உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் தெளிவு 270 அதிகாரம் 33 ஊடலுவகை 132. காதல்ரிடம் தவறு எதுவும் இல்லையாயினும் அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்யவல்லது: - - - 1322. பிணங்குதலால் உண்டாகின்ற சிறிய துன்பம் அந்த நேரத்தில் அவர் காட்டும் நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருப்பினும் பின்னர்ப் பெருமை பெறும், 1323 நிலத்தோடு நீர் பொருந்திக் கலந்தாற்போன்ற அன் புடைய காதலரிடத்தில் ஊடுவதைவிட இன்பம் தருகின்ற தேவருலகம் உள்ளதோ? * . . 324. காதலரைத் தழுவிக் கொண்டு விடாம லிருப்பதற்குக் காரணமான பிணக்கில், என்னுடைய உள்ளத்தை உடைக்கவல்ல படையும் தோன்றுகின்றது. 1325. தவறு இல்லாதபோதும் பிணக்கிற்கு ஆளாகித் தாம் விரும்புகின்றமகளிரின் மென்மையானதோள்களைப் பிணக்கினால் சிறிது நீங்கியிருக்கும்போது பிணக்கிலும் ஓர் இன்பம் உள்ளது. 1326. உண்பதைவிட முன் உண்ட உணவு செரிப்பது இன்பமாகும். அதுபோல காமத்தில் கூடிப் பெறும் இன்பத்தைவிட ஊடிப் பெறும் இன்பமே சிறந்தது. 1327. ஊடல் களத்தில் தோற்றவரே வெற்றிபெற்றவர் அந்த உண்மை, பிணக்கு தெளிந்தபின், அவர் கூடி மகிழும் நிலையில் தெளிவாகக் காணப்படும். . . . . . . t328. நெற்றி வியர்க்கும். படியாகக் கூடுவதில் உளதாகும் இனிமையைப் பிணங்கியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவேனா? - . 1329. ஒளிவீசும் இழையையுடைய காதலி பிணங்குவாளாக, அதனைத்தனிக்கும்பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீள்வதாக - * * 1339. காமநுகர்ச்சிக்கு இன்பம் தருவது பிணங்குவதாகும். பிணக்குமுடிந்தபின் இருவரும் கருத்தொன்றிக் கூடித் தழுவுதலை யும் பெற்றால்,அஃது அதனினும் மிகுந்த இன்பமாகும்.