திருக்குறள் தெளிவு 92 அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல் 44. அத்தின் தன்மைகளை உணர்ந்தவராய்த் தன்னை விட முதிர்ந்த அறிவுடையவரது நட்பினைக் கொள்ளும் வகையறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ள வேண்டும் , 442 நாட்டிற்கு வந்துள்ள துன்பத்தை நீக்கி, மேலும் துன்பம் நேராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ள வேண்டும். 43. டெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராக்கிக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகள் எல்லாவற்றிலும் அரிதான பெரும்பேறு ஆகும். 44. தம்மைவிட அதிவு முதலியவற்றால் பெரியோராக உள்ளவர்கள் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடந்து வருதல் வல்லமை எல்லாவற்றிலும் தலையாய வலிமையாகும். 445. தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவன் அவரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். 446 தகுதியுள்ள பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தன் நடந்து கொள்ள வல்லவனுக்குப் பகைவர் செய்யக் கூடிய தீங்கு ஒன்றும் இல்லை. ? கடிந்து அறவுரை கூறித் திருத்தவல்ல பெரியோரின் துணை கொண்டு நடப்புவரை எவர்தாம் கெடுக்க வல்ல ஆற்ற லுள்ளவர்? 48. கடிந்து அறவுரை கூறும் பெரியோரின் துணையில்லாத புதுகப்பற்ற மன்னன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாதபோது தானாகவே கெட்டழி:ன். 449.முதல் இல்லாத வணிகருக்கு அதனால் வரும் இலாபமும் இல்லை. அதுபோல் தம்மைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலையேறும் இல்லை. 45), நல்லவணகிய பெரியோரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக் கொள்வதைவிடப் பதின்மடங்கு தீமை பயப்பதாகும்.
பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/107
Appearance