திருக்குறள் தெளிவு 8Ğ அதிகாரம் 39 இறைமாட்சி $1 படை குடி விளைபொருள், அமைச்சு, நட்பு, அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண்சிங்கம் போன்றவன், 382 அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவுதல், அறிவுடைமை,ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே வேந்த்ருக்கு இயல்பாகும். 383. காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை என்ற மூன்று பண்புகளும் நாடாளும் மன்னனுக்கு நீங்காமல் இருத்தல் வேண்டும். 384, அறநெறியிலிருந்து வழுவாமை, நெறியல்லாதவற்றை நாட்டைவிட்டு நீக்குதல் விர்த்தில் குறைவுபடாத மானமுடைம்ை ஆகிய மூன்றும் உடையவனே சிறந்த அரசனாவான். 385. பொருள் வரும் வழிகளை உண்டாக்கலும், வந்த பொருள்களைச் சேமித்தலும், சேமித்த பொருள்கள்ளப் பாது காத்தலும், நாட்டின் நலத்திற்குத் தக்கப்படி செலவிடுதலும் வல்ல வனே அரசனாவன். 385. கண்டலுக்கு எளியவனாய், கடுஞ்சொல் கூறாதவனாய், அரசன் திகழ்ந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும், 38. இனிமையான சொற்களோடு தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசன் தன் மனத்தில் கருதியவாறே இவ் வுலகமும் அமையும், 88. முறைமையோடு ஆட்சிபுரிந்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன் அம் மக்களுக்குத் தெய்வம் என்று மதிக்கப்படும் உயர்நிலையில் வைத்து பேற்றப்படுவான். 389. குறை கூறுவோரின் சொற்கள் கேட்பதற்கு வெறுப்பாக இருந்தாலும் பொறுக்கின்ற பண்புடைய அரசனின் குடைநிழலில் உலகம் தங்கும். 390. கொடை இரக்ககுணம், செங்கோல் முறை, தளர்ந்த குடிகளைக்காத்தல் ஆகிய நான்கையும் சிறப்பாக உடைய அரசன் அரசர்க்கெல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.
பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/96
Appearance