இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ? பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ? - உரைச் சிறப்புப்பாயிரம் வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக்கு ஒருநீதி: பேராசிரியர் சுந்தரம் பிள்ளை மக்களுக்கு மாநிலத்தில் வாழ்க்கை வழிகளெல்லாம் சிக்கலறக் காட்டிநலம் செய்நூலாம் - மிக்கபுகழ்ச் செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே சிந்தனை செய்வாய் தினம். - கவிமணி தேசிகiநாயகம் பிள்ளை