2050 (பேச்சு) 06:53, 8 மார்ச் 2012 (UTC)
- பிச்சைமுத்து, முதற்பக்கத்தில் இதன் மூலத் தொடுப்பைத் தந்திருக்கிறேன். நன்றி.--Kanags \பேச்சு 11:21, 8 மார்ச் 2012 (UTC)
- http://toolserver.org/~bawolff/rss.php?title=Tamil+Wikinews&domain=ta.wikinews.org&cat=Published&lim=10&ns=0 இந்தத் தொடுப்பும் தலைப்பை மட்டுமே rss'ஆகக் கொடுக்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட செய்தியின் உள்ளடக்கம் rss'யில் வரவில்லையே? ஆங்கிலத் தொடுப்பை நோக்கினால் தங்களால் என் என்களை தெரிந்து கொள்ள முடியும் என எண்ணுகிறேன். http://en.wikinews.org/w/index.php?title=Special:NewsFeed&feed=atom&categories=Published¬categories=No publish|Archived|AutoArchived|disputed&namespace=0&count=30&hourcount=124&ordermethod=categoryadd&stablepages=only.
- ஆங்கிலத்தில் செய்தியோடை தெரியவில்லை. அங்கு ஏதோ தவறுள்ளது போல் தெரிகிறது. செய்தியோடையில் செய்தி உள்ளடக்கத்தை எவ்வாறு உள்ளடக்குவது என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.--Kanags \பேச்சு 09:54, 9 மார்ச் 2012 (UTC)
- இதனை அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றிகள், http://ta.wikinews.org/w/index.php?title=Special:NewPages&feed=atom என்னும் தொடுப்பு செய்தி உள்ளடக்கத்தை கொண்டு வருகிறது. ஆனால் ஏதோ ஒரு தவற்றின் காரணமாக விக்கி நிரல் மூலமாக தெரிகிறது. ஆனால் ஆங்கில விக்கியில் விக்கி நிரலாக அல்லாமல் நேரடியாகவே தெரிகிறது. http://en.wikinews.org/w/index.php?title=Special:NewsFeed&feed=atom&categories=Published¬categories=No publish|Archived|AutoArchived|disputed&namespace=0&count=30&hourcount=124&ordermethod=categoryadd&stablepages=only. நாம் முயற்சி செய்தால் அதனையும் செய்து விடலாம் என்பதில் ஐயம் இல்லை. அன்புடன், -Pitchaimuthu2050 (பேச்சு) 13:23, 9 மார்ச் 2012 (UTC)
- ஆங்கிலத்தில் செய்தியோடை தெரியவில்லை. அங்கு ஏதோ தவறுள்ளது போல் தெரிகிறது. செய்தியோடையில் செய்தி உள்ளடக்கத்தை எவ்வாறு உள்ளடக்குவது என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.--Kanags \பேச்சு 09:54, 9 மார்ச் 2012 (UTC)
Natkeeran
[தொகு]எனது பயனர் கடவுச்சொல்லை மறந்து விட்டேன். மின்னஞ்சல் சமர்ப்பித்து இருக்கவில்லை. எப்படி இங்கு மீட்க முடியும் ? - Natkeeran
- நற்கீரன், இதனைப் பாருங்கள். இதன்படி வேறு புதிய பெயரில் தான் உட்புக வேண்டும் போல் இருக்கிறது:(.--Kanags \பேச்சு 06:44, 5 மார்ச் 2011 (UTC)
விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டல்
[தொகு]விக்கி ஊடகப் போட்டி கருத்து வேண்டலில் பங்கேற்க வேண்டுகிறேன்--Sodabottle 18:27, 29 செப்டம்பர் 2011 (UTC)
தீபாவளி வாழ்த்துக்கள்
[தொகு]தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
தமிழ் விக்கி செய்திகள் அன்பர்கள் அனைவருக்கும், தமிழ் விக்கி நூல்கள் சார்பாக தீபத்திருநாளாம் தீபாவளி வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்
குறிப்பு: உங்கள் வாழ்த்துக்களை விக்கி நூல்கள் சமுதாயத்துடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தெரிவிக்க இங்கு>> சொடுக்கவும்.
--Pitchaimuthu2050 05:27, 22 அக்டோபர் 2011 (UTC)
ஊடகப் போட்டி துவக்கம்
[தொகு]தமிழ் விக்கி ஊடகப் போட்டி, இன்று (நவம்பர் 15) முதல் துவங்குகிறது. போட்டிக்கான வலைவாசல் - w:வலைவாசல்:ஊடகப் போட்டி. அனைவரும் பங்கு கொண்டு தங்கள் ஆக்கிய ஊடகக் கோப்புகளைப் பதிவேற்றும்படி வேண்டுகிறேன். மேலும் தங்கள் நண்பர்கள், குடும்பத்தினாரிடம் இது பற்றிக் கூறி பரப்புரை உதவி புரியவும் வேண்டுகிறேன். உங்களுடைய ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பதிவுகள் போன்றவற்றில் இது குறித்து செய்தி இட்டு உதவுங்கள். வலைப்பதிவில் இடவும் மின்னஞ்சலில் அனுப்பவும், அச்செடுத்து விநியோகிக்கவும் ஏற்ற ஒரு துண்டறிக்கை இங்கு - w:படிமம்:OnePageContestGuideUpdated.jpg - உள்ளது. இதனை பயன்படுத்தி பரப்புரை செய்ய வேண்டுகிறேன்.
போட்டிக்கான ஃபேஸ்புக் தளம் - இதனைப் உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொள்ள -
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
[தொகு]இன்று மலர்ந்துள்ள 2012 ஆம் ஆண்டு அனைவருக்கும் சௌபாக்கியமிக்க ஆண்டாக அமையட்டும். அனைத்து விக்கி அன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் -puniyameen
தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்
[தொகு]தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:
- அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
- வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
- வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
- வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.
மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி
தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.
மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)
--Natkeeran 19:44, 1 சனவரி 2012 (UTC)
இன்னும் 24 மணி நேரத்திற்கு
[தொகு]இணையத் திருட்டு நிறுத்தல் சட்டமூலத்துக்கு எதிராக ஆங்கில விக்கிப்பீடியாவின் குரலுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக இன்னும் 24 மணி நேரத்திற்கு நான் விக்கிப்பீடியாவில் எழுதமாட்டேன். P.M.Puniyameeen (10.40 மணி) 18.01.2012
- தமிழ்விக்கிப்பீடியாவில் 24 மணித்தியாலங்கள் எழுதமாட்டேன் என்ற எனது தனிப்பட்ட முடிவை 19ம் திகதி காலை 10.45 மணிவுடன் முடித்துக் கொள்கின்றேன். நான் எழுதமாட்டேன் என்று என்னால் மேற்கொள்ளப்பட்ட முடிவால் தமிழ்விக்கிப்பீடியாவிலோ அல்லது ஆங்கில விக்கிப்பீடியா போராட்டத்திலோ எந்தவித தாக்கமும் ஏற்பட்ட மாட்டாது. இதுபோன்ற தனி முடிவால் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. இருப்பினும் ஆங்கில விக்கிப்பீடியாவின் நியாயமான போராட்டத்தை நான் ஆதரிக்கின்றேன். அவர்களின் நியாயத்துடன் முழுமையாக இணைகின்றேன். இந்நிலையில் அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை. 24 மணித்தியாலங்கள் எழுதமாட்டேன் என்ற எனது முடிவு ஒரு சிறுபிள்ளைத்தனமான முடிவாக இருந்தாலும்கூட என் உணர்வின் வெளிப்பாடே அது.
- இணையத்தளங்களை தணிக்கை செய்யும் அமெரிக்க காங்கிரஸ் சபையின் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகில் அதிகம் பேர் பார்வையிடும் விக்கிபீடியா இணையதளம் நேற்று காலை 10.30 முதல் 24 மணிநேரத்திற்கு தனது சேவையை நிறுத்திக்கொண்டது. இதனால் ஆங்கில விக்கிப்பீடியாவை பார்வையிடும் பலர் பாதிப்புக்குட்பட்டிருக்கலாம். அவர்களின் இத்தகைய போராட்டம் நியாயமானது. அதேநேரம், உலகளாவிய ரீதியில் செயல்படக்கூடிய 283 விக்கிப்பீடியாக்களும் இத்தகைய நடவடிக்கையில் ஒரே நேரத்தில் ஈடுபட்டிருந்தால் முழு உலகத்தினதும் எதிர்ப்புக் குரலாக அமைந்திருக்கும். P.M.Puniyameeen (10.40 மணி) 19.01.2012
பாராட்டுகள்
[தொகு]தமிழ் விக்கிசெய்தி மிகச் சிறப்பாக வளர்ந்து வருகிறது. தமிழில் மட்டும் அல்ல, வேறு எந்த மொழியிலும் கூட படித்து அறிந்து கொள்ளாத செய்திகளை இங்கு கண்டு பயனுறுகிறேன். இதற்காக உழைக்கும் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். --Ravidreams 00:04, 11 பெப்ரவரி 2012 (UTC)
தள அறிவிப்பு வேண்டுகோள்
[தொகு]தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதல் பங்களிப்பாளர்களை ஈர்க்கும் முகமாக, விக்கிசெய்தியின் தள அறிவிப்பில் விக்கிப்பீடியா:தள அறிவிப்பு/பங்களிப்பாளர் அறிமுகங்கள் இட்டு உதவ வேண்டுகிறேன். அவ்வப்போதோ சில நாட்களுக்கு ஒரு முறையோ இதனைச் செய்து தந்தால் நன்றாக இருக்கும். நன்றி--Ravidreams 00:04, 11 பெப்ரவரி 2012 (UTC)
- செய்யலாம் இரவி, ஊடகப் போட்டி முடிவடைந்தவுடன் சேர்க்கிறேன்.--Kanags \பேச்சு 00:27, 11 பெப்ரவரி 2012 (UTC)
நன்றி, சிறீதரன்--Ravidreams 17:19, 11 பெப்ரவரி 2012 (UTC)
MediaWiki 1.19
[தொகு](Apologies if this message isn't in your language.) The Wikimedia Foundation is planning to upgrade MediaWiki (the software powering this wiki) to its latest version this month. You can help to test it before it is enabled, to avoid disruption and breakage. More information is available in the full announcement. Thank you for your understanding.
Guillaume Paumier, via the Global message delivery system (wrong page? You can fix it.).- தமிழ் விக்கிப்பீடியாவில் வந்த அறிவிப்பின் நகல் ---செல்வா 05:45, 13 பெப்ரவரி 2012 (UTC)
- (இச்செய்தி உங்கள் மொழியில் இல்லாதிருந்தால் பொறுத்தருள்க.) விக்கிமீடியா நிறுவனம் இம்மாதத்தில் மீடியாவிக்கியை (இந்த விக்கியை இயக்கும் மென்கலம்) மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதனை முடுக்கிவிடும் முன்னர், தடைகள், இடையூறுகள் ஏதும் வருவதைத் தவிர்க்கும் முகமாக, நீங்கள் இதனைச் சோதித்துப் பார்க்க உதவலாம். கூடுதலான தகவல்கள் கிடைக்கின்றன: முழு அறிவிப்பு. உங்கள் புரிந்துணர்வுக்கு நன்றி. மேலே (Guillaume Paumier விடுத்த செய்தியின் மொழிபெயர்ப்பு). - --செல்வா 05:45, 13 பெப்ரவரி 2012 (UTC)
- முழு அறிவிப்பு உள்ள இப்பக்கம் இப்பொழுது தமிழில் கிடைக்கின்றது இங்கே பார்க்கவும் --செல்வா 04:49, 13 பெப்ரவரி 2012 (UTC) (இந்திய மொழிகளில் முதலாவதாகவும், இடாய்ச்சு, எசுப்பானியம் ஆகிய மொழிகளில் வரும் முன்னரும் தமிழில் இவ் அறிவிப்பு உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றேன்).
--செல்வா 05:45, 13 பெப்ரவரி 2012 (UTC)
வாழ்த்துகள்
[தொகு]விக்கியூடகத்திட்டங்களில் தமிழ்ப்பணி ஆற்றிவரும் அனைத்து தோழர்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்.--Thamizhpparithi Maari (பேச்சு) 11:03, 14 ஜனவரி 2014 (UTC)
- அனைவருக்கும் எனது இனிய பொங்கல், புத்தாண்டு நல்வாழ்த்துகள்.--Kanags \பேச்சு 19:56, 14 ஜனவரி 2014 (UTC)
w:விக்கிப்பீடியா:உதவித்தொகை என்பதில் கலந்து கொள்க
[தொகு]இந்திய விக்கிமீடியாவின் நிதிஉதவியால், மடிக்கணினிப் பெற, தமிழ்விக்கிசமூகத்தின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, w:விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer (தகவலுழவன்) என்ற திட்டப்பக்கத்தில், விண்ணப்பித்துள்ளேன். இதுபற்றி ஏற்கனவே, தமிழ் விக்கிப்பீடியாவின் மேனிலைப் பங்களிப்பாளர்(Bureaucrats)களுக்கும், சிறப்புநிலைப் பங்களிப்பாளர்(system operator) களுக்கும், அவரவர் உரையாடற்பக்கத்தில், தனித்தனியே செய்தி விடுத்துள்ளேன். பிற பங்களிப்பாளரகளும், அத்திட்டபக்கத்தில் தங்களின் நிலைப்பாட்டைக் கூற அழைக்கிறேன். மேலும், பிற தமிழ்விக்கிமீடியாத் திட்டங்களின் ஆலமரத்தடியிலும், செய்தி விடுத்துள்ளேன். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 05:02, 8 ஜூலை 2015 (UTC)
இந்திய விரித்திசையன் வரைகலைப் பரப்புரை 2019
[தொகு]இந்திய அளவில் நடந்த முதல் w:ta:விரித்திசையன் வரைகலை மேலதிக பயற்சியில் கலந்து கொண்ட ஒரே தமிழ் பங்களிப்பாளர் என்ற முறையில், விக்கிநூலில் அடிநிலை குறிப்புகளையும், வழிகாட்டுதல்களையும் நிழற், நிகழ்படங்களாகத் தொகுத்துள்ளேன். அவற்றின் துணைக் கொண்டு, இந்த பரப்புரையில் யாவரும் எளிதாக கலந்து கொள்ளலாம். ஏதேனும் ஐயங்கள் இருப்பின், எனது பேச்சுப்பக்கத்தில் தொடர்பு கொள்ளவும். மேலும், பயனுள்ள சில குறிப்புகள் வருமாறு;-
- ஒரு விவரப்படம், ஒரு குறுங்கட்டுரை போன்றது. பல படங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு, தமிழ் மொழிக்குத் தேவையெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதனை மொழிபெயர்ப்பு மட்டுமே தமிழில் நாம் செய்ய வேண்டும்.
- 2019 வருடம், பிப்ரவரி 21 முதல் மார்ச்சு மாதம் இறுதிவரை இந்த விழிப்புணர்வு பரப்புரை நடைபெற உள்ளது. இதற்கான திட்டப்பக்கம்
- ஓர் அறிமுக 'யூடியூப்' நிகழ்படம். மேலும் சில அடிப்படை நிகழ்படங்களை திட்டப்பக்கத்தில் காணலாம். விக்கிநூலில் தமிழ் நிகழ்படங்களைக் காணலாம்.
- கூகுள் குரோம் இயக்குதளக்கணினியில் அடிப்படை மென்பொருட்களை கட்டமைக்க இயலாத சூழ்நிலை உள்ளது என்ற குறிப்புரையைத் தருகிறேன். பிற இயக்குதளங்களில் எளிதே.
அனைவரும் கலந்து கொள்ள அழைக்கின்றேன். தொடர்வோம். வணக்கம்.--தகவலுழவன் (பேச்சு) 02:55, 21 பெப்ரவரி 2019 (UTC)
விக்சனரி வாக்கெடுப்பில் கலந்து கொள்க
[தொகு]wikt:விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#அதிகாரி தரத்துக்கான வேண்டுகோள் (Request for bureaucratship) வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, தங்களது மேலான கருத்துக்களை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இதனால் எனக்கு புதிய உயரணுக்க பயனர்களையும்(sysop), தானியங்கி அணுக்கல்களையும் வழங்க இயலும். இருப்பினும், அனைத்து மாற்றங்களையும், அனைத்துத் தமிழ் விக்���ிமீடியத்திட்டங்களில் அறிவித்து, உடன் பங்களிக்கும் அன்பர்களின் கருத்தினை உள்வாங்கியே, ஒவ்வொரு முறையும் செயற்படுவேன் என உறுதி கூறுகிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 05:07, 2 மே 2019 (UTC)
விக்சனரியில் வாக்கெடுப்பு
[தொகு]நீச்சல்காரனின் தொழினுட்ப உதவியும், சொல் குறித்த அவரது படைப்புத்திறன் நுட்பமும், விக்சனரியின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகிறது. எனவே, wikt:விக்சனரி:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்#நீச்சல்காரன் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அழைக்கிறேன்.--தகவலுழவன் (பேச்சு) 15:31, 26 சூலை 2019 (UTC)
ஏழு நாள் விக்கி இணையவழிப் பயிற்சி
[தொகு]முழுமையான ஒரு விக்கித்திட்டங்கள் குறித்த ஒரு பயிற்சி அளிக்க வேண்டும் என்ற நமது வெகுநாள் கனவான இப்போது நனவாகவுள்ளது. வருகிற ஆகஸ்ட் 17 முதல் 23 வரை ஏழு நாள் விக்கித் திட்டங்கள் குறித்த முழுமையான ஒரு இணையவழிப் பயிற்சியினை ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியுடன் இணைந்து கணித்தமிழ்ப் பேரவை வழியாக நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நிகழ்ச்சி நிரல்
- முதல் நாள் - விக்கிமூலம் அறிமுகம் - பார்வதி ஸ்ரீ
- இரண்டாம் நாள் - விக்கிப்பீடியா அறிமுகம் - ஹிபயதுல்லா
- மூன்றாம் நாள் - விக்கிப்பீடியா இடைமுகம் - ஞா.ஸ்ரீதர்
- நான்காம் நாள் - விக்கிப்பீடியா பன்முகம் - மகாலிங்கம்
- ஐந்தாம் நாள் - பொதுவகம் & விக்சனரி - தகவலுழவன்
- ஆறாம் நாள் - விக்கித்தரவு - பாலாஜி
- ஏழாம் நாள் - விக்கித் தொழில்நுட்பம் - நீச்சல்காரன்
தினமும் மாலை 6-7 வரை கூகிள் மீட் வழியாக நடைபெறும். இதன் ஒளிப்பதிவு படைப்பாக்கப் பொதுமத்தில் யூட்யூப்பில் வெளியிடப்படும். அனைவரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கான படிவம். இது முதல் முயற்சியாகையால் நமக்கும் இது அனுபவமாக இருக்கும். இதர ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் கொடுத்துதவலாம். --தகவலுழவன் (பேச்சு) 03:30, 16 ஆகத்து 2020 (UTC)
விக்கிமூலம் திட்டத்திற்குரிய எட்டு நாட்கள் இணையவழிப் பயிலரங்கு
[தொகு]வணக்கம். 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம்(10) தேதி முதல் பதினேழு (17) தேதி வரை. நேரம்: மாலை 3 முதல் 4 வரை, ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் ஜெயின் மகளிர் கல்லூரியினர் இணையவழியே, விக்கிமூலத்திற்கான பயிற்சிகளை மட்டும் எடுத்துக் கொள்ள உள்ளனர். இந்நாட்களில் பங்கு கொள்ள அனைவரையும் அழைக்கிறோம். இது குறித்த மேலதிகச் செய்திகளை, s:விக்கிமூலம்:இணையவழிப் பயிலரங்கு-1 என்ற திட்டப்பக்கத்தில் அறியலாம்.--தகவலுழவன் (பேச்சு) 09:40, 2 அக்டோபர் 2020 (UTC)
தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி
[தொகு]ஒரு மாதம் "தமிழ் விக்கித்திட்டங்களில் உள்ளகப் பயிற்சி" (Tamil Wiki Internship Programme) என்ற புதிய திட்டத்தை மதுரை w::பாத்திமா கல்லூரி தமிழ்த் துறை மாணவர் கொண்டு நடத்தலாம் எனப் பரிந்துரைக்கிறேன். கல்லூரி சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். மேலும் கருத்துக்களை ஆலமரத்தடியில் காணலாம். மேலும் இதனை வழிநடத்த உங்கள் பங்களிப்பையும், ஆலோசனைகளையும் திட்டப்பக்கத்தில் விவாதிக்க வேண்டுகிறேன். -Neechalkaran (பேச்சு) 05:37, 15 அக்டோபர் 2020 (UTC)
ஆங்கில விக்கிமூலத்தில் முதற்கூட்டுப்பங்களிப்பு
[தொகு]en:Index:Tamil_proverbs.pdf என்ற நூல் 1874 ஆம் ஆண்டு உருவானது. இந்நூலில் உள்ள ஒவ்வொரு தமிழ் பழமொழியும், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் ஆங்கில விளக்கவரையும் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் மொத்தம் 6156 தமிழ் பழமொழிகள் உள்ளன. ஒரே தமிழ் சொல்லானது, வெவ்வேறு இடங்களில், அந்த பழமொழியின் பொருண்மைக்கு ஏற்ப, வெவ்வேறு ஆங்கிலச்சொற்களைக் கொண்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். ஆங்கில விக்கிமூலத்தில் கூட்டுழைப்பாக, சிறந்த விக்கிநுட்பங்களோடு வெள்ளோட்ட முயற்சியாக, இந்த150 ஆண்டு பழமையான படவடிவ நூலானாது(PDF), பனுவல் வடிவமாக மாற்ற எடுத்துக் கொள்ளப்பட்டது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 முதல் இதில் 40 பங்களிப்பாளர்கள் ஈடுபட்டு, நவம்பர்4 அன்று இந்நூலின் எழுத்துவடிவ பணியை முடித்தனர். en:Tamil_Proverbs என்ற முழுமையான பனுவல் வடிவத்தினைப் பார்வையிடுக. எளிமையாக பதிவிறக்க இங்குள்ள download என்பதை அழுத்தி, தேவைப்படும் வடிவங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த இணைப்பில் 10 க்கும் மேற்பட்ட வடிவங்களிலும், பதிவிறக்கிக் கொள்ளலாம். இத்தகைய கூட்டுப்பணி எளிமையாக உருவாவதற்கான முக்கிய காரணம், அவர்களின் வழிகாட்டுதல் பக்கமாகும். அது தமிழில் சிறப்புற உருவாக்கப்படவில்லை. எனவே, en:Help:Beginner's guide to proofreading ஆங்கில விக்கிமூலப் பக்கத்தினைக்கொண்டு தொடங்கலாம் என்���ு எண்ணுகிறேன். இப்பக்கமானது பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. அனைவருக்கும் இது அடிப்படையான பக்கமென்பதால், s:உதவி:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி என்ற பக்கத்தினை கூட்டாக வளர்த்தெடுப்போம். தங்களது எண்ணங்களை, s:உதவி பேச்சு:புதிதாக தொடங்குபவர்களுக்கான மெய்ப்பு வழிகாட்டி என்ற உரையாடற்பக்கத்தில் தெரியப்படுத்துங்கள்.--தகவலுழவன் (பேச்சு) 10:15, 7 நவம்பர் 2021 (UTC)
- திட்டப்பணிகளை மூடுவதற்கான முன்மொழிவுகள்/தமிழ் விக்கிசெய்திகளின் மூடல் 2
A discussion on Meta-wiki has started proposing to close this Wikinews, if you have input on whether you support or oppose it, please participate in this Meta discussion page, thank you.
- மெட்டா-விக்கியில் ஒரு விவாதம் இந்த விக்கிசெய்தியை மூடுவதற்கு முன்மொழியத் தொடங்கியுள்ளது, நீங்கள் இதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பது குறித்து உங்களுக்கு உள்ளீடு இருந்தால், தயவுசெய்து இந்த மெட்டா விவாதப் பக்கத்தில் பங்கேற்கவும், நன்றி.
--ꠢꠣꠍꠘ ꠞꠣꠎꠣ (பேச்சு) 06:03, 14 திசம்பர் 2023 (UTC)
Update of license
[தொகு]Some time ago there was a discussion on meta about how to implement the license update to CC BY-SA 4.0 on all wikis. See m:Meta:Babel/Archives/2023-06#Aftermath_of_ToU_updates.
Wikinews use the license CC BY 2.5. So it does not have the SA part and it is an older version.
I would like to ask why Wikinews does not follow WMF and most other wiki projects. Is there a good reason or is it simply because noone thought about updating the license?
Unless there is a good reason I suggest to update the license to follow WMF.
There is a formal vote on English WN to change to the new license at en:Wikinews:Water_cooler/policy#Update_of_license.
I hope you would use that opportunity to update license here too (unless you decide to close the project as mentioned above). --MGA73 (பேச்சு) 13:44, 15 திசம்பர் 2023 (UTC)
Update of license to cc-by-4.0
[தொகு]Hello!
English Wikinews have discussed a change of license and would like to update from cc-by-2.5 to cc-by-4.0 per en:Wikinews:Water_cooler/policy#Sum_up_per_march_2024.
But community would like all versions of Wikinews to change license together so that it is still possible to translate articles into other languages.
So I hope you would also like to update and you are welcome to leave a message on English Wikinews about the change. --MGA73 (பேச்சு) 13:53, 26 மே 2024 (UTC)
English Wikinews will upgrade its license to CC-BY-4.0 - will you join us? / ஆங்கில Wikinews அதன் உரிமத்தை CC-BY-4.0 ஆக மேம்படுத்தும் - நீங்கள் எங்களுடன் சேர்வீர்களா?
[தொகு]English Wikinews has finally completed the discussions about a license upgrade and will upgrade to CC-BY-4.0, effective for all edits made from December 16, 2024. You can read about it at en:Wikinews:2024 Copyright license upgrade.
All Wikinews projects manage their processes internally and independently of English Wikinews, but on English Wikinews, we hope that you will also change your license so we can continue to share articles across the different versions of Wikinews.
Arabic Wikinews already upgraded in August 2024, but they chose CC-BY-SA-4.0 (ShareAlike). We know that other Wikinews projects would also like to change.
To complete the change, each Wikinews project needs to file a request on Phabricator. We made one for English Wikinews at Phab:T381421.
If your wiki have already decided to change the license you can also make a request or we can try to add your wiki to the request so the changes can take place at the same time.
If your wiki have not yet decided it is still possible to change the license. But your wiki needs to have a discussion about it.
To coordinate the license change, we need to know if your wiki has already decided or has an existing vote, so please either leave a message here with a link to the vote/result (and ping me please) or add it directly at en:Wikinews:2024_Copyright_license_upgrade/other-Wikinews#Results_all_Wikinews_projects. Even if the result is that you will not upgrade, we would really appreciate knowing.
---
ஆங்கில Wikinews இறுதியாக உரிமம் மேம்படுத்தல் பற்றிய விவாதங்களை முடித்துவிட்டது மற்றும் 2024 டிசம்பர் 16 முதல் செய்யப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் CC-BY-4.0 ஆக மேம்படுத்தும். இதைப் பற்றி மேலும் படிக்கலாம் en:Wikinews:2024 Copyright license upgrade.
அனைத்து Wikinews திட்டங்களும் அவற்றின் செயல்முறைகளை உள்ளார்ந்த முறையில் மற்றும் ஆங்கில Wikinews இல் இருந்து சுயாதீனமாக நிர்வகிக்கின்றன, ஆனால் ஆங்கில Wikinews இல், நீங்கள் உங்கள் உரிமத்தை மாற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், இதனால் Wikinews இன் பல்வேறு பதிப்புகளுக்கு இடையில் கட்டுரைகளை பகிர்ந்து கொள்ள முடியும்.
ஆரபிக் Wikinews ஏற்கனவே 2024 ஆகஸ்டில் மேம்படுத்தியது, ஆனால் அவர்கள் CC-BY-SA-4.0 (ShareAlike) ஐ தேர்ந்தெடுத்தனர். மற்ற Wikinews திட்டங்களும் மாற்ற விரும்புகின்றன என்பதை நாங்கள் அறிவோம்.
மாற்றத்தை முடிக்க, ஒவ்வொரு Wikinews திட்டமும் Phabricator இல் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். ஆங்கில Wikinews க்காக Phab:T381421 இல் ஒன்றை செய்துள்ளோம்.
உங்கள் விக்கி ஏற்கனவே உரிமத்தை மாற்ற முடிவு செய்திருந்தால், நீங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் அல்லது மாற்றங்கள் ஒரே நேரத்தில் நடைபெறுவதற்காக உங்கள் விக்கியை கோரிக்கையில் சேர்க்க முயற்சிக்கலாம்.
உங்கள் விக்கி இன்னும் முடிவு செய்யவில்லை என்றால், உரிமத்தை மாற்றுவது இன்னும் சாத்தியமாகும். ஆனால் உங்கள் விக்கி இதைப் பற்றி விவாதிக்க வேண்டும்.
உரிமம் மாற்றத்தை ஒருங்கிணைக்க, உங்கள் விக்கி ஏற்கனவே முடிவு செய்துள்ளதா அல்லது ஏற்கனவே ஓட்டெடுப்பு உள்ளதா என்பதை அறிய வேண்டும், எனவே ஓட்டெடுப்பு/முடிவு இணைப்புடன் இங்கே ஒரு செய்தியை விடுங்கள் (என்னை பிங் செய்யவும்) அல்லது நேரடியாக en:Wikinews:2024_Copyright_license_upgrade/other-Wikinews#Results_all_Wikinews_projects இல் சேர்க்கவும். நீங்கள் மேம்படுத்த மாட்டீர்கள் என்ற முடிவு வந்தாலும், அதை அறிய நாங்கள் உண்மையில் நன்றி கூறுவோம். --MGA73 (பேச்சு) 20:41, 4 திசம்பர் 2024 (UTC)
CC-BY-4.0க்கு உரிமம் மாற்றம் பற்றிய வாக்கெடுப்பு
[தொகு][See English version at en:Wikinews:2024_Copyright_license_upgrade/other-Wikinews#Draft_to_a_vote in case the text does not look right - it is translated with a tool]
முந்தைய பதிவில் குறிப்பிடப்பட்டபடி, ஆங்கில Wikinews மற்றும் சில பிற Wikinews இப்போது உரிமத்தை மாற்றியுள்ளன. உங்கள் விக்கி பதிலளிக்கவில்லை, எனவே நான் இங்கே ஒரு வாக்கெடுப்பைத் தொடங்குகிறேன், உங்களும் உரிமத்தை CC-BY-4.0க்கு மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். மேலும் m:Requests for comment/Update standard license for Wikinews ஐப் பார்க்கவும், அனைத்து Wikinews களும் ஒரே உரிமத்தை (CC-BY-4.0) கொண்டிருப்பதை உறுதிசெய்ய, நான் Wikinews களின் இயல்புநிலை உரிமத்தை மாற்ற பரிந்துரைக்கிறேன், அவர்கள் வேறு உரிமத்தைத் தேர்ந்தெடுக்காவிட்டால்.
வாக்கெடுப்பு 2025 ஜனவரி 20 அன்று முடிவடைகிறது, மாற்றம் 2025 பிப்ரவரி 1 அன்று நடைமுறைக்கு வரும். 100க்கும் மேற்பட்ட நல்ல திருத்தங்கள் உள்ள அனைத்து பயனர்களும் வாக்களிக்கலாம் (பேச்சுப் பக்கங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன).
வாக்கெடுப்பு காலத்தில் எதிர்ப்பு இல்லாதது அல்லது கருத்துக்கள் இல்லாதது தானாகவே ஆதரவாகக் கருதப்படாது. மாறாக, பங்கேற்பாளர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த வாய்ப்பு பெற்றனர் என்பதைக் காட்டுகிறது. எதிர்ப்புகள் எழுப்பப்படாவிட்டால், கருத்துக்கணிப்பு 'தொடரவும்' நடவடிக்கையாக இருக்கும், எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை என்றால் (படி m:Requesting wiki configuration changes).
இந்த வாக்கெடுப்பு சரியான இடங்களில் அறிவிக்கப்படுவதை உறுதிசெய்யவும், உரை துல்லியமாக மொழிபெயர்க்கப்படுவதை உறுதிசெய்யவும் எந்த உதவியையும் நான் பாராட்டுவேன். பிழைகள் இருந்தால், தயவுசெய்து அவற்றைச் சரிசெய்ய உதவுங்கள். நான் பரிந்துரைக்கும் விதிகளிலிருந்து உள்ளூர் கொள்கை வேறுபட்டால், தயவுசெய்து அதை விரைவில் சரிசெய்யவும்.
உரிமங்கள் பற்றிய சில தகவல்கள்
- பதிப்பு 4.0 அதிகமாக சர்வதேசமாகவும், பிற உரிமங்களுடன் அதிகமாக இணக்கமாகவும், பதிப்பு 2.5 உடன் ஒப்பிடும்போது அதிகமாக வாசிக்கக்கூடியதாகவும் உள்ளது.
- உரிமம் பெற்ற உரையை 2.5 இல் இருந்து 4.0க்கு நகலெடுக்க முடியும், ஆனால் மாறாக முடியாது.
- உரிமம் பெற்ற உரையை BY இல் இருந்து BY-SAக்கு நகலெடுக்க முடியும், ஆனால் மாறாக முடியாது.
- நீங்கள் 4.0க்கு மேம்படுத்தாவிட்டால் ஆங்கில Wikinews இல் இருந்து கட்டுரைகளை மொழிபெயர்க்க முடியாது.
விருப்பம் 1: CC-BY-4.0க்கு மாற்றம் (CC BY 4.0) [இரண்டு பிறவற்றில் ஒன்று அதிக ஆதரவைப் பெறாவிட்டால் இயல்புநிலை]
[தொகு]விருப்பம் 2: CC-BY-SA-4.0க்கு மாற்றம் (CC BY-SA 4.0)
[தொகு]விருப்பம் 3: CC-BY-2.5 உடன் தொடரவும்
[தொகு]விவாதம்
[தொகு]உங்கள் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். --MGA73 (பேச்சு) 11:47, 19 திசம்பர் 2024 (UTC)