உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தாய்மை,

இடி இடித்தால் இந்திரனைப் போற்றுவதும் பிறவும் அச்ச -உணர்வு காரணமாக அமைந்தனவே. அப்பரடிகள்,

“ அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும்

நெஞ்சம் வாழி கினைமின்

ான்னக் கூறி மக்களைச் சமய வாழ்வில்-வழிபாட்டில் ஆற்றுப்படுத்துகிறார். முதலில் அஞ்சியே வழிபாடு தொடங் கிற்று என்பதைக் காட்ட அதை முற் கூறியுள்ளார். மேலை நாட்டிலும் அச்ச வழிபாடு உள்ளதை வரலா காட்டுகிறது. . W

மனிதன் உணர்வு பெறப் பெற-அவன் அறிவு வளர் ‘வுளரச் சமய வழிபாட்டில் மாறுதல் கொள்ள முனைந்தான். இல்லற வாழ்வும் இணைந்த சமுதாய வாழ்வும் அவனுக்குப் பழக்கமான பொழுது தா ன் பிறரிடம் காட்டும் அன்பினைக் கடவுள் வழிபாட்டிலும் கண்டான். வளர வளர அன்பே கடவுள்’ என்ற உணர்வு அவன் உள்ளத்தில் அரும்பியது. இறை���னையே அன்பாகக் காணும்-காட்டும் சமய வழிகாட்டிகள் தோன்றினர். இடரினும் தளரினும் இறைவனை அன்பால் வழிபட்டால் அவை நீங்கி, நலம் பெருகும் என்று நம்பினான். அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. எல்லாச் சமயங்களும் இந்த அடிப்படை உணர்விலேயே தம் பாதையை அமைத்துக் கொண்டன. ‘அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்; அன்பே -சிவமாவது யாரும் அறிகிலார்’ என்று திருமூலர் சிவன் மேல் சார்த்திக் கூறுவது போன்று எல்லாச் சமயங்களும் அன்பினையும் நம்பிக்கையினையும் தம் அடித்தளங்களாகக் கொண்டன. - - பின், அந்த அன்பு கடவுள் மாட்டு மட்டுமன்றி, அந்த இறைவன் தங்கியுள்ள எல்லா உயிர்களிடமும் பரவி வளர வேண்டியதைச் சமயங்கள் உணர்ந்தன. எவ்வுயிரும் பராபரன் சன்னிதியதாகும், இலங்கும் உடல் அனைத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/98&oldid=684918" இலிருந்து மீள்விக்கப்பட்டது