திருக்குறள் தெளிவு 222 அதிகாரம் 109 தகையணங்குறுத்தல் 1081. இந்த உருவம் தேவப் பெண்ணோ? சிறந்த அழகு மயிலோ? கனமான குழையணிந்த மானிடப் பெண்னோ? புரியா மல் என் நெஞ்சம் மயங்குகின்றதே! 1082 என்னை அவள் நோக்கினாள் என் பார்வைக்கு எதிரே பார்த்தாள் அந்தப் பார்வை தானே தாக்கி வருத்தும் அணங்கு ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது. 1983 இயமன் என்று சொல்லப்படுவதை இதன் முன்னர் அறியேன் இன்று நான் அதனை அறிந்து விட்டேன். அஃது அழகிய பெண் தன்மையுடன் போர் செய்யும் கண்களையுடையது. 1084. தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத் தோடு பெண்தன்மையுடைய இந்தப் பேதைக்குக் கண்களும் ஒன்றொடொன்று மாறுபட்டுள்ளனவே! 10.85, இந்த இளமங்கையின் பார்வை வருத்தும் கூற்றமோ? பிறளுங்கண்ணே? மருளும் பெண்ணோ? இந்த மூன்று தன்மை யையும் தன்பால் கொண்டுள்ளதே! 1986, வளைவான இவள் புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், அவற்றைக் கடந்து. இவளுடைய கண்களும் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்ய மாட்டாவே 1887, இந்த மாதின் சாயாத கொங்கைகளின்மேல் அணிந்த ஆடை மதம் கொண்ட ஆண் யானையின்மேல் இட்ட முகபடம் போன்றது. 1088 போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்குக் காரணமான என்வலிமை ஒளிபொருந்திய இவள் நெற்றிக்குத் தோற்றுஅழிந்ததே. 1989,பெண்மானினதுபோன்ற இளமைப்பார்வையும்,நாணமும் உடைய இவளுக்கு ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைப் பூட்டி அழகு படுத்துவது ஏனே? 1090. உண்டவருக்கு மட்டிலும் மகிழ்ச்சியை உண்டாக்கும் கள்ளைப்போலல்லாமல் காமத்தைப்போல் கண்டவருக்கு மகிழ்வை உண்டாக்கும் ஆற்றலுடையது அல்லவே!
பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/235
Appearance